27-12-2018, 11:58 AM
இரண்டு நாள் பேட்டரி, பவர்புல் புராசஸர்
Asus ZenFone Max Pro M2 என்ற ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் டிஸ்ப்ளே 19:9 ரேஷியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 6 புரோவில் உள்ள அதே அளவு. இதில் உள்ள மற்றொரு சிறப்பு இந்த டிஸ்ப்ளேவைப் பாதுகாக்க கொரில்லா கிளாஸ் 6 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செக்மென்டில் உள்ள வேறு எந்த ஸ்மார்ட்போன்களிலும் இது கிடையாது. கொரில்லா கிளாஸ் 6 பெரும்பாலும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில்தான் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனில் இருப்பது இதுதான். கொரில்லா கிளாஸ் 6 என்பதால் டிஸ்ப்ளேவுக்குக் கூடுதலாகப் பாதுகாப்பு கிடைக்கும். அதே போல் இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய மற்றொரு விஷயம் இதன் புராசஸர். இதில் Snapdragon 660 புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செக்மென்டில் சில ஸ்மார்ட்போன்களே இந்த புராசஸரைப் பயன்படுத்துகின்றன. இதே புராசஸரை கொண்டுள்ள மற்றொரு ஸ்மார்ட்போன் ரியல்மீ 2 புரோ. பட்ஜெட் செக்மென்டில் அதிகப் பேரால் விரும்பப்படும் ஷியோமி நிறுவனம் கூட ரெட்மி நோட் 6-ல் இதை விடக் குறைவான திறன் கொண்ட புராஸரையே பயன்படுத்துகிறது.