10-03-2023, 01:59 PM
(This post was last modified: 10-03-2023, 02:09 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-03-2023, 12:35 PM)Mecatran Wrote: நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நான் ஒரு கதை எழுதினேன் அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக இல்லை, பாராட்டிய விமர்சனங்கள் அதிகம், விரைவாக எழுதி முடித்து விட்டன அதை ஒரு ஆறு மாதம் இழுத்து....,.... எழுதி இருந்தால் அல்லது பாதியில் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது நான் நினைக்கிறேன்,இருந்தும் அதைப் படிக்கும் நண்பர்கள் லைக் கூட போடுவதில்லை அதனால் தற்போது எழுத வேண்டாம் நினைத்து ஒதுங்கி இருக்கிறேன் அடுத்து எழுதுவது பற்றி யோசிக்கலாம், கதையின் பெயர்: "துரோகம் "
நண்பா ,நான் 3 மாத காலமாக என்னுடைய கதையை எழுதி வருகிறேன்.என்னிடம் உள்ள ஒரு one line ஸ்டோரியை வைத்து கொண்டு அன்று என்ன எழுத தோன்றுகிறதோ அதை மட்டுமே எழுதுகிறேன்.நான் நாளை என்ன update செய்வேன் என்று எனக்கு தெரியாது.நான் எழுதும் புதிய பக்கங்களுக்கு மட்டுமே likes கிடைக்கும்.பழைய பக்கங்களை படித்தாலும் வாசகர்கள் கருத்து தெரிவிப்பது இல்லை.நிறைய பேர் படித்தாலும் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து கருத்து தெரிவிப்பார்கள்.நீங்கள் எழுதும் கதை ஒரேயடியாக எழுதி முடித்து பதிவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பதிவிட முயற்சி செய்யுங்கள்.நீங்கள் எதிர்பார்க்கும் likes and comments கிடைக்கும்.இந்த தளத்தில் அதிகம் views and comments உள்ள கதைகள் எல்லாம் நீண்ட நாட்களாக வரும் கதைகள் தான்.ஆனால் அதே நேரத்தில் நல்ல கதையாகவும் இருக்க வேண்டும்.நல்ல எழுத்தாளர்கள் எல்லோரும் வாரம் ஒருமுறை மட்டுமே பதிவு செய்கிறார்கள்.அதனால் அவர்களிடம் update கேட்டு நிறைய comments வருகிறது.நானே வெறுத்து PART -2 வுடன் completed என்று போட்டுவிட்டு கதையை நிறுத்தி விட்டேன்.பின் சில வாசகர்கள் கேட்டதற்கு இணங்க part -3 START செய்து உள்ளேன்.உங்கள் மனதை மாற்றி கொண்டு எழுத தொடங்கவும்.உதாரணமாக தக்காளி விளைச்சல் அதிகமாக வந்து மார்கெட் வரும்போது அதன் விலை கடுமையாக குறையும்.தக்காளி நல்ல தக்காளி தான் ஆனால் தேவைக்கு அதிகமாக வரும் போது demand குறைவதால் விளைவித்தவருக்கு நஷ்டம்.இங்கு நீங்கள் தான் உங்கள் கதைக்கு demand ஏற்படுத்த வேண்டும்.எப்பொழுதுமே எளிதில் கிடைக்கும் பொருள் தங்கமாக இருந்தாலும் அதன் மதிப்பு நமக்கு தெரிவதில்லை.நாம் கஷ்டபட்டு சம்பாதித்தால் தான் ஒரு வாய் சோறு கூட அமிர்தமாக தெரியும்.உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.சாரி நீண்ட பதிவாக போய் விட்டது.