27-12-2018, 10:35 AM
கொட்டில்பாடு சுனாமி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறல்
குளச்சல்,
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியா கடற்பகுதியில் பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி என்னும் ஆழிப்பேரலை உருவானது. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தின் கடற்கரை பகுதிகளை பயங்கரமாக தாக்கியது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்தனர்.
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர்களும் பேரலையின் ஆவேச பசிக்கு இரையானார்கள். இதில் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் மட்டும் 199 பேர் பலியானார்கள். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அதன் நினைவாக கொட்டில்பாடு புனித அலெக்ஸ் ஆலயம் முன் சுனாமி நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
சுனாமி தாக்கிய 14-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இறந்தவர்கள் நினைவாக நேற்று காலை 8.30 மணிக்கு கொட்டில்பாடில் உள்ள சுனாமி காலனியில் இருந்து பங்குதந்தை சகாய செல்வன் தலைமையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என அனைவரும் மவுன ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்தின் போது அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சென்றனர். சுனாமியில் பலியான 199 பேரும் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு ஊர்வலம் சென்று நிறைவடைந்தது. அங்கு அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு கொட்டில்பாடில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, அங்கு கூடியிருந்த இறந்தவர்களின் உறவினர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் ஆலயத்தில் இறந்தவர்கள் நினைவாக சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கொட்டில்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த இறந்தவர்களின் உறவினர்கள், மீனவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
414 பேர் நினைவாக காணிக்கை மாதா ஆலயம் முன் அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபியில் நேற்று மதியம் த.மா.கா. மாவட்ட தலைவர் பினுலால்சிங் தலைமையில் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தனீஷ்தன், செயலாளர் அருள்தாஸ், ஜார்ஜ், சகாய பேபி, கனகராஜ், ஆரோக்கிய தாஸ், பரமானந்ததாஸ், ஆன்டணி அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.