29-01-2023, 05:59 AM
(This post was last modified: 30-03-2023, 03:45 PM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஆஷிஷின் வேறுபட்ட செக்ஸ் ஆசைகள் ஒரு பிறழ்வே தவிர, அவன் பிசினஸிலும் அதை நிர்வகிப்பதிலும் மிகச் சிறந்தவனாக விளங்கினான். அதற்கு கோவையில் அவனால் விரிவுபடுத்தப்பட்ட நான்கு நகைக்கடைகளே சாட்சி. ஆறு வருடங்களுக்கு முன்பு ரிஷப் லால் நகைக்கடையை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தாலும், அது ராமநாதபுரம் சிக்னலை ஒட்டிய பெட்ரோல் பங்க் அருகில் சிறிய கட்டிடத்தில் சிறிய கடையாகவே இருந்தது. கடைக்கு நல்ல பெயர் இருந்தாலும் வியாபாரம் சுமாராக சென்று கொண்டிருந்தது. கடையில் இருக்கும் நகைகள் பழைய டிசைன்களாக இருப்பது மட்டுமல்லாமல், வியாபாரத்திலும் ஒரு பழமைவாதம் குடி கொண்டிருந்தது.
ஆஷிஷ் தனது மாமாவுடன் சேர்ந்து வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொண்ட பின், அவன் மாற்றம் செய்ய நினைத்தது முதலில் வியாபார யுக்தியைதான். ரிஷப் லால் வியாபாரத்தை விட நம்பகத்தன்மையையும் நியாயத்தையும் அதிகம் விரும்புவார். நன்றியுணர்ச்சிக்கு மிக அதிகமாக முன்னுரிமை தருவார். ஆதலால் கடையில் வேலை செய்பவர்கள் அவருக்கு தெரிந்தவர்களாகவும், நம்பிக்கை உரியவர்களாக இருந்தாலும் வயதானவர்களாக இருந்தனர். அதேபோல கடைக்கு வரும் வாடிக்கையான பெரிய கஸ்டமர்களுக்கு மட்டுமே டீ ஜூஸ் போன்ற உபசரிப்புகளை செய்து வந்தனர். சுற்றுப்பட்டு கிராமங்களில் இருந்து வரும் சிறிய கஸ்டமர்களை அவர்களுடைய அறியாமையாலும், அவர்களுடைய பாமரத்தனத்தாலும் கொஞ்சம் விரட்டியே வியாபாரம் செய்தனர்.
ஆஷிப் பொறுப்புக்கு வந்தவுடன் இவை அனைத்தையும் மாற்ற விரும்பினான். மாமாவுக்கு நம்பிக்கையானவர்களாகவும் அவருடைய நன்றிக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்த வயதானவர்களுக்கு ரிட்டயர்மென்ட் கொடுத்தான். கொடுத்துவிட்டு அவர்களுடைய வீட்டில் இருக்கும் மகன்களுக்கோ இல்லை மகள்களுக்கோ வேலையை கொடுத்தான். அவர்கள் இளைஞர்கள் ஆகவும் துடிப்பானவர்களாகவும் இருந்ததால் வியாபாரமும் துடிப்பாக நடந்தது. மாமாவுடைய நன்றி உணர்ச்சியும் சரி செய்யப்பட்டது.
எப்போதும் நகைக்கடைக்கு வருபவர்கள் குடும்பமாகத்தான் வருவார்கள். குடும்பத்தில் நான்கைந்து பெண்களும், கூட அவர்களுக்கு துணையாக ஒன்றிரண்டு ஆண்களும் எப்போதும் வருவார்கள். பெண்கள் நகைகளையும் அவற்றின் டிசைன்களையும் தேர்ந்தெடுக்கும் போது ஆண்கள் பணப்பையுடன் சும்மாவே உட்கார்ந்து இருப்பார்கள். அப்போது கடையில் மற்ற இடங்களை வேடிக்கை பார்ப்பது மட்டுமே அவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும். அதனால் அவர்களுக்கு போரடிக்க தொடங்கும். இதற்கு ஒரு யுக்தியை பயன்படுத்தினான்.
கடையில் வேலை செய்யும் பெண்கள் அனைவரையும் இளவயது பெண்களாகவும், கொஞ்சம் லட்சணமான பெண்களாகவும் வேலைக்கு வைத்தான். அவர்கள் நகைக்கடை யூனிபார்மில் திருத்தமான மேக்கப்புடனும் சிரித்த முகத்துடனும் அங்குமிங்கும் வளைய வர, அது ஆண்களின் கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு இதமாகவும் இருந்தது. அதேபோல படிக்காத சில பெண்களை வேலைக்கு வைத்து கடைக்கு வரும் ஒவ்வொரு கஸ்டமரையும் விஐபி கஸ்டமர் போலவே டீ காபி ஜுஸ் கொடுத்து உபசரித்தான். இது ஒரு கிராம் காசு வாங்கும் கஸ்டமரையும் மனதளவில் திருப்திப்படுத்தியது. அவர்கள் தங்களை நகைக்கடைக்காரர் ராயலாக ட்ரீட் பண்ணுகிறார் என்று மனதளவில் உற்சாகப்படுத்த, ஒரு கிராம் வாங்க வந்த இடத்தில் இன்னும் அரை கிராம் சேர்த்து வாங்கி சென்றனர்.
கணவர்களுக்கு, மனைவி அருகில் இருக்கும் போதே சைட் அடிப்பது எப்படி திரில்லாக இருக்கிறதோ, அதேபோல மனைவிக்கும் கணவன் அருகில் இருக்கும் போது சைட் அடிப்பது ஒரு திரில்லான விஷயம். அது சம உரிமையும் கூட. ஏனென்றால் ஆண்களும் பெண்களும் சமம் தானே. ஆதலால் கடையில் வேலை செய்யும் ஆண்களையும், சிறு வயது ஆட்களாவும், பார்ப்பதற்கு நன்றாக இருப்பவர்களாகும் நீட்டாக டிரஸ் செய்துகொண்டு பண்பாக பழகக் கூடியவர்களாகவும் தேர்ந்தெடுத்தான். நகைகளை எடுத்துக்காட்டும் போது முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் அந்த பெண்கள் கேட்கும் நகையெல்லாம் அவர்களுடன் உரையாடிபடியே எடுத்து காண்பித்தனர். அந்தப் பெண்களும் அவர்களை கணவனுக்கு தெரியாமல் ஓரக்கண்ணால் சைட் அடித்தபடி, அவர்களுடன் ஜோவியலாக பேசியவாறு, ஒன்றுக்கு இரண்டு நகைகளை எடுத்து போட்டு பார்த்து, அவர்களிடமே அழகாக இருக்கிறதா என்று கேட்டு தேர்ந்தெடுத்தனர்.
இவ்வாறு மாற்றங்களை செய்தவுடன் வியாபாரம் ஏறத் தொடங்க, லாபமும் கூடிக் கொண்டே சென்றது. லாபம் கூடியவுடன் கடையை விரிவுபடுத்தினர். கடை பெரிதானவுடன் வியாபாரம் இரட்டிப்பாக, லாபமும் இரட்டிப்பாக, கோவை மாநகரில் மற்றும் ஒரு கடையை திறந்தனர். இவ்வாறு லாபம் கூட கூட, அடுத்தடுத்து இரண்டு கடைகளை திறக்க, இப்போது நான்கு கடைகளும் ஆஷிஷின் நிர்வாகத்தின் கீழ் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.