15-02-2023, 04:41 PM
(15-02-2023, 01:00 PM)Ananthakumar Wrote: நண்பா விமர்சனம் எதிர் பார்த்து கதை எழுத ஆரம்பித்தால் 90% நண்பர்கள் கதை எழுத வாய்ப்பு கிடையாது.
நண்பர் வந்தனா விஷ்ணுவை எடுத்துக் கொள்ளுங்கள் அவரெல்லாம் எவ்வளவு காலமாக கதை எழுதி கொண்டு இருக்கிறார்
ஆனால் தற்போது உண்மையில் அவருக்கு கூட சரியாக ரெஸ்பான்ஸ் இல்லை
நீங்கள் நன்றாக யோசித்து பாருங்கள் நண்பா உங்கள் கதைக்கு விமர்சனம் வருகிறதோ இல்லையோ கதையை லாகின் செய்யாமல் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
அவர்கள் மனதில் உங்கள் கதை என்றும் நிலைத்து நிற்கும்
நானும் நீங்கள் க்ளைமாக்ஸில் நடப்பதை பாருங்கள் என்று கூறி இருந்ததால் உங்களுடைய க்ளைமாக்ஸை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன் நண்பா
இப்பொழுதும் கூட உங்களுக்கு விருப்பம் இருந்தால் தயவுசெய்து அதை எடிட்டிங் செய்து உங்கள் மனதில் தோன்றிய க்ளைமாக்ஸை இன்னும் இரண்டு மூன்று பதிவுகளாக ஒவ்வொரு நபர்களுக்கும் என்னென்ன சம்பவித்தது என்று கூறி முடித்தால் மன நிறைவாக இருக்கும்
ஆனால் யாரையும் எதற்காகவும் வற்புறுத்த முடியாது.
என்றாவது ஒருநாள் இப்படி செய்திருக்கலாமே என்று யோசனை செய்யும் அளவுக்கு கதையை நிறுத்த முடிவு செய்யாதீர்கள் நண்பா
நான் விமர்சனம் வருவதை பார்த்துவிட்டு, கதையை எழுதுவதை விரைவாக முடிக்க வில்லை நண்பா..
கதை எழுதிக் கொண்டிருந்தால், எண்ணம் முழுவதும் அதை சுற்றியே இருக்கிறது.. மற்ற விசயத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.. அதனால் தான், கதைகளை விரைவாக முடித்து வருகிறேன்.. மன்னித்து விடுங்கள் நண்பா..