Non-erotic வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள்
#21
(18-02-2023, 02:13 AM)psprabhu1508 Wrote: அனைவருக்கும் வணக்கம்,

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இந்த பதிவு கதை அல்ல, எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி இதனை யாரேனும் கவனித்தீர்களா என்று தெரியவில்லை.

இந்த தளத்தில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கின்றனர், அதில் சிலர் அவர்கள் எழுதிய கதைய பாதியிலேயே அப்படியே விட்டுவிட்டு செல்கின்றனர், மிக சிலரே தொடர்ந்து கதை எழுதுகிறார்கள்.

அந்த மிக சிலர் எழுத்தாளர்களின் எழுத்தும் மிக அருமையாக உள்ளது 

இது ஒரு உதாரணம் தான்: இந்த தளத்திற்கு எப்போது் வந்தாலும் முகப்பு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பதிவுகள் மட்டுமே வருகிறது. இன்று அதனை எண்ணியும் பார்த்தேன், முகப்பு பக்கத்தில் மொத்தம் 46 பதிவுகளை காணலாம், அதில் 22 பதிவுகள் அனைத்தும் அந்த ஒரு எழுத்தாளருக்கே சொந்தமானது. அந்த 22 பதிவுக்கும் உள்ளே சென்று பார்த்தால், update, thanks, இது தான் பிரதானமாக உள்ளது. கதையை பற்றிய update எதுவும் இல்லை.

உண்மையிலே update மற்றும் thanks சொல்ல வேண்டும் என்றால் அதனை குறுஞ்செய்தி அனுப்பி சொல்லிக்கலமே, ஏன் அந்த update இல்லாத பதிவுகளுக்கு, தளத்தில் வந்து thanks and update கூறி அந்த பதிவுகளை உயிர்ப்போடு தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்று புரியவில்லை.

இதனால் என்ன ஆகிறது என்றால், இந்த தளத்தில் தொடர்ந்து கதை எழுதுபவர்களின் பதிவுகள் பின்னுக்கு செல்கிறது, அவர்கள் கதையை பின்தொடரும் வாசகர்கள் 2 அல்லது 3ஆம் பக்கத்திற்கு வரை தேடிச்சென்று படிக்க வேண்டிய நிலை வருகிறது, இங்கே நெறய பேர் login செய்யாமல் கதைகளை படிப்பவர்கள் தான், அவர்கள் இப்படி தேடிச்சென்று எப்போதும் படிப்பர்களா என்பது சந்தேகமே. அதனால் அருமையான கதைகளுக்கு பார்வைகள் குறையும் அதன் விளைவு எழுத்தாளர்களின் ஆர்வம் குறையும், கதையும் அவர்களிடம் இருந்து வராது. 

எனவே நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தொடர்ந்து update கொடுக்கப்படும் கதைகளுக்கு update அல்லது பாராட்டுக்களை கருத்துரை பகுதியை பயன்படுத்தி கேளுங்கள், update இல்லாத பதிவுகளுக்கு கதையின் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி மூலியமாக கேளுங்கள். இதனால சாதாரணமான என்னை போன்ற வாசகனும் பலன் அடைவான், நீங்கள் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதால், உங்களுக்கும் அவர்களுக்கும் ஒரு பாலம் உருவாகும்.


இது ஒரு சாதாரண வாசகனின் வேண்டுகோள். வேண்டுகோள்.

நன்றி வணக்கம்
முதலில் நானும் அவரது பெருந்தன்மை என்று நினைத்தேன்
ஆனால் அவர் செய்வது இப்போது எரிச்சலாக இருக்கிறது...
புரிந்தும் புரியாதது போல நடிப்பவரை நாம் என்ன செய்வது?
[+] 1 user Likes worldgeniousind's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள் - by worldgeniousind - 22-02-2023, 11:34 PM



Users browsing this thread: 4 Guest(s)