14-01-2023, 09:30 AM
(This post was last modified: 14-01-2023, 09:30 AM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
அந்த ரிசார்ட் பல மலைகளுக்கு நடுவில், ஒரு சிறிய மலைஉச்சியில், 50 ஏக்கர் பரப்புள்ள இடத்தில அமைந்திருந்தது. ரிசார்ட்டின் கேட்டை திறந்தால்....... ஒரு நீண்ட கார் போகுமளவுக்கு சிமெண்ட் சிலாப் பொருத்தப்பட்ட காரிடர் பாதை....... அதன் ஓரத்தில் எல்லாம் அழகிய குரோட்டன்ஸ் செடிகள். அப்பாதையின் முடிவில் வலப்பக்கம் கார் பார்க்கிங் இருக்க, நடுவில் ரிசெப்ஷன். அதன் பின்னால் பெரிய அலங்கரிக்கப்பட்ட டைனிங் ஹால். அதன் பக்கவாட்டிலேயே கிட்சன் இருக்க, பின்னால் இரண்டு ரூம்கள் காட்டேஜ் பணியாளர்களுக்காக.அதை விட்டு வெளியே வந்தால் பரந்த புல்வெளி. அதில் தங்குவதற்கு 5 காட்டேஜ்கள் டைப் ரூம்கள் இருக்க ஒவ்வொரு காட்டேஜுக்கும் தனித்தனி சிமெண்ட் சிலாப் பொருத்திய காரிடர் பாதைகள். அப்புல்வெளியை தாண்டினால் 200 மீட்டர் தூரத்தில் 5 காட்டேஜுகள். அதுவும் தனித்தனியாக 100 மீட்டர் இடைவெளியில் ஒவ்வொரு காட்டேஜுக்கும் அடுத்த காட்டேஜுக்கும் சம்மந்தமில்லாமல் செடிகளும் மரங்களும் மறைத்திருக்கும்.