30-05-2019, 11:04 AM
வாங்கி சென்ற ஐட்டங்களை அவளிடம் சென்று கொடுத்தான். அவள் ஆர்வமாக அதை பிரித்து உண்ண ஆரம்பித்தாள். பிஸ்ஸாவை ஒரு கவ்வு.. பரிட்டோவை ஒரு கடி.. கோக்கை ஒரு குடி.. கலந்துகட்டி அடித்தாள்..!! அசோக் அவள் சாப்பிடுவதையே பாஸ்தா மென்றுகொண்டு, பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
"எனக்கும் உன்னை ஞாபகம் இருக்கு.." அவள் அசை போட்டுக்கொண்டே திடீரென சொன்னாள்.
"வாட்..??"
"இல்ல.. நானும் உன்னை இங்க அடிக்கடி பாத்திருக்கேன்.. உன்னை நல்லா எனக்கு ஞாபகம் இருக்குன்னு சொன்னேன்..!!" அவள் அவ்வாறு சொன்னதும், இப்போது அசோக்கிடம் ஒரு திடீர் உற்சாகம்.
"ஓ..!! இஸ் இட்..??" என்று வாயெல்லாம் பல்லாக கேட்டான்.
"ம்ம்..!! நல்ல பையன் மாதிரி இருக்கான்னு தோணும்.. அப்புறம்.."
"ம்ம்..?? அப்புறம்..??"
"நல்லா ஸ்மார்ட்டா இருக்கான்னு தோணும்..!!" சொல்லிவிட்டு அவள் கண்சிமிட்ட, அசோக்குக்கு ஜிவ்வென வானத்தில் பறப்பது மாதிரி இருந்தது.
"நெ..நெஜமாவா சொல்ற..??"
"உனக்கு நம்புறதுக்கே கஷ்டமா இருக்குல..??" அவளுடைய வார்த்தையில் இருந்த குறும்பை உணராமல், அசோக்கும்
"ம்ம்.. யெஸ்..!!!" என்று இளித்தான்.
"பட்.. அதுதான் உண்மை.. நானும் உன்னை சைட் அடிச்சிருக்கேன்..!!"
"ஓ..!!" அசோக் வாயை பிளந்தான்.
"இதுலாம் தப்பு இல்லையா..??"
"ஐயோ.. இதுல என்ன தப்பு இருக்கு..?? நீ சைட் அடிக்க நான் குடுத்து வச்சிருக்கணும்.. நீ எவ்ளோ வேணா என்னை சைட் அடிச்சுக்கோ.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!"
"ப்ச்.. நான் அதை சொல்லல..!!"
"அப்புறம்..??"
"யாரு என்னன்னு தெரியாம சைட் அடிக்கிறது என்னவோ சகஜந்தான்.. ஆனா.. என்னை பத்தி எதுவுமே தெரியாம.. என்னை லவ் பண்றேன்னு சொல்றியே..?? அதை கேட்டேன்..!! தப்பு இல்லையா..??"
"எதுவே தெரியாம வர்றதுக்கு பேருதான் காதல்.. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வந்தா அதுக்கு பேரு கால்குலேஷன்..!!"
"ஓ..!! இது ஏதோ விக்ரமன் படத்துல வர்ற டயலாக்தான..??"
"ஐயையோ.. இது என்னோட ஒரிஜினல் டயலாக்.. நான் தமிழ்ப்படம் பாக்குறதே இல்ல.. அதுவும் விக்ரமன் படம் பாக்குறதே இல்ல..!!"
"ம்ம்ம்.. அப்போ.. என்னை பத்தி எதுவுமே உனக்கு தெரியவேணாம்.. அப்படியா..??"
"அடடடா.. தெரிஞ்சுக்கனும்பா.. அதுக்காகத்தான இவ்வளவு கஷ்டப்பட்டு பேசிட்டு இருக்கேன்..??"
"ஓ..!! அப்போ.. என்கூட பேசுறது உனக்கு கஷ்டமா இருக்கு.. இல்ல..??"
"ஷ்ஷ்.. என்னால முடியல..!! இப்படி குண்டக்க மண்டக்க கேட்டா.. நான் என்ன சொல்றது..??" அசோக் பரிதாபமாக கேட்க,
"உன்னை பத்தி சொல்லு..!!" அவள் பட்டென சொன்னாள்.
"ஆங்..??"
"மொதல்ல உன்னை பத்தி சொல்லு.. அதுக்கப்புறம் நான் என்னைப் பத்தி சொல்றேன்னு சொன்னேன்..!!"
"என்னை பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு..?? பேரு அசோக்.. வயசு இருபத்தஞ்சாகுது.. பொறந்து வளந்ததுலாம் சென்னைதான்.. விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சிருக்கேன்.. ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து ஒரு அட்வர்டைஸிங் பிஸினஸ் பண்றேன்.. ஏதோ கடவுள் புண்ணியத்துல பிஸினஸ் நல்லபடியா போயிட்டு இருக்கு..!!"
"ம்ம்.. அசோக்கா உன் பேரு..?? நைஸ் நேம்..!!"
"ஹ்ஹ.. பிடிச்சிருக்கா..?? ஓகே.. உன் பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..??"
"உன் ஃபேமிலி பத்தி சொல்லு.. அப்புறம் சொல்றேன்..!!"
"ஃபேமிலி பத்தியா..?? அப்பா கனரா பேங்ல கரன்சி கவுண்ட் பண்றாரு.. அம்மா வீட்டுலையே கரண்டி உத்தியோகம் பாக்குறாங்க.. தங்கச்சி படிச்சு முடிச்சுட்டு வீட்டுல சும்மா இருக்குறா.. நல்லா சாப்பிடுவா, நல்லா தூங்குவா.. முழிச்சிருக்குறப்போ பாதி நேரம் பாடுவா.. மீதி நேரம் என்கூட சண்டை போடுவா..!! அப்புறம்.. தாத்தா பாட்டி.. ரெண்டு நாய்க்குட்டிங்க.. அவ்ளோதான் என் ஃபேமிலி..!!"
"ம்ம்.. இன்ரஸ்டிங் ஃபேமிலி..!!"
"ம்ம்.. வேற என்ன என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்..??"
"நீ போட்ருக்குற இந்த ஷர்ட்.. என்ன ப்ராண்ட்..??" அவள் திடீரென அவ்வாறு கேட்க,
"லீ..!! ஏன் கேக்குற..??" அசோக் குழப்பத்துடனே பதில் சொன்னான்.
"பேன்ட்..??"
"லீவைஸ்..!!"
"கால்ல போட்ருக்குற ஷூ..??" அவள் சற்றே தலையை சாய்த்து அவனுடைய காலை பார்த்தவாறே கேட்க,
"லீ கூப்பர்..!! ஏன் இதுலாம் கேக்குற..??" அசோக் புருவத்தை நெறித்தான்.
"லீ.. லீ.. லீ..!! எல்லா லீ'ஸ்மே காஸ்ட்லீஸ்.. இல்ல..??"
"ம்ம்..!! ஆமாம்..!!"
"அதுக்காகத்தான் கேட்டேன்..!!" அவள் சொன்னதை அசோக்கால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
"புரியல.. கொஞ்சம் எக்ஸ்ப்ளயின் பண்றியா...??"
"உனக்கு இப்போ எக்ஸ்ப்ளயின் பண்ணனுமா..?? இல்ல என்னை பத்தி சொல்லனுமா..??" அவள் அவ்வாறு கேட்கவும், அசோக் சற்றே குழம்பினான்.
"ச..சரி.. உன்னை பத்தி சொல்லு..!! உன் பேர் என்ன..??"
"ம்ம்ம்... மிர்ச்சி..!!" அவள் சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.
"மிர்ச்சியா..???? அப்டிலாமா பேர் வைப்பாங்க..??"
"சேச்சே.. அது என் நிக்நேம்..!! ஃப்ரண்ட்ஸ்லாம் அப்டித்தான் என்னை கூப்பிடுவாங்க...??"
"ஓ.. அப்போ.. அப்பா அம்மா வச்ச பேர்..??"
"மீரா..!!"
"வாவ்..!! நைஸ் நேம்..!! ஆக்சுவலா.. எனக்கு கூட கிருஷ்னு பேர் வைக்கனும்னுதான் என் தாத்தா ஆசைப்பாட்டாராம்.. ஐ மீன் கிருஷ்ணன்..!! அப்புறம் என் அம்மாதான் அடம்புடிச்சு அசோக்னு வச்சுட்டாங்க..!! ஹ்ம்ம்... மீரா அலையாஸ் மிச்சி.. லவ்லி.. நல்லாருக்கு..!! ம்ம்... என்ன படிச்சிருக்குற நீ..??"
"எஞ்சினியரிங்..!!"
"என்ன விஷயமா இங்க டெயிலி வர்ற..?? இங்க எங்கயும் வொர்க் பண்றியா..??"
"இல்ல..!! இ..இங்க.. ஆப்டெக் சென்டர் இருக்குதுல.. அங்க ஒரு கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறேன்..!!"
"ஓ..!! என்ன கோர்ஸ்..??"
"ம்ம்.. மாயா...!!!!"
"வாவ்.. அனிமேஷன் கோர்ஸ்ல..??"
"ஆ..ஆமாம்..!!"
"அனிமேஷன்ல இன்ட்ரஸ்ட் உண்டா..?? தேட்ஸ் நைஸ்..!! ஹ்ம்ம்... சென்னைதான் சொந்த ஊரா..??"
"இல்ல..!! பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!"
"ஓ..!! அப்போ உனக்கு தெலுங்கு நல்லா தெரியுமா..??"
"ம்ம்.. தெரியும்..!! நோரு மூஸ்குனி அதுகு..!!"
"அப்படினா..??"
"வாயை மூடிட்டு மேல கேளுன்னு அர்த்தம்..!!"
"ஓ..!! சரிசரி.. சொல்லு..!!"
"எனக்கு ஒரு அண்ணன்.. ஒரு அக்கா.. ஒரு அப்பா.. ஒரு அம்மா..!!"
"ஹாஹா..!! அண்ணன் அக்கா ஓகே.. அப்பா அம்மா கூடவா அதே மாதிரி சொல்வ..??"
"ம்ம்..!! இப்போதைக்கு அவ்வளவுதான் என்னைப்பத்தி..!!"
"ஹ்ம்ம்.. எனக்கும் இப்போதைக்கு இவ்வளவு போதும்..!! அ..அப்புறம்.. இன்னொரு விஷயம் மீரா.."
"மிர்ச்சினு கூப்பிடேன்.. ப்ளீஸ்..!!"
"எ..எனக்கு மீரா பிடிச்சிருக்கே.. அப்படியே கூப்பிடுறேனே.. ப்ளீஸ்..!!"
"சரி.. உன் இஷ்டம்..!!"
"தேங்க்ஸ்..!!"
"சரி.. என்ன கேட்க வந்த..??"
"ஹ்ம்ம்.. அ..அது.. நான் சொன்னதை பத்தி ஏதும் யோசிச்சியான்னு கேட்க வந்தேன்..!!"
"என்ன சொன்ன..??"
"ஹையோ.. உன்னை லவ் பண்றேன்னு சொன்னேனேம்மா..??"
"அதுவா..?? ம்ம்ம்ம்.. என்ன சொல்றது.. நானும் லவ் பண்றதுக்கு எவனாவது கெடைக்க மாட்டானான்னுதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!!" அவள் அப்படி சொல்ல, அசோக் மிகவும் உற்சாகமானான்.
"ஓ.. இஸ் இட்..?? நீ என்னை லவ் பண்ணலாமே..?? அசோக் ரொம்ப நல்ல பையன் மீரா..!!"
"பாக்கலாம் பாக்கலாம்.. நீ எவ்வளவு தூரம் தாக்கு பிடிக்கிறேன்னு..!!"
"என்னது..????"
"ஐ மீன்.. நீ எவ்வளவு தூரம் நல்லா நடந்துக்குறேன்னு பாக்கலாம் சொன்னேன்..!!"
"கண்டிப்பா ரொம்ப நல்லா நடந்துப்பேன்.. என்னை மாதிரி ஒரு நல்ல பையனை நீ பாத்திருக்கவே மாட்ட..!!"
"ஓஹோ..?? ஓகே ஓகே..!!"
"சரி..!! இப்போ.. நாம கொஞ்சம் நம்மளை பத்தி தெரிஞ்சுக்கலாமா..??"
"எப்படி...??"
"நம்மோட இன்ட்ரஸ்ட்ஸ் ஷேர் பண்ணிக்கலாம்..!!"
"பண்ணிக்கலாமே..??"
"கேள்வியை நான் கேட்கவா.. நீயே கேட்கிறாயா..??"
"நீயே கேளு..!!"
"ஹ்ம்ம்.. ஓகே...!! ம்ம்ம்... உன்னோட ஃபேவரிட் மூவி எது..??"
"ம்ம்... டைட்டானிக்..!!"
"குட்..!! ஃபேவரிட் பொலிட்டிகல் லீடர்..??"
"ம்ம்... சோனியா..!!"
"நைஸ்..!!"
அசோக் அதன்பிறகும் மீராவை நிறைய கேள்விகள் கேட்டான். எல்லாமே அவளுடைய ஆசை, ஆர்வம், லட்சியம் பற்றிய கேள்விகள். அவளும் எல்லா கேள்விகளுக்கும், அமைதியாக பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டே இருந்தாள். அப்புறம் எதேச்சையாக மணிக்கட்டை திருப்பி பார்த்தவள், அவசரமாக சொன்னாள்.
"ஹேய்.. எனக்கு ரொம்ப டைமாச்சுபா.. நான் கெளம்புறேன்..!!"
"ஐயையோ.. இப்படி பொசுக்குனு எழுந்து போனா என்ன அர்த்தம்..??"
"வேற என்ன பண்ணனும்..??"
"நான் திரும்ப உன்னை காண்டாக்ட் பண்ணனும்னா எப்படி பண்றது..?? அட்லீஸ்ட் உன் ஃபோன் நம்பராவாது கொடுத்துட்டு போகலாமே..??"
"ஓ.. அட்லீஸ்ட் ஃபோன் நம்பரா..?? இரு.. தர்றேன்..!!" என்றவள், குனிந்து தனது பேகில் எதையோ தேடினாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி,
"ம்ம்.. கையை நீட்டு..!!" என்றாள்.
அசோக் தனது கையை நீட்டினான். அவள் பட்டென்று அந்த கையை பற்றினாள். பேகில் இருந்து எடுத்த பால்பாயிண்ட் பேனாவால், அவனுடைய உள்ளங்கையில் கிறுக்க ஆரம்பித்தாள். அசோக்கிற்கு என்னவென்று சொல்ல முடியாத மாதிரியான ஒரு உணர்ச்சி..!! முதன்முறையாக அவளுடைய ஸ்பரிசம்.. அவளுடைய தளிர்க்கைகளின் மென்மை.. தனது உள்ளங்கையில் ஏற்பட்ட ஒரு குறுகுறுப்பு.. அவளுடைய நெருக்கத்தால் அவளிடம் இருந்து கிளம்பிய வாசனை..!! ரத்த ஓட்டம் படக்கென சொடுக்கிவிடப்பட்டிருக்க.. ஒருமாதிரி சொக்கிப்போய் அமர்ந்திருந்தான்..!!
"ம்ம்.. இதுதான் என் நம்பர்.. ஓகேவா..??"
அவள் எழுந்து கொள்ள முயல, அசோக் இப்போது உடனடியாய் சுதாரித்துக்கொண்டான். அவசரமாய் அவளை தடுத்து நிறுத்தினான்.
"ஹலோ ஹலோ.. ஒரு நிமிஷம்..!!"
"எ..என்ன..??"
மீரா குழப்பமாய் அசோக்கை பார்க்க, அவனோ தனது சட்டை பாக்கெட்டை துழாவி எதையோ தேடினான். பிறகு அந்த காகிதத்தை எடுத்தான். டேபிள் மீது வைத்தான். அதை அப்படியே மீராவின் பக்கமாய் நகர்த்தினான்.
"எ..என்ன இது..??" அவள் புரியாமல் கேட்டாள்.
"இதுவா..?? டேகோ பெல்லோட டேக் ஹோம் பில்..!! பரிட்டோ எயிட்டி ஃபைவ் ருபீஸ்.. டயட் கோக் ஒரு தேர்ட்டி த்ரீ.. டேக்ஸோட சேர்த்து.. ஒன் தேர்ட்டி ஃபோர்..!!" அசோக் புன்னகையுடன் சொல்ல, அவள் இவனை கடுப்புடன் முறைத்தாள்.
"பொண்ணுககிட்ட எப்படி பிஹேவ் பண்ணனும்னே உனக்கு தெரியாதா..??" என்று கடுமையாக கேட்டாள்.
'பொண்ணுககிட்ட எப்படி பேசணும்னே உனக்கு தெரியாதா..??' அந்த ரெட்டை ஜடை ப்ளஸ் டூ பெண் அசோக்கை பார்த்து, எப்போதோ கேட்ட கேள்வி, ஏனோ இப்போது அவனுடைய காதுக்குள் ரீங்காரமிட்டது. ஒருசில வினாடிகள் பழைய நினைவில் மூழ்கியவன், பிறகு சரக்கென தலையை சிலுப்பி நிகழ்காலத்துக்கு வந்தான். சற்றே தைரியமான குரலில் அவளிடம் கேட்டான்.
"ஹலோ.. இப்போ என்ன நான் மிஸ்பிஹேவ் பண்ணிட்டேன்..??"
"பின்ன..?? செலவும் பண்ணிட்டு.. பில்லும் நீட்டுற..??"
"வேற என்ன பண்றது..?? அட்லீஸ்ட் நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லிருந்தாலாவது.. நம்மோட லவ்வருக்கு செலவு பண்ணிட்டோம்னு மனசுல ஒரு திருப்தி இருக்கும்..!! ஆனா.. இப்போ வரைக்கும் நீ எனக்கு யாரோ ஒரு ஸ்ட்ரேஞ்சர்தான..?? உனக்கு செலவு பண்ணனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா..?? பணத்தை வச்சுட்டு கெளம்பு..!!"
'காசு வீணாக போகிறதே..' என்று ஏதோ ஒரு கடுப்பில் தைரியமாக அசோக் அவ்வாறு பேசிவிட்டான். ஆனால் பேசியபிறகு, அவள் எதுவும் கடித்து குதறி விட போகிறாளோ என சற்றே மிரட்சியாய் அவளை ஏறிட்டான். அவளும் இவனை உர்ரென்று முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒருசில விநாடிகள்தான். பிறகு பட்டென முகம் மாறினாள். திடீரென அவளுடைய முகத்தில் ஒருவித மலர்ச்சி.. உதட்டில் ஒரு புன்னகை..!!
"ச்சோ.. ச்ச்வீட்..!!!!" என்றாள் அசோக்கை பார்த்து.
அசோக் ஒருகணம் குழம்பிப் போனான். 'கோபமாக சீறப் போகிறாள் என்று எதிர்பார்த்தால்.. கொஞ்சுகிறாளே..??'. வியப்பாக அவளை பார்த்தான். அவளோ இவனுடைய முகத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவென்று கண்டுபிடிக்க முடியாத மாதிரியான ஒருவித உணர்ச்சி அவளுடைய முகத்தில்.. இதழ்களில் இதயத்தை கொள்ளை கொள்கிற மாதிரியான ஒரு புன்சிரிப்பு.. கண்களில் ஒரு வசீகர மின்னல்..!! ஓரிரு வினாடிகள்.. அப்புறம் அந்த அழகு அதரங்களை அசைத்து.. தெள்ளத்தெளிவான குரலில் சொன்னாள்..!!
"ஐ லவ் யூ..!!!!!"
அசோக் அப்படியே ஆடிப்போனான்..!! ஓல்ட் மங்க் குவார்ட்டரை ஒரே கல்ப்பில் அடித்த மாதிரி குப்பென்று இருந்தது..!! இதயத்தில் ஒரு உற்சாக ஊற்று சர்ர்ர்ரென பீறிட்டு கிளம்பியது..!! காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை அவனால்..!! விழிகள் விரிந்து போயிருக்க.. பேச வார்த்தை இல்லாதவனாய்.. மீராவின் முகத்தையே திகைப்பாக பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..!!
அவளுடைய முகத்தில் இப்போது ஒரு திருப்தி புன்னகை..!! தன் பக்கம் இருந்த அந்த பில்லை ஒற்றை விரலால் அழுத்தி.. இப்போது மீண்டும் அசோக்கின் பக்கமாய் நகர்த்தினாள்.. அமைதியாக புன்னகையுடன் சொன்னாள்..!!
"நவ்.. பே த பில்..!!!!"
சொல்லிவிட்டு ஒருநொடி கூட அவள் தாமதிக்கவில்லை. படக்கென சேரில் இருந்து எழுந்தாள். விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அசோக் சிலவினாடிகள் செயலிழந்து போய் அமர்ந்திருந்தான். பிறகு சட்டென சுதாரித்துக்கொண்டு எழுந்தான். தூரத்தில் சென்ற அவளுடைய முதுகைப் பார்த்து கத்தினான்.
"ஹேய்..!!!!!"
அதற்குள்ளாகவே அவனுடைய நண்பர்கள் அவர்களுடைய இடத்தை விட்டு எழுந்து வந்திருந்தனர். அவசரமாய் வந்து இவனை சூழ்ந்து கொண்டனர். ஆர்வம் மிகுந்த குரலில், ஆளாளுக்கு இவனைப்போட்டு பிய்த்து எடுத்தனர்.
"டேய்.. மச்சி.. என்னாச்சுடா..?? பேசுனியா.. என்ன சொன்னா அவ..?? ஹேய்.. சொல்லுடா..!!"
அசோக் சில வினாடிகள் மீரா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மனதில் பலப்பல கேள்விகளுடனே, மெல்ல நண்பர்களிடம் திரும்பினான்.
"ஏய்.. சொல்லு மச்சி.. கேட்டுட்டு இருக்கோம்ல..?? என்ன சொல்லிட்டு போறா அவ..??" சாலமன்தான் மிகவும் ஆர்வமாக இருந்தான்.
"ஐ லவ் யூ'ன்னு சொல்லிட்டு போறடா.. அவ ஃபோன் நம்பர் குடுத்துட்டு போயிருக்கா..!!"
அசோக் கேஷுவலாக சொன்னவாறே தனது உள்ளங்கையை விரித்து காட்டினான்.
அவ்வளவுதான்..!! அவர்கள் மூவரும் வாழ்நாளில் மிகவும் மோசமான ஒரு அதிர்ச்சியை மொத்தமாக உள்வாங்கினர்..!! பின்னந்தலையில் யாரோ இரும்புத்தடியால் அடித்துவிட்டது போல.. சித்தம் கலங்கிப்போய்.. சீயான் பார்வை ஒன்றை வீசியவாறு நின்றிருந்தான் வேணு..!! 'பேசுனதுமே ஐ லவ் யூ சொல்லிருக்கா.. பேசாம நாம போட்டியில கலந்திருக்கலாமோ..??' என்று.. கேத்தரினாவை கூட மறந்து போய்.. கேவலமாய் ஒரு எண்ணத்தில் திளைத்திருந்தான் சாலமன்..!! கிஷோரின் நிலைதான் மிகவும் பரிதாபகரம்.. அவனுடைய மூளைக்குள்.. தங்லீஷில் யாரோ தாறுமாறாய் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள்..!!
'தி ஸோர்ஸ் ஆஃப் கீ இஸ்.. கேப்பை..!!'
'டிரைவர் ஆஃப் திஸ் ஏரோப்ளான் இஸ்.. எருமை..!!'
'பேர்ட் தேட் கேன் ஃப்ளை பேக்வேர்ட்ஸ் இஸ்.. காக்கை.!!'
மூன்று பேருமே மூன்றாம் பிறை கமலஹாசன் மாதிரி.. அசோக்கையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருக்க.. சாலமன்தான் முதலில் அந்த நிலையை விட்டு சுதாரித்துக் கொண்டான்..!! தன் தலையில் 'நச்ச்ச்'சென்று அடித்தவாறே வெறுப்புடன் சொன்னான்..!!
"என்ன க்க்கொடுமை ஸார் இது..???"