28-12-2022, 10:49 AM
லைக்ஸ், கமெண்ட்ஸ், வ்யூஸ், ரேட்டிங்க்ஸ் பற்றியெல்லாம் இனி வருத்தப்பட்டு எந்த பதிவும் போடுவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் மன ஆதங்கம் தாங்க முடியாமல் எழுத வேண்டியதாகி விட்டது.
சமீபமாக கதையின் போக்கில் மாற்றம் செய்து நேரமும் மூளையும் செலவிட்டு கதையை நன்றாகவே கொண்டு போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இனி வரும் பகுதிகளும் இது வழக்கமான காமக் கதை மட்டுமல்ல என்பதை நிருபிக்கும் வகையில் காட்சிகளை கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.
கதையில் சுவாரசியமான சம்பவங்களும் இருக்கின்றன. காமம் சொட்ட சொட்டவும் எழுதி வருகிறேன். தவறாமல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு பகுதியை பதிவு செய்கிறேன்.
ஆனால் இரண்டு மூன்று வருடங்களாக அப்டேட் போடாத கதைகளில் சென்று அப்டேட் அப்டேட் என்று கமெண்ட் போட்டு தாக்குகிறார்கள். அபத்தமான எழுத்துப் பிழைகளும், வாத்தை பிழைகளும் நிரம்பிய, எந்த புதிய யுக்தியும் இல்லாத மொக்கை கதைகளுக்கு கூட கமெண்ட்டும் வ்யூஸ்ம் அள்ளுகின்றன.
வாசகர்களும் ரசிகர்களும் என்ன தான் எதிர்பார்க்கிறார்கள் என்றே புரியவில்லை. கமெண்ட் எழுத நேரம் அதிகமாகும் என்பதால் லைக்ஸ்ம் ரேட்டிங்மாவது கொடுங்கள் என்று கூட கேட்டு பார்த்து விட்டேன். ஆரம்பத்தில் 35 ஐடிகள் லாகின் பண்ணி படித்த கதை 10 பேர் கூட லாகின் படிப்பதில்லை. வ்யூஸ்ம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
கதை பிடிக்கவில்லை என்றால் அது பற்றி கமெண்ட் போட்டாலாவது கதையை அதற்கேற்ப கொண்டு போகலாம்.
ஒண்ணும் புரியவில்லை.
இறுதியாக சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்தபடி கண்டிப்பாக கதையை பாதியில் நிறுத்த மாட்டேன். பதிவுகள் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும். ஆனால் இது வரை எழுதி வைத்துள்ள பகுதிகளை பதிந்த பின் மேற்கொண்டு எழுத ஒரு உற்சாகம் வர வேண்டும். அதைதான் எதிர்பார்க்கிறேன்.
என்னமோ மனதில் தோன்றியதை சொல்லி விட்டேன். நடப்பது நடக்கட்டும்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.