Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
முதல் பார்வை: என்.ஜி.கே
[Image: NGKjpg]

சாதாரண இளைஞர் அரசியலில் சாதிக்க நினைத்து சாவுடன் சண்டையிட்டால் அவரே நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே).
ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு சில சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படுகிறார் சூர்யா. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் சூர்யாவுக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் எதிரிகளால் முளைக்கின்றன. தான் ஒருவராக எதையும் இங்கே மாற்ற முடியாது என்று பிரச்சினைகளைத் தீர்க்க எம்.எல்.ஏவிடம் உதவி கேட்கிறார். அந்த உதவிக்கு பிரதிபலனை எம்.எல்.ஏ எதிர்பார்க்க, சூர்யா அவமானப்படுத்தப்படுகிறார். அவரின் ஒட்டுமொத்த சுயமரியாதையும் அடிபடுகிறது. இந்த சூழலில் அரசியல்வாதியின் எடுபிடியாக மாறும் சூர்யா, ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்கிறார். அவர் அடுத்தடுத்து என்ன செய்கிறார், சூர்யாவின் கனவும், திட்டமும் நிறைவேறியதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை

[Image: 2L6A0287JPG]
 

நந்த கோபாலன் குமரன் என்கிற கதாபாத்திரத்தை ஒட்டுமொத்தமாகத் தன் தோள்களில் தாங்கி நிறுத்துகிறார் சூர்யா. அரசியல் கனவு காணும் இளைஞனாகவும், அந்தக் கனவு உடையும் போது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும்போதும் அதிர்ச்சி விலகாமல் தனக்கு நேர்ந்ததை எண்ணி உறைந்துபோகும்போதும் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். மருத்துவமனை கழிப்பறை சண்டைக் காட்சி, மார்க்கெட் சண்டைக்காட்சியில் ஆக்ரோஷத்தைத் தெறிக்க விட்டிருக்கிறார்.
தொடக்கத்தில் சாய் பல்லவி படத்துக்கும் காட்சிக்கும் உறுத்தாமல் வந்து போனார். சூர்யா மீதான காதலை ஐஸ்க்ரீம் வழியாக வெளிப்படுத்தும்போது வெட்கத்தில் சிவந்தார். ரகுல் ப்ரீத் சிங்கின் வருகைக்குப் பின் அவரின் சத்தமும் சந்தேகமும் படத்துக்குத் தேவையில்லாத ஆணி.
[Image: 2L6A7314JPG]
 
ரகுல் ப்ரீத் சிங் கனமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். படத்தின் ஆகப் பெரிய பலம் இவரின் பாத்திர வார்ப்பு.
படத்தில் பாலா சிங்கும், இளவரசுவும் அரசியல்வாதிகளின் பரிமாணங்களைப் பளிச்சென்று காட்டி நடிப்பில் மிளிர்கிறார்கள். கட்சிக் கரைவேட்டியின் பவரை டெமோ காட்டி அசத்தும் பாலா சிங் சிறந்த வழிகாட்டின் தோரணையில் ஆலோசனைகள் வழங்குவதும், எம்.எல்.ஏவின் பந்தாவை இளவரசு வெளிப்படுத்தும் விதமும் ரசனை அத்தியாயங்கள்.
உமா பத்மநாபன், நிழல்கள் ரவி, பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், தேவராஜ், ராஜ்குமார் என படத்தில் பலரும் இருக்கிறார்கள். ஆனால், யாருக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய்க்கு குறைந்தபட்ச வசனங்களே இல்லாத அளவுக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல வந்து போவதுதான் சோகம். நிழல்கள் ரவிக்கு மட்டும் ஒரு காட்சியில் சில வசனங்களைக் கொடுத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள்.
சிவகுமார் விஜயனின் கேமரா கோணங்களும், லைட்டிங் விதமும் படத்தின் தரத்துக்கு வலு சேர்க்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பொதைச்சாலும் பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் தனக்கு நிகர் யாருமில்லை என்ற அளவுக்கு யுவன் பின்னி எடுத்திருக்கிறார்.  திரைக்கதையில் இல்லாத அடர்த்தியை யுவன் தன் பின்னணியால் பூர்த்தி செய்கிற அளவுக்கு செல்வா- யுவன் கூட்டணி  மேஜிக் செய்திருக்கிறது.
பிரவீன் கே.எல். அன்பே பேரன்பே பாடலுக்குக் கத்தரி போட்டிருக்கலாம். சூர்யா உடனான சாய் பல்லவியின்  சில காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.
அரசியலில் நேர்மையாக முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனை மற்ற அரசியல்வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படி நடத்துகிறார்கள் என்பதை காட்சிப்படுத்திய விதத்தில் செல்வராகவன் தனித்து நிற்கிறார். அரசியலின் ஆழத்தையும் ஆபத்தையும் அவர் ஒருசேரக் காட்டிய விதத்திலும் தேர்ந்த இயக்குநரின் ஆளுமையை வெளிப்படுத்துகிறார். ஆனால், அந்த அரசியலை அறிந்த நாயகனின் வளர்ச்சியும், அதற்கான திட்டங்களும் என்ன என்பதை முழுமையாகச் சொல்லத் தவறியுள்ளார்.  நாயகனின் நோக்கம் என்ன என்பதை தெளிவாகச் சொல்லாததே படத்தின் பலவீனம். இதனால் இரண்டாம் பாதி திரைக்கதையில் ஏற்படும் தள்ளாட்டம் குழப்பத்தை வரவழைக்கிறது.
[Image: 2L6A9725JPG]
 
செல்வராகவன் படம் என்றால் நிச்சயம் பெண்களின் கதாபாத்திரம் ஆழமாகவும், பேசும்படியும் இருக்கும். இதில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்தில் எந்த அழுத்தமும் இல்லை. ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரம் கச்சிதம் என்றாலும் அவர் பின்பு காதலில் விழுவதாகவும் கனவுப் பாடலில் மிதப்பதுமாகவுமே இருக்கிறார்.
ஒரு அமைச்சர் பாலியல் சர்ச்சையில் சிக்கி அவரைப் பதவி நீக்கம் செய்வதாகக் காட்டுகிறார்கள். அதை சமகால அரசியலைத் தொட்டுப் பார்ப்பதாக இயக்குநர் நம்பியிருக்கிறார். ஆனால், அது படத்துக்கு எந்தவிதத்திலும் உதவவே இல்லை. தீப்பந்தப் போராட்டம் நடத்திய சூர்யாவுக்கு திடீரென்று பாராட்டு விழா நடத்துகிறார்கள். அந்தப் பாராட்டு விழாவில் பங்கேற்க சைக்கிளில் மனைவியுடன் வருகிறார். இதெல்லாம் நம்பவே முடியாத விஷயங்கள்.
மிகப்பெரிய அரங்கத்தில் ரிகர்சல் பார்ப்பது, பாலா சிங்கை திடீரென்று எச்சரிப்பது, புதுக்கட்சி ஆரம்பிப்பது, கட்சியைக் கலைத்துவிட்டு தான் வளர்ந்த கட்சியிலேயே ஐக்கியமாவது என அநியாயத்துக்கு திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார்கள்.
செல்வராகவன் இயக்கிய இன்னொரு படம், சூர்யாவின் நடிப்பில் ஒரு படம் என்ற அளவில் மட்டும் என்.ஜி.கேவை வரவேற்கலாம்
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 01-06-2019, 09:34 AM



Users browsing this thread: 5 Guest(s)