14-01-2023, 09:32 AM
(This post was last modified: 14-01-2023, 09:32 AM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
ரிசெப்ஷனிலிருந்து தனியாக ஒரு பாதை. அதில் சென்றால் படிக்கட்டுகள் இருக்க, மேலேறினால் மலையை செதுக்கி சீர்படுத்தி மேலடுக்கு போன்று தோற்றமுடைய பகுதியில் தங்குவதற்கு 5 காட்டேஜ்கள்.. அங்கேயும் கீழே இருப்பதை போன்று தனித்தனி 5 காட்டேஜுகள் . தேனிலவு தம்பதிகளுக்கு ஏற்ற அம்சமான அமைப்புகளுடன், எந்தவித டிஸ்டர்ப் இல்லாமல் பொழுதை நல்லா களிப்பதற்காகவே கட்டப்பட்ட அமைப்புதான் இந்த காட்டேஜ். சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்கள் இருக்க மின்வேலி சுற்றிலும் பொருத்தப்பட்டு பரந்த புல்வெளியும், ஆங்காங்கே மலையின் இயற்கையை ரசிக்க சின்ன சின்ன குடிசை போன்ற பகுதிகள். ஓய்வு எடுக்கவும், இயற்கையை ரசிப்பதற்கும்,, சில நேரங்களில் தேனிலவு தம்பதிகளுக்கு விளையாட ஏற்ற இடங்கள் . அதன் நடுநடுவே அழகான வண்ண மலர்கள் கொண்ட செடிகளும், மிக அழகாக அமைந்திருந்தது.