04-03-2023, 10:47 AM
(03-03-2023, 11:32 PM)Vinothvk Wrote: அது என்னமோ reader இப்போ எல்லாம் இந்த website வரவே வெறுப்ப இருக்கு.
முன்னாடி லாம் update வருமா னு கதை ezhuthittu wait பண்ணுவ இப்போ வர கதை படிக்க வெறுப்பு தான வருது
உண்மை... உண்மை... சத்தியமான உண்மை.
ஆதி என்று ஒன்று இருந்தால் அந்தம் என்ற ஒன்று கட்டாயம் இருக்கும்... ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்று நிச்சயமாக இருக்க வேண்டும்... துவக்கம் அல்லது தொடக்கம் இருந்தால் முற்றும் என்பதும் கண்டிப்பாக வேண்டும்...
முன்னால் எல்லாம் கம்ஷாட் பேனாவில் மை நிரப்பாமல், வெடி மருந்து நிரப்பி எழுதி வந்தார்... ஒவ்வொரு அத்தியாயமும் அனல் பறக்கும்... ஒவ்வொரு வரியையும் தீப்பொறி பறக்க எழுதுவார்... ஒவ்வொரு எழுத்தையும் அணுகுண்டு வீசுவது போல வீசுவார்...ஆனால் இப்போது?...
குறிப்பாக ராஜேஷ் நுழைந்து விட்ட பிறகு, மழையில் நனைந்து நமுத்துப் போன ஊசி வெடி...
தினத்தந்தி நாளிதழில் என் தாத்தா பாட்டி படித்து விட்டு, பிறகு என் அப்பா அம்மா படித்து விட்டு, இப்போது நானும் சிறுவயதில் இருந்தே படித்து வரும் "கன்னித்தீவு" சிந்துபாத் கதையை தொடர்ந்து படிப்பது போல் தெரிகிறது...