10-02-2023, 09:56 PM
Update 15
இந்த கடையில் ஆஷிஷுக்குப் பிறகு எப்படி முப்பெரும் தேவியர் இருக்கிறார்களோ, அதே போல மற்ற மூன்று கடைகளிலும் ஆஷிஷுக்கு பிறகு முப்பெரும் தேவியர் இருந்தனர். அவர்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கத் தேவையில்லை. இந்த கடையில் உள்ளவர்களை பற்றி நாம் பார்ப்போம்.
மனிஷா, மஞ்சு, மல்லிகா என்ற இந்த மூன்று பெண்களுக்கு கீழே கிட்டத்தட்ட ஃப்ளோருக்கு 5 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் பத்து வேலையாட்கள் என்ற கணக்கில் 30 பேர் வேலை செய்கின்றனர். அவர்கள் மட்டும் இல்லாமல் கடையை காவல் செய்வதில் பகல் பொழுதில் இரண்டு வாட்ச்மேன்களும் இரவு பொழுதில் மூன்று வாட்ச்மேன்களும் வேலை செய்கின்றனர்.
இந்த வேலையாட்களில் தான் நம்முடைய கதையில் நாம் முன்னரே பார்த்த புவனா, சரஸ்வதி, கவிதா மற்றும் அவர்களுடைய கணவன்களான புவனா உடைய கணவன் முருகன், சரஸ்வதியுடன் கணவன் கந்தசாமி, கவிதாவுடைய கணவன் பழனியப்பன் ஆகியோர் வேலை செய்கின்றனர். கணவன்கள் மூன்று பேரும் இரவு காவல் டூட்டியை செய்கின்றனர். அது நமக்கு முன்னமே தெரியும். ரிஷப் லாலின் ஏற்பாடு என்பதும் தெரியும். மனைவிகள் மூன்று பேரும் பகல் பொழுதில் வேலை செய்கின்றனர்.
கவிதா முதல் ஃப்ளோரில் டீ காபி கொடுக்கும் ஹாஸ்பிடாலிட்டி வேலையை செய்கிறாள். சரஸ்வதி இரண்டாவது ஃப்ளோரில் டீ காபி கொடுக்கும் ஹாஸ்பிடாலிட்டி வேலையை செய்கிறாள். புவனா கொஞ்சம் அழகாகவும் தன் வயதை விட இளமையாகவும் தோன்றுவதால், கடைக்கு வரும் கஸ்டமர்களை வரவேற்று, அவர்களுக்கு என்ன வாங்க வேண்டும் என்று கேட்டு, அவர்களை அந்தந்த ஃப்ளோருக்கு அனுப்பி வைப்பது மற்றும் கூட்டம் அலைமோதும் போது பில் போடுவதற்கு நகைகளை வாங்கிக் கொண்டு போய் பில் போட்டு கஸ்டமர்களிடம் தருவது, கஸ்டமர் திருகாணி ஒடுங்கிவிட்டது மடங்கிவிட்டது என்று வந்தால், அவற்றை சரி செய்து கொடுக்கும் பிரிவில் கொடுத்து, அதை சரி செய்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறாள்.