முள் குத்திய ரோஜா(completed)
#28
முள் குத்திய ரோஜா – 5 ராஜா 
மலையின் அடிவாரத்தில்.. தனிமையில் இருந்தது அந்த ஆஞ்சநேயர் கோயில். மரஙகள் நிறைந்த இடம். காலை இளம் வெயிலுக்கு குளு குளுவென்றிருந்தது. கூட்டமே இல்லை. ஒரு சில பேர்தான் இருந்தனர். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று வழிபட்டு வந்தோம். சிறிது நேரம் நெருக்கமாக நடந்து கோயிலைச் சுற்றி பார்த்தோம். ஒரு சில இடங்களில் அமர்ந்து அங்கு கிடைத்த குளுமையை அனுபவித்தோம்.. !!
நான் நிலாவினி மீது மிகுந்த காதல் கொண்டிருந்தேன். அவளைக் கட்டி அணைத்து முத்தங்களால் குளிர வைக்கத் தவித்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதல் நாளே இதெல்லாம் சாத்தியமா என்கிற குழப்பமும் என் மனதை அரித்துக் கொண்டிருந்தது. !! எது எப்படி இருந்தாலும் எனக்கு மிகவும் அழகான ஒரு காதலி கிடைத்திருக்கிறாள் என்பதே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் நான் அவசரப் பட்டு காரியத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. !!
நான் திருமணமானவன். குடும்பஸ்தன் என்கிற பயம் அவளுக்கு நிச்சயமாக இருக்கும் என்னை நம்பி அவள் தகாத காதலில் ஈடுபடுவது என்பது.. அவ்வளவு எளிதானதும் அல்ல.. !!
தனியாக இருந்த ஒரு மண்டபத்தின் மேடை மீது உட்கார்ந்து கொண்டிருந்தோம். அவள் எனக்கு வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். அவள் தோள் என் தோளுடன் உரசிக் கொண்டிருந்தது.. !!
” நான் ஒண்ணு கேக்கணும் நிலா..”
” ம்ம்.. என்னப்பா. ?” என்று அவள் என்னை ஆர்வமாகப் பார்த்தாள்.
” உங்கக்கா என்னை லவ் பண்ணதா சொன்னியே.. ?”
” ம்ம் ” அவள் உதட்டில் மெலிதான புன்னகை அரும்பியது.
” உன்கிட்ட சொன்னாளா..?”
” ம்ம். ஆனா உங்ககிட்ட சொல்லல இல்ல.. ?”
” ஆம்மா.. ” மெலிதான வியப்புடன் அவள் கண்களை ஆர்வமாகப் பார்த்தேன்.
” அதுதான் அவளுக்கு முதல் காதல். அவளால அதை சாகறவரை மறக்க முடியாது.! உங்களை அவ ரொம்பவே லவ் பண்ணா..! எப்ப பேசினாலும் உங்களை பத்தியேதான் பேசுவா. ஆனா அவ லவ்வை மட்டும் உங்ககிட்ட சொல்ல முடியல அவளால.! இதுக்கு எடைல ஒரு தப்பு பண்ணி மாட்டிகிட்டா.. !!”
” என்ன தப்பு ?”
” உங்கள லவ் பண்றத அவ.. எங்க மாமா பொண்ணு ஒருத்திகிட்ட சொல்லிட்டா. ஆனா அவ ஒரு கோள் மூட்டி. ரெண்டு பேருக்கும் எதுக்கோ வந்த சண்டைல.. அவ நேரா வந்து எங்கப்பாகிட்டயே சொல்லிட்டா. ! பாவம் அடி பிண்ணிட்டாங்க.. எங்கப்பா.. !!”
அவள் சொன்னதை கேட்க எனக்கு வருத்தமாக இருந்தது. அவள் புன்னகை மாறாமலே மேலும் சொன்னாள்.
” இப்ப கட்டி வச்சிருக்கற.. அவரு புருஷனை அவளுக்கு புடிக்கவே இல்ல. ! ஏதோ கடனேனு ரெண்டு குழந்தைகள பெத்து வாழ்ந்திட்டிருக்கா.. !!”
” ஓ.. !!” நான் நீளமாக ஒரு பெருமூச்சு விட்டேன். என் மனசு ஒரு மூலையில் உடைவதை போலிருந்தது. ”பாவம்.. உங்கக்கா..”
” நீங்களும் அவளை விரும்பறிங்கனு.. அவளுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்..!!”
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா(adultery ) - by johnypowas - 27-12-2018, 11:02 AM



Users browsing this thread: