27-12-2018, 11:59 AM
இந்த ஸ்மார்ட்போன்களில் அஸுஸ் குறிப்பிட்டுக் காட்டும் மற்றொரு முக்கிய விஷயமாக இதன் பேட்டரி இருக்கிறது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களுமே 5000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கின்றன. பட்ஜெட் செக்மென்டைப் பொறுத்தவரையில் பேட்டரி பேக்அப் என்று வந்து விட்டால் அதில் ஷியோமிக்குத்தான் முதலிடம். அந் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை பலர் விரும்புவதற்கு அதுவும் ஒரு காரணம். எனவே மற்ற நிறுவனங்களும் அதே திறன் கொண்ட பேட்டரிந்த் தங்களது ஸ்மார்ட்போனில் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்றன. அஸுஸ் நிறுவனமும் இதற்கு முன்பு Asus Zenfone Max Pro M1 ஸ்மார்ட்போனில் சற்று கூடுதலாக 5000 mAh பேட்டரியைக் கொடுத்திருந்தது. அதைக் குறைக்க முயற்சி செய்யாமல் அதே திறன் கொண்ட பேட்டரியை இதிலும் கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக இரண்டு நாள்களுக்கு மேலாக பேட்டரி பேக்அப்பைப் பெறலாம் என விளம்பரப்படுத்துகிறது அஸுஸ். உண்மையில் இது சாத்தியமில்லாத ஒன்றுதான் என்றாலும், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மேலாவது மொபைலில் சார்ஜ் நிற்கும் என்றும் எதிர்பார்க்கலாம் 12 +5 மெகாபிக்சல் டூயல் கேமரா பின்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 13 MP கேமரா முன்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஃபிளாஷ் வசதியும் இருக்கிறது. 3 GB ரேம் 32 GB இன்டர்னல் மெமரி மாடல் 12,999 ரூபாய்க்கும், 4 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 14,999 ரூபாய்க்கும் மற்றும் 6 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 16,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.