28-02-2023, 12:18 PM
மாடம் மேரியும் - பியரே குயுரியும்
காதலித்து மணம் செய்து திருமண வாழ்க்கை நடத்தி சாதனை செய்த காதல் ஜோடியாவர்கள்.இவர்களின் கண்டுபிடிப்புக்கள் ஏராளம்.போலந்து நாட்டில் பிறந்த மரியா குளோடோவ்ஸ்கா
என்ற மேரி, பியரே குயுரியை திருமணம் செய்து பௌதீக துறையில் இருவரும் இணைந்து செயலாற்றிய ஜோடிகளாவர்.இவர்களின் காதல் வெற்றி.
பாரிஸ் - ஹெலேனா,
இன்று வரும் தமிழ் படங்களைப் பார்த்தாரோ என்னவோ பாரிஸ், கிரேக்க அழகி இராணி ஹெலேனாவை கடத்தி சென்று விட்டார். ஹெலேனாவை மீட்டெடுக்க போர் தொடுத்தான் அரசன். டொர்ஜான்(Trojan war) போர் எனப்படும் போரில் பாரிஸ் கொலை செய்யப்படவே இராணி ஹெலேனா கட்டாயத்தின் பேரில் அரசனுடன் நாடு திரும்பினாள். பாரிஸ் கொல்லப்பட்டது தெரிந்தும் ஒரு நாள் வருவான் என காத்திருந்தாள்,காத்திருந்தாள்,காத்திருந்தாள்.......................
ஓடிசாஸ் - பெனிலோப்,
மேலே சொன்ன ரோஜான் யுத்தத்தில் பெரும் பங்காற்றிய வீரன் ஓடிசஸ்(ஹோமரின் ஓடிசி காவியம்) மனைவி பெனிலோப், திருமணத்தின் பின் கணவனுக்கு துரோகம் இழைக்காது பத்தினியாக வாழ வேண்டும் என்பதற்கு சான்றாக வாழ்ந்தவள்,இருபது வருடங்களாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தவள்.இந்த திரோஜன் யுத்தத்தில் தான்,மிகப் பெரிய போர் தந்திரமாக திரோஜன் குதிரையை களம் இறக்கி வெற்றி கொண்டார்கள்.
ஒர்பியுஸ் – யுரிடிஸ்
கிரேக்க பாடகனும் அவன் மனைவியும் வாழ்ந்த வாழ்க்கை, சாவித்திரி சத்தியவான் கதையை நினைவூட்டுகிறது. சத்தியவான் உயிருக்காக, சாவித்திரி இயமனுடன் போராடியதாக சொல்வது போல், ஒபியூஸ் தன் மனைவி யுரிடிஸ் உயிரை திரும்பிப் பெற கீழுலகம் வரை சென்று, தன் பாட்டால் அங்குள்ளவர்களைக் கனிய வைத்தான்.அந்த பாட்டால் கவரப்பட்டு, மீண்டும் உலகுக்கு செல்லும் வரை பின்னால் வரும் மனைவியை திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், உயிர் கொடுக்கப்பட்ட போது,மேல் உலகை வந்தடையும் போது சந்தேகம் கொண்டு பார்த்ததனால், அவளை மீண்டும் அடைய முடியாமல் போய் விட்டது.
அபர்லாத் – ஹேலோய்ஸ்
பிரான்ஸ் நாட்டில் மத போதகரான அபர்லார்ட் மதக்கல்வி சொல்லி கொடுக்க சென்று, மாணவியான ஹேலோய்ஸ் ஐ காதலித்து,வளர்த்த மாமனுக்கு தெரிய வரவே, நம் சினிமாப் போல் காடையர்களால் அடித்து நொறுக்கப்பட்டு துரத்தப்பட்டார்.காதலி ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் கூட கட்டாயமாக பெண் துறவியாக்கப்பட்டார்(nun)காதலர்கள் பிரிக்கப்பட்டாலும் உணர்வு மறையவில்லை.அவர்கள் பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்கள் இன்றும் உன்னதமாக பேசப்படுகிறது.இருவரும் கடைசி வரை துறவியாகவும்,பெண் துறவியாகவும்(Monk and Nun) வாழ்ந்தார்கள்.அவர்களின் காதல் உணர்வு மறைந்ததா?
காதரின் -கிரிகோரி
ரஸ்சிய சார் மன்னனின் மனைவியான காதரின், தனக்கு காவலாக இருந்த போர் வீரன் மேல் காதல் கொண்டு,அவன் துணையுடன் புரட்சி நடத்தி ஆட்சிக்கு வந்ததும்,தன் கணவனான சார் மன்னனை விஷம் வைத்து கொலை செய்ய வைத்தது காதலுக்காகவா இல்லை ஆட்சி அதிகாரத்திற்காகவா என்ற கேள்வி இருந்தாலும்,கிறிகோரிக்கு பெரிய பதவி கொடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டாள். அவன் இறந்த போது அவன் பிரிவால் ஏற்பட்ட மன உளைச்சலிருந்து அவள் கடைசி வரை மீள முடியவில்லை.காதல் படுத்தும் பாடு?
கேட்ரூட் - அலிஸ்
இரண்டு பெண்களின் காதல் கதை இது.அமெரிக்காவில் பிறந்து தன் கல்வியை தொடர முடியாமல் போகவே, சகோதரனுடன் பிரான்ஸ் ற்கு வந்த பிரபலமான எழுத்தாளரும், பிக்காசோவின் நண்பருமான ஜேர்மன்-யூத இன பெண்ணான கேட்ரூட்,தனது உதவியாளராக, டைபிஸ்ட்டாக,சமையல்காரியாக இருந்த அமெரிக்க யூத இன அலிஸ்சை வாழ்க்கை துணையாக்கிய இவர்கள் காதல், பாரிஸ்ஸில் மலர்ந்து அமெரிக்காவில் வளர்ந்து மீண்டும் பாரிஸ்ஸில் விருட்சமாகியது. கேற்றூட்டின் நிழலாக வாழ்ந்த அலிஸ் கடைசி வரை ஜோடியாகவே வாழ்ந்தார். ஓரின சேர்க்கையின் (Lesbian)ஜோடியாக உலகை வலம் வந்த இவர்கள் இறுதி வரை பிரியாமல் வாழ்ந்தது அதிசயம் தான்.
பிரின்ஸ் எட்வர்ட் - வல்லிஸ் சிம்ஸ்சன்.
பெரிய பிரித்தானியா,வட ஐயர்லாந்தின் அரசராக பத்து மாதங்களே ஆட்சி புரிந்த எட்வாட், இரண்டு முறை திருமணம் புரிந்து விவாகரத்து செய்த அமெரிக்க பெண்ணான வல்லிஸ் சிம்ஸனை காதலித்து மணம் செய்து, முடி துறந்தார். தன் காதலுக்காக முடி துறந்த இவரின் மனைவி வல்லிஸ், வேறு சிலருடன் தொடர்பு வைத்திருந்ததாக பல சர்ச்சைகள் இன்றும் உள்ளன.
போகொகோண்டாஸ்- சிமித்,
அமெரிக்க இந்திய பெண்ணான போகொகோண்டாசும் அங்கு குடியேற வந்த சிமித் என்ற ஆங்கிலேயனுக்கும் இடையில் மலர்ந்த நட்பு அதிக பலனைத் தரவில்லை. போகொகோண்டாஸ் இரண்டு முறை சிமித்தின் உயிரைக் காப்பாற்றினாள்.தொடர்ந்து வந்த ஆங்க்கிலேயரால் வஞ்சிக்கப்பட்டதும்,சிமித் இறந்து விட்டான் என்று பொய் உரைக்கப்பட்டதும் அதனால் அவர்கள் நட்பு காணாமல் போக, பின்னர் அவ்ள் ரெபேக்க என்ற பெயருடன் மதம் மாறி ஜோன் ரோல்ப் என்பவனை மணந்து கொண்டாள். பின்னர் அவள் பிரிட்டனுக்கு சென்ற போது இறந்ததாக கூறப்பட்ட சிமித்தை கண்டு அதிர்ச்சியுற்று கல்ங்கினாள்.அதன் முடிவு ஆறாத் துயருடன் வாழ்வை முடிக்க நேர்ந்தது.
Dr,சிவாஸ்கோ-லாரா,
நோபல் பரிசு பெற்ற இந்த நாவலில் வரும் சிவாஸ்கோ வளர்ப்பு சகோதரியை மணம் முடிக்கிறார். லாரா தன் தாயின் காதலனுடனும் தொடர்பு கொள்கிறாள்..இதை அறிந்த தாய் அமெலியா தற்கொலை முயற்சிக்கு சென்று காப்பாற்றப்படுகிறாள்.இந்த காதல் தொடர்பை முடிவுக்கு கொண்டு வர,லாரா தன் பள்ளித் தோழன் அண்டிபோவை மணம் முடிக்கிறாள்.பின் சிவாஸ்கோவும் லாராவும் மருத்துவமனையில் ஒன்றாக பணி புரிய வரும் போது காதல் வசப்படுகிறார்கள்.அப்போது லாராவின் கணவன் அண்டிபோவ் திரும்புகிறான். சிவாஸ்கோவுடன் பேசியும்,பிரச்சனை முடிவுக்கு வராதென்ற நிலையில் அன்று இரவே லாராவின் கணவன் அண்டிபோவ் தற்கொலை செய்கிறான். இப்போ யார் வருகிறான்?லாராவின் தாயின் காதலன் மீண்டும் குறுக்கிடுகிறான்.ஐயையோ தலையை சுற்றுகிறது. வேண்டுமானால் நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதை விட துஷ்யந்தான் சகுந்தலையும்,நளன் தமயந்தியும்,கோவலன் மாதவியும், மணிமேகலை மீது ஒருதலைக் காதல் கொண்ட உதயகுமாரனையும் நாம் அறிவோம்.
இராமன் - சீதை,
மகாத்மா காந்தியே இராமனை ஒரு சாதாரண மனிதனாகவே மதிக்க மாட்டேன் என்று சொல்லி விட்ட பின்,நான் எப்படி இந்த ஜோடியை காதல் ஜோடி என்று சொல்ல முடியும்.காதலில் சந்தேகம் வந்தால் அது உண்மைக் காதல் அல்ல. இராமன் சந்தேகப்பட்டான்,தீ மூட்டி தீக்குளிக்க வைத்தான்.கர்ப்பிணி சீதையை இரக்கமின்றி தனியாக காட்டிற்கு அனுப்பினான்,சித்திரவதைக்கு உள்ளாக்கினான். நாட்டவரின் கேலிக்கு உள்ளாகி,சந்தேகத்தின் உச்சிக்கே சென்று பைத்தியம் பிடித்து தற்கொலை செய்த ஒருவனை காதலன் என்று சொல்ல முடியாது.(வால்மீகி+இந்தி இராமாயணம்)
காதல் உண்மையானது என்றால் போராடி ஜெயிக்க வேண்டும்.காதலன் காதலியை,காதலி காதலனை ஏதோ காரணங்களை காட்டி ஏமாற்றி பிரிவது காதலா?
ஏமாற்றி பிரிவது அல்லது பிரிப்பது காதலே அல்ல. எந்த நிலையிலும் உடனிருப்பதே காதல் என்று கூறி எனக்கு வாய்ப்பளித்த நல் இதயங்களுக்கு வணக்கம் கூறி, நன்றி கூறி விடை பெறுகிறேன்.
நன்றி.
வணக்கம்.