23-02-2023, 06:36 PM
பத்து ஆனதும், மொபைலை எடுத்துக் கொண்டு நான் தனியாகப் போக,…
“என்ன மாப்ளே, திவ்யாவுக்கா?” என அரவிந்த் கிண்டலாக கேட்க
“ ம்,….நீ தூங்குடா” என்று சொல்லி வெளியே வந்து திவ்யாவுக்கு கால் பண்ணினேன். கால் கட் ஆனது.
“ஏன்?” உடனே மெஸேஜ்.
“வெயிட்” என திவ்யாவிடமிருந்து மெசேஜ் வர காத்து இருந்தேன்.
2 நிமிடத்தில் கால் வர, “திவ்யா,…”
“சொல்லுங்க. என்ன ஆச்சு? உங்க பிரண்ட்ஸோட காலைலே உங்களைப் பாக்க முடியல. அவங்க கூட நீங்க வரலையா….?”
“ நைட் ரொம்ப நேரம் தூங்கலே. அதனால விடியற்காலை எழுந்துக்க முடியலை. தூங்கிட்டேன். லேட்டாதான் எந்திரிச்சேன்.”
“ஏன்?”
“என்னவோ குழப்பம். நீ வேற நைட்,….”
“ நைட் என்ன?”
“”உனக்கு தெரியலையா?”
“இல்லியே,…”
“நைட் கடைசியா என்ன பண்ணினே?” என்று கேட்டதும் சிரித்தாள்.
“அதான் பிரச்சினையா? அது சும்மா ஜாலிக்கு.”
எதையோ சீரியஸாக சொல்வாள் என்று காத்திருந்த எனக்கு சப் என்றானது. நான் மௌனமானேன்.
“என்னங்க,….”
“சொல்லு திவ்யா.”
“நாளைக்கு உங்க கிட்டே முக்கியமான விஷம் ஒன்னு பேசணும். நீங்க உங்க டிபார்ட்மென்ட் முன்னால எப்பவும் நிக்கிற இடத்துல காலைலே 9 மணிக்குன் நில்லுங்க. நான் அங்கே வர்றேன். பக்கத்துல உங்க ப்ரண்ட்ஸ் இல்லாம பாத்துக்கோங்க.”என்று சொல்லி போனை கட் செய்தாள்
எனக்கு மனசுக்குள்ளே ஒரே குடைச்சல். என்ன சொல்லப் போகிறாள்? என்ன அப்படி முக்கியமான விஷயம் சொல்லப் போகிறாள்? என்று நினைத்து நினைத்து எனக்கு மண்டை வெடிப்பது போல இருந்தது.
அடுத்த நாள் காலை, குளித்து நீட்டாக ட்ரெஸ் செய்து, திவ்யா சொன்னது போல எங்கள் டிபார்ட்மென்ட்டுக்கு, எதிரே இருந்த மரத்தடியில் நின்றிருந்தேன். என் கூட வந்த ஃபிரண்ட்ஸையும் ஏதோ காரணம் சொல்லி போகச் சொல்லி விட்டேன்.
“ம்,…அவன் ஆள இன்னைக்கு தனியா மீட் பண்ணி ரெண்டு பேரும் ஏதாவது முக்கியமான விஷயம் பேசுவாங்க போல,…” நாம ஏன் நந்தி மாதிரி? அவன் கூட இருக்கணும்? எப்படியும் நாளைக்கு தெரிஞ்சிடப் போகுது “ என்று பேசியபடியே அரவிந்தும், கிரணும் போய் விட, சில நிமிட்த்தில் தூரத்தில், நித்யா மட்டும் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
திவ்யா அவளுடன் வராதது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. நித்யா என்னை நோக்கி வேக வேகமாக வர, திவ்யாவும், கிரணும் இல்லாத நேரத்தில் நித்யாவுடன் பேசக் கூடாது என்று முடிவு செய்து அந்த இடத்தை விட்டு நான் நகர, என்னை ஒரு மாதிரியாக பார்த்துக் கொன்டே நித்யா சென்று விட்டாள்.
கிளாஸுக்குள் போனதும், அரவிந்து, கிரணும் என்னை ஓரு மாதிரியாக பார்க்க, எனக்கு ஒரு மாதிரியாக ஷேமாக இருந்தது. கிளாஸில் என் கவனமே செல்லவில்லை. மனம் திவ்யாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.
மதியம் கேன்டீனுக்கு போகும் போது, கிரணிடம் நித்யா ஏதோ சொல்ல, கிரண் என் அருகில்,வந்து, “டேய்,…. காலைலே நித்யா உன் கிட்டே ஏதோ சொல்ல வந்தாளாமே? நீ ஏன் அவளை தவிர்த்துட்டு போய்ட்டே?”
“டேய்,… திவ்யா வருவான்னு பாத்தேன். அந்த நேரம் பாத்து உன் ஆளு நித்யா வந்தது எனக்கு ஒரு மாதிரியா இருந்தது. திவ்யாவும், நீயும் இல்லாதப்ப, நித்யா கூட பேசறது எனக்கு ஒரு மாதிரியா இருந்ததுனாலதான் அவ கூட பேசறதை நான் அவாய்ட் பன்ணினேன்.”
“அடப் போடா,…எவ்ளோ முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கா,…அவளைப் போய் அவாய்ட் பண்ணிட்டியேடா?”
“அப்படி என்னடா முக்கியமான விஷயம்?”
‘உன் ஆளுக்கு உடம்பு சரி இல்லையாம். அதனாலதான் இன்னைக்கு காலேஜ் வரல.” இதை கேட்டு அதிர்ந்தேன்.
”என்னடா அவ உடம்புக்கு?!!” என்று கேட்டு நான் பதற, “வைரஸ் ஃபீவராம்டா.”
“சரி,…. வாடா இப்பவே போய் பாத்துட்டு வரலாம்.”
“இப்ப பாக்கப் போனா விட மாட்டாங்க. சாயந்திரமா ஹாஸ்டல் வார்டன் கிட்டே பர்மிஷன் வாங்கிட்டு போய் பாரு. ஒருத்தரைத்தான் அலோ பண்ணுவாங்க. அதுவும் நீ காலஜ் ஃபேமஸ்ன்றதால நிச்சயம் அலோ பண்ணுவாங்க. அதனால நீ மட்டும் போ.”
“சரிடா,…”
“டேய்,…. போகும் போது வெறும் கையை வீசிகிட்டு போகாதடா,…அவளுக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது பழம், ப்ரெட்,…இது மாதிரி வாங்கிட்டு போ. இப்ப வா கிளாஸுக்கு போகலாம் என்று சொல்ல மீண்டும் மதியம் கிளாஸுக்கு போனேன்.
என்ன ஆகி இருக்கும்? எப்படி காய்ச்சல் வந்தது. மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டாளா இல்லையா? நேத்து நல்லாதானே இருந்தா? என்று அதையும், இதையும் நினைத்து ஒரே கவலையாக இருந்தது. பாடங்களை கவனிக்கவே முடியவில்லை. லெக்சரர் பாடம் நடத்தி சொல்லிக்கொண்டிருந்த்து எங்கோ யாரோ பொதுக் கூட்ட்த்தில் பேசிக் கொண்டிருந்தது போல இருந்தது.
சாயந்திரம் ஆனதும், கட கடவெண்று காலேஜ் விட்டு கிளம்பி, ஹாஸ்டலுக்கு சென்று, தெரிந்தவர் மூலமாக வெளியே கடையில் பழம், ப்ரெட் இப்படி வாங்கி வரச் சொன்னேன்.
அவர் வாங்கி வந்ததும், அவற்றை எடுத்துக் கொண்டு, ஹாஸ்டல் வார்டனிடம் நேராகப் போய், போய் திவ்யா பேர் சொல்லி அவளை பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.
காலேஜில் எனக்கு நல்ல பேர் இருந்ததால், “சரி,… நீங்க பாருங்க ராகவ். இவ பேரண்ட்ஸுக்கு தகவல் சொல்லிட்டோம். நைட் எட்டு மணிக்கு வந்து இவளை அழைச்சுகிட்டு போறதா சொல்லி இருக்காங்க. பாத்துட்டு உடனே வந்திடுங்க. லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள ஜென்ட்ஸ் அலோ பண்றது கிடையாது.”
“சரிங்க” என்று சொன்ன நான் பழங்களையும், பிரெட் கவரையும் ஒரு பையில் எடுத்து போட்டுக் கொண்டு திவ்யா இருந்த ரூமுக்கு போனேன்.
திவ்யா கட்டிலில் சோர்ந்து படுத்திருந்தாள். அவள் பக்கத்தில் நித்யா நின்றிருந்தாள்.
என்னை பார்த்த்தும் முகம் மகிழ்ச்சியில் பிரகாசிக்க, கொஞ்சம் போல கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்து, “வாங்க, எனக்கு உடம்பு சரி இல்லே. அதனால காலேஜுக்கு வர முடியாதுன்ற விஷயத்தை நித்யா கிட்டே சொல்லி உங்க கிட்டே சொல்லச் சொன்னேன். அவளை நீங்க அவாய்ட் பண்ணிட்டீங்களாம். பரவாயில்லே.”
“இல்லை,…. என்னவோ நித்யா சொல்ல வந்த்தை அவாய்ட் பண்ணிட்டேன். மன்னிச்சுக்க. மாத்திரை, மருந்து சாபிட்றியா ?’ என்று பேசிக் கொண்டே கையில் கொண்டு போய் இருந்த பழங்கள் பிரெட்,. இருந்த பையை நித்யாவிடம் கொடுத்தேன்.
“ம்,…. ஹாஸ்டலுக்கு டர்ன் டூட்டிக்கு வர்ற டாக்டர் பாத்துட்டு, செக் அப் பண்ணினார். இப்போதைக்கு மாத்திரை மருந்த்து தந்திருக்கார். ப்ளட் டெஸ்ட் பண்றதுக்கு ப்ளட் எடுத்துகிட்டு போய் இன்னைக்குதான் ரிசல்ட் சொன்னார். வைரல் ஃபீவராம்.”
“சரி,…. உடம்பை பாத்துக்கோங்க.” என்று சொல்லி நான் கிளம்ப, “நேத்தைக்கு உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்ல்லாம்னு நினைச்சிருந்தேன். அது என்னன்னு கேக்கலாம்னு வந்தீங்களா?”
“சாரி திவ்யா,…அந்த அளவுக்கு கல் மனசுக்காரன் நான் இல்லே. அதை விட உனக்கு உடம்புக்கு முடியாம படுத்து இருக்கேன்னு கேட்டு, உன்னை பாக்கதான் இங்கே ஓடி வந்திருக்கேன் திவ்யா. உன்னை விட, நீ சொல்லப் போகிற விஷயம் எனக்கு ஒன்னும் முக்கியம் இல்லே. என்ன வேணும்னு சொல்லு வாங்கிட்டு வந்து தர்றேன். நீ எப்பவும், சந்தோஷமா, சிரிச்சு பேசிகிட்டு இருந்தாலே போதும்.”
“ஒன்னும் வேணாம். நீங்க என்னை பாக்க வந்ததே போதும்.” என்று சொல்லி சிரித்தாள்.
நானும் கனத்த மனதோடு அவள் ரூமில் இருந்து வெளியே வந்தேன்.
வெளியே வரும் போது திவ்யா அறையில் நித்யாவும், திவ்யாவும் பேசிக்கொண்டது என் காதில் விழுந்த்து.
“பாவம்டி உன் ஆளு. உனக்கு உடம்பு சரியில்லேன்னதும் எப்படி பதை பதைச்சு ஓடி வந்திருக்கார் பாரு. அவர் கண் கலங்கி இன்னைக்குதான் பாக்கிறேன். இப்பவாவது சொல்லுடி அவர் உன் மனசுல இருக்கார்ன்னு.”
‘யேய்,… பேசாம இருடி. ஒரே காலஜ்ல படிக்கிற ஸ்டூடண்ட். உடம்பு சரி இல்லாம இருக்கிறப்ப, ஒரு அக்கரையிலே பாக்க வந்திருப்பார். நான் உடம்பு சரி இல்லாத்தை பாக்கிறப்போ, கூடப் படிக்கிறவளுக்கு இப்படி உடம்பு சரி இல்லாம போச்சேன்னு கவலைப்பட்டு கண் கலங்கி இருப்பார். அதை நீ ஏன் லவ்வுன்னு நினைச்சுக்கறே? அதையும் இதையும் பேசறதை விட்டுட்டு, அங்கே இருக்கிற சுடு தண்ணியை எடுத்துக் கொடுடீ. மாத்திரை விழுங்கணும்”
“இந்தாடி,…”
நான் லேடீஸ் ஹஸ்டல் விட்டு வெளிய்யெ வந்தேன். நைட் எல்லாம் தூக்கமே இல்லை. கிரணும், அரவிந்தும் திவ்யாவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்க, நான் அவளை சந்தித்த்து, அவளுக்கு பழம் பிரெட் வாங்கி கொடுத்த்து, அவள் பேரன்ட்ஸ் வந்து கூடிகிட்டு போக இருப்பதை பத்தி சொன்னேன்.
அவர்களும் கவலையில்ம் ஆழ்ந்தார்கள்.
அடுத்த நாள் வேண்டா வெறுப்பாக காலேஜ் கிளம்பி, டிபார்ட்மெண்ட் முன்னே நின்றிருந்தேன். காலேஜே வெறுமையாக இருப்பது போன்ற ஒரு உணர்வில், அங்கே இருந்த மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த இலையை கையில் வைத்து இலக்கு இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது தூரத்தில் நித்யா கையில் ஒரு நோட்டுடன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
நேற்று போல விலகிப் போகக் கூடாது. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கேட்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கேயே நின்றிருந்தேன்.
என்னை நெருங்கிய நித்யாவிடம், “திவ்யாவுக்கு இப்ப பரவாயில்லையா?”
“ம்,…. இப்ப கொஞ்சம் பரவாயில்லேன்னு போன் பண்ணி சொன்னா, நேத்தைக்கு அவ பேரண்ட்ஸ் வந்து அவளை கூட்டிகிட்டு போய்ட்டாங்க. ஒரு வாரம் மெடிக்கல் லீவ் அப்ளை பண்ணி இருக்கா. ஒன்னும் கவலைப் படாதீங்க. சின்ன காய்ச்சல்தான். உங்களைப் பத்தி அவ புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான்.” என்று சொல்லி நிறுத்த, நான் அவளைப் பார்க்க, அவள் கையில் இருந்த நோட்டை எடுத்துக் காட்டி, “அப்புறம், இந்த நோட்டை அங்கே விட்டுட்டு வந்துட்டீங்க. அதை நான் தான் ஏதேச்சையா பாத்தேன். உடனே கொண்டு போய் கொடுத்துடுன்னு சொன்னா. நான் வெளியே வந்து பாத்தேன். அதுக்குள்ள நீங்க ஹாஸ்டல் விட்டு போய்ட்டீங்க. சரின்னு அவகிட்டேயே இதை கொண்டு வந்து கொடுத்தேன். இதை திறந்து பாக்கறதும், படிக்கறதும் அநாகரீகம்னு அவ சொன்னா.
சரி,…. காலேஜ் மேட்டுதானேன்னு நானும் லேசா புரட்டி பாத்தேன். அங்கே ஒரு பக்கத்துல எழுதி இருக்கிறதை நான் படிச்சிட்டு, அவளுக்கும் படிக்க கொடுத்தேன். அடுத்தவங்க நோட்ல இருக்கிறதை அவங்களுக்கு தெரியாம இதெல்லாம் படிக்கக் கூடாதுடின்னு சொல்லிட்டு, நான் காட்டுன பக்கத்தை மட்டும் படிச்சு பாத்தா. படிச்சதும், அவ மனசுக்குள்ளே பட்டாம் பூச்சி பறந்திருக்கும் போல,,…..மெல்ல சிரிச்சா. இந்தாங்க உங்க நோட்டு.” என்று சொல்லி அந்த நோட்டை என்னிடம் நித்யா கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு ஒரு புன்னகையுடன் நகர, நான் அந்த நோட்டை பிரித்து அப்படி அவளை கவரும் விதமாக அப்படி என்னதான் எழுதி இருக்கிறேனென்று ஒவ்வொரு பக்கமாக புரட்டி பார்த்தேன்.
நோட்டுக்கு நடுவில் சில பக்கங்கள் தாண்டி,…காலேஜ் வகுப்பு போரடித்ததால், என் பிடித்த பாடலை அதில் எழுதி இருந்தேன்.