Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஸ்டாய்னிஸ் பந்துவீச்சைக் காலி செய்து ஆஸி.யை பிரமிக்கச் செய்த ரஷீத் கான்: ஆப்கானிஸ்தான் 207 ரன்களுக்கு மடிந்தது
[Image: rashid-khanjpg]பந்தை சிக்சருக்கு விரட்டும் ரஷீத் கான். | ராய்டர்ஸ்.

பிரிஸ்டலில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 4ம் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 207 ரன்கள் என்ற மரியாதைக்குரிய ஸ்கோரை வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எடுத்தது.
பாகிஸ்தான், இலங்கை அணிகள் காட்டாத ஒரு அருமையான ஃபைட்டிங் ஸ்பிரிட்டை ஆப்கான் அணி இன்று காட்டியது.
குல்பதீன் நயீப் (31), நஜிபுல்லா ஸத்ரான் (51) ஆகியோர் 77 பந்துகளில் 83 ரன்களைச் சேர்த்த பிறகு இறங்கினார் உலகப்புகழ் பெற்ற லெக் ஸ்பின்னர் ரஷீத் கான்.
2 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த போது 36வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீச வந்தார்.  அதுவரை ஸ்டாய்னிஸ் 6 ஓவர்கள் வீசி 1 மெய்டனுடன் 16 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தியிருந்தார்.
சரி 7வது ஓவரை இவரிடமே கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஏரோன் பிஞ்ச் கருதிக் கொடுக்க அது வேறு ஒன்றாக மாறி ஸ்டாய்னிசின் அனாலிசிஸையே காலி செய்யும் ஓவராக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
முதல் பந்தை ஸ்டாய்னிஸ் வைடாக வீச 1 ரன் கிடைத்தது. 2வது பந்து ஸ்டாய்னிஸ் வீச ஓடி வர ரஷீத் கான் அவரை எதிர்நோக்கி மேலேறி வந்தார், பந்து வாகாக மாட்ட மிகப்பிரமாதமாக பார்க்க ஒரு சேவாக் ஷாட் போல் லாங் ஆன் மேல் சிக்சருக்கு ஒரே தூக்குத் தூக்கினார், ஸ்டாய்னிஸ் லேசாக அதிர்ச்சியடைந்தார்.
பிறகு இதே ஓவரின் 4வது பந்தில் மீண்டும் எதிர்நோக்கி மேலேறி வந்து மிட்விக்கெட்டில் ஒரு நான்கு ரன் பவுண்டரி விளாசினார் ரஷீத் கான். அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் ஆக அதனை ஏதோ மிட் ஆஃபில் ஹூக் ஆடுவேன் என்பது போல் ஒரே சாத்து சாத்தி பவுண்டரிக்கு அனுப்பினார், ஸ்டாய்னிஸ் இப்போது லேசாகக் கலக்கமடைந்தார்.
கடுப்பான ஸ்டாய்னிஸ் அவர் வேகத்துக்கு ஷார்ட் பிட்ச் பந்தை வீச முடிவெடுத்திருக்கக் கூடாது, ஆனால் அந்தப் பந்து நன்றாகத்தான் பிட்ச் ஆகி எழும்பியது, ஆனால் சற்றும் தளராமல் அனைவரும் பிரமிப்படையும் விதமாக தலைக்கு வந்த பந்தை தலைப்பாகையோடு போகட்டும் என்று விடாமல் மட்டையை தூக்கி ஒரு ஹூக் ஷாட் ஆடினாரே பார்க்கலாம் ஸ்கொயர்லெக்கில் 7-8 வரிசைகளைத் தாண்டி போய் விழுந்தது சிக்ஸ். ஒரே ஓவைர்ல் 21 ரன்கள்.
6-16-2 என்று இருந்த ஸ்டாய்னிஸ் பந்து வீச்சு 7-37-2 ஆகி விட்டது.  பிறகு மீண்டும் ஆடம் ஸாம்பா பந்தை மேலேறி வந்து நேராக ஒரு சிக்சர் தூக்கினார் ரஷீத், அடுத்த பந்தை கொஞ்சம் நிதானமாக சிங்கிளுக்குத் தட்டியிருக்கலாம் ஆனால் அவர் ஒரு பெரிய ஸ்வீப்புக்கு போய் எல்.பி.ஆனார். ரிவியூவும் வீணானது.
ரஷீத் கான் 11 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்தார் ரஷீத் கான், ஸ்ட்ரைக் ரேட் 245.45.  இந்த ஓவரை ஸ்டாய்னிஸ் மறக்க மாட்டார்.
பாகிஸ்தான், இலங்கை அணிகள் எந்த வித ஃபைட்டும் காட்டாமல் ஆடி சரணடைந்த நிலையில் ஆப்கன் அணி முதுகெலும்புடன் ஆடி 77/5 என்ற நிலையிலிருந்து 207 ரன்கள் எடுத்தது
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 02-06-2019, 10:09 AM



Users browsing this thread: 85 Guest(s)