30-05-2019, 11:04 AM
அவள் இவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. சாப்பாட்டிலேயே கவனமாக இருந்தாள். மழுங்கிப்போன கத்தியால் பிஸ்ஸாவை துண்டம் செய்வதும், ஃபோர்க்கால் அந்த துண்டை குத்தி எடுத்து வாய்க்குள் திணிப்பதும், உதடுகள் அழகாக அசைய அந்த உணவை சுவை பார்ப்பதுமாக இருந்தாள். மேலும் சில வினாடிகள்..!! பிறகு அவள் ஒருமுறை எதேச்சையாக இவன் முகத்தை ஏறிட்ட போது, அசோக் அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அவசரமாக சொன்னான்.
"ஹாய்..!! ம்ம்ம்ம்... எ..எனக்கு.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..!!"
அவள் இப்போது நெற்றியை சுருக்கி 'என்ன..?' என்பதுபோல இவனை பார்க்க, அசோக்கே தொடர்ந்தான்.
"ஆ..ஆக்சுவலா நான் ஒரு த..தத்தி.. எனக்கு இதுலாம்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
"வாட்..??" அவள் இடைமறித்து கேட்டாள்.
"இ..இல்லைங்க.. ஆக்சுவலா.."
"ஹலோ.. கொ..கொஞ்சம் சத்தமா பேசுறீங்களா.. ப்ளீஸ்..?? எ..எனக்கு காதுல கொஞ்சம் ப்ராப்ளம்.. காது சரியா கேட்காது..!!"
அவள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, பரிதாபமான குரலில் சொல்ல, அசோக் இப்போது மெலிதாக அதிர்ந்தான். 'என்னது..?? காது.. கேக்காதா..?? இது என்னடா புதுப்பிரச்னை..??' என்று ஓரிரு வினாடிகள் தடுமாறினான். அவளை ஒருமுறை இரக்கமாக ஒருபார்வை பார்த்தான். அப்புறம் உடனடியாய் சமாளித்துக் கொண்டு, சற்றே சத்தமான குரலில் மீண்டும் ஆரம்பித்தான்.
"ஒ..ஒன்னுல்லங்க.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. நான் ஒரு.."
"இல்லைங்க.. எனக்கு சுத்தமா கேக்கல.. இன்னும் கொஞ்சம் சத்தமா.. ப்ளீஸ்..!!" அவள் கெஞ்சலாக சொல்ல, குழம்பிப்போன அசோக்
"ஹையோ.. நான் ஒரு தத்தின்னு சொன்னேங்க..!!" என்று கத்தியே விட்டான்.
உடனே அந்த இடத்தில் சட்டென்று ஒரு நிசப்தம்..!! அவர்கள் அமர்ந்திருந்த டேபிளை சுற்றிய ஐந்தாறு டேபிளில் அமர்ந்திருந்தவர்கள்.. சாப்பிடுவதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டு.. சடக்கென திரும்பி அசோக்கை பார்த்தார்கள்..!! அசோக்கிற்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை..!! 'எல்லாரும் ஏன் என்னையே பார்க்கிறார்கள்..??' என.. சிலவினாடிகள் திருதிருவென விழித்தவனுக்கு.. அப்புறம்தான் 'தானே தன்னைப் பற்றி கேவலமாக சொல்லி கத்திவிட்டோம்' என்ற உண்மை உறைத்தது..!!
"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"
சிரித்தது வேறு யாரும் அல்ல.. இவனுக்கு எதிரே அமர்ந்திருந்தவள்தான்..!! அவளுடைய பற்கள் எல்லாம் பளீரிட.. எளிறுகள் எல்லாம் பளிச்சென தெரிய.. ஒரு கையால் வயிறை பிடித்தவாறு.. இவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்..!! அசோக்கிற்கு லேசாக அடிவயிறில் கிலி கிளம்ப ஆரம்பித்தது..!! 'என்ன இது.. ஆரம்பமே ஒன்னும் சரி இல்லையே..??' என்று விளக்கெண்ணெய் குடித்துவிட்டவன் மாதிரி 'பே' என்று விழித்தான். எல்லோரும் இன்னும் இவனையே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது அசோக் அவர்கள் எல்லாரையும் தனித்தனியாக பார்த்து ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தி, அவரவர்களின் பார்வையை திருப்பிக் கொள்ள செய்தான்.
"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" அவள் இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். அசோக் இப்போது சற்றே கடுப்பாக அவளை பார்த்தான்.
"ஹலோ ஹலோ.. போதுங்க.. நிறுத்துங்க..!!"
"ஹையோ.. கடவுளே.. முடியல என்னால.. ஹாஹா..!!"
"ஷ்ஷ்... ப்பா.. ஏங்க இப்படிலாம்..??"
"எப்படிலாம்..??" அவள் இப்போது சிரிப்பை நிறுத்திவிட்டு இவனை கூர்மையாக பார்த்தாள்.
"உங்களுக்கு காது நல்லா கேட்குந்தான..??" அசோக் சற்றே எரிச்சலுடன் கேட்க,
"கண்டுபிடிங்க பாக்கலாம்..!! உங்களுக்கு மூளை நல்லா வேலை செய்யுந்தான..??" அவள் கிண்டலாகவே பதில் சொன்னாள்.
"என்னங்க நீங்க.. வந்ததுல இருந்து ஏடாகூடமாவே பேசிட்டு இருக்கீங்க..??"
"ம்ம்.. நீங்களுந்தான் வந்த விஷயத்தை மறந்துட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க..??"
"ஹையோ.. அதைத்தாங்க சொல்ல வந்தேன்.. அதுக்குள்ள நீங்க.."
"சரி.. இப்போ சொல்லுங்க..!!" அவள் படக்கென சொல்லிவிட்டு அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்க்க,
"அ..அது.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. ஆக்சுவலா நான் ஒரு தத்.." என்று ஆரம்பித்த அசோக் பட்டென நிறுத்தி,
"இல்ல.. நான் வேற எங்கயாவது இருந்து ஆரம்பிக்கிறேன்..!!" என்று பரிதாபமாக சொன்னான்.
"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"
"ஹலோ.. சிரிக்காதிங்க ப்ளீஸ்..!!"
"சரி சிரிக்கல.. மேல சொல்லுங்க..!!"
அப்படி சொன்னாலும், அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாயைப் பொத்தியவாறு சிரித்துக் கொண்டேதான் இருந்தாள். அசோக் இப்போது சற்று நிதானித்தான். ஆரம்பத்திலேயே அவள் செய்த கலாட்டா, அவனுக்குள் ஒரு படபடப்பை கிளப்பி விட்டிருந்தது. பேச வேண்டும், ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று குழம்பினான். பிறகு அந்த குழப்பத்துடனே..
"மொ..மொதல்ல ரெண்டு விஷயங்க.." என்று ஆரம்பித்தான்.
"என்ன..??"
"ஒன்னு... நா..நான்.. நான் ரொம்ப ரொம்ப அன்பானவன்ங்க..!! ரெண்டு.. எ..என்னை கட்டிக்கப் போற பொண்ணை ரொம்ப பத்திரமா.. ரொம்ப பாதுகாப்பா பாத்துப்பேன்..!!"
"பாதுகாப்பா பாத்துப்பிங்களா..?? ஹ்ஹ.. அதுலாம் ஒரு பெரிய விஷயமாங்க..??" அவள் அசால்ட்டாக சொல்ல,
"என்னங்க இப்படி சொல்லிட்டிங்க..??" அசோக் வியப்பாக கேட்டான்.
"ஆமாம்..!! ஒரு கோல்கேட் பேஸ்ட் வாங்கி குடுத்தா மேட்டர் முடிஞ்சது.. அவங்களே பாதுகாப்பு வளையம்லாம் குடுப்பாங்களே.. ப்ராப்ளம் சால்வ்ட்..!!"
"என்னது..????" அசோக் முகத்தை ஒருமாதிரி அஷ்டகோணலாக சுளித்தான்.
"அதுசரி.. இதுலாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க..??"
"அ..அது.. வேற ஒன்னுல்ல.. நீ.. நீ..நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கள்ல.. அதனால.." என்று அவசரமாய் சொல்லிவிட்டவன், பிறகு "ஸாரி.." என்று திருட்டு முழி முழித்தான்.
"அடடா.. அதுக்கு நாந்தான தேங்க்ஸ் சொல்லணும்.. நீங்க ஏன் ஸாரி சொல்றீங்க..??"
"இ..இல்ல.. ஒருவேளை நீங்க வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா..??" படபடப்பில் அசோக் உளறி கொட்ட ஆரம்பித்திருந்தான்.
"வாட்..?? நான் யாரை லவ் பண்றேன்..??"
"ஹையோ.. அதான் ஒருவேளைன்னு சொன்னேனே.. ஒரு சந்தேகந்தாங்க..!! அ..அப்படி யாராவது இருக்காங்களா..??" அசோக்கின் குரலில் ஒரு குறுகுறுப்பு.
"ஹாஹா.. இல்ல...!!" அவள் புன்னகையுடன் மறுக்க,
"வாவ்..!! தேட்ஸ் நைஸ்.. தேட்ஸ் ரியல்லி நைஸ் யு நோ..!!" அசோக் உற்சாகமானான்.
"அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு சந்தோஷப் படுறீங்க..??"
"எனக்கு அப்போவே தெரியுங்க.. நீங்க யாரையும் லவ் பண்ணிட்டு இருக்க மாட்டீங்கன்னு..!! இந்த சாலமன் நாயிதான் என்னை கன்ஃயூஸ் பண்ணிவிட்டுட்டான்..!!"
"என்ன கன்ஃயூஸ் பண்ணான்..??"
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. இத்தனை நாளா உங்களை யாரும் விட்டு வச்சிருக்க மாட்டாங்கன்னு சொல்லி.. ரொம்ப கன்ஃயூஸ் பண்ணிவிட்டுட்டான்..!!"
"ஓ..!! அதுசரி.. அது யாரு அந்த சாலமன் நாயி...??"
"ஹாஹா.. அது என் ஃப்ரண்டுங்க.. அதோ.. அங்க உக்காந்திருக்கான்.. அவன்கூட ரெண்டு பேர் உக்காந்திருக்குறாங்களே.. அவங்களும் என் ஃப்ரண்ட்ஸ்தான்..!!"
"ஓ..!!"
"ஆக்சுவலா அவங்கதான்.. உங்களை பாத்து செலக்ட் பண்ணி.." உளறிவிட்ட அசோக் உடனே நாக்கை கடித்துக் கொண்டான். வாயிலேயே பட் என்று தட்டிக் கொண்டான்.
"வாட்..??" அவளுடைய முகத்தில் எக்கச்சக்க குழப்பம்.
"ஐயோ.. கோவப்படாதிங்க.. நா..நான் அதுக்கு முன்னாடியே உங்களை பாத்துட்டேன்.. ப்ராமிஸ்..!!"
"நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு ஒன்னும் புரியல..!!" அவள் சலிப்பாக தலையசைத்து கொண்டாள்.
"இ..இல்லைங்க.. ஆ..ஆக்சுவலா நான் என்ன சொல்லவந்தேன்னா.. ம்ம்ம்ம்.. என்ன சொல்ல வந்தேன்..?? ம்ம்ம்ம்.. நான் உங்களை இங்க அடிக்கடி பாத்திருக்கேங்க.. அழகா இருக்கீங்கன்னு தோணும்.. நல்ல பொண்ணுன்னு தோணும்.. பேசிப்பாக்கலாம்னு தோணும்..!!"
"ஓ..!!"
"ஆ..ஆனா.. நீங்கதான் என்னை கவனிச்சிருக்கீங்களான்னு எனக்கு தெரியலை..!! நான் கூட இங்க அடிக்கடி… ஆங்... நேத்து நீங்க செருப்பை எடுத்து காட்டுனீங்கள்ல.. அது என் மூஞ்சிக்கு முன்னாடிதான்..!!"
ரொம்ப பெருமையாக சொல்லிமுடித்தான் அசோக். உளறலின் உச்சபட்சத்தை எட்டியவன், லூசுத்தனமாக பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை கூட உணரவில்லை. தன்னைப் பற்றி அவளுக்கு நினைவூட்டியாயிற்று என்று அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். அவளுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. தான் அவனை டேமேஜ் செய்ததை விட, அவன் தன்னைத்தானே இன்னும் அதிகமாய் டேமேஜ் செய்து கொள்கிறானே என்பதை நினைக்கையில், அவளுக்கு சிரிப்பு பீறிட்டு கிளம்பியது. முன்பை விட அதிகமாக சிரித்தாள்.. வாய் விட்டு.. கலகலவென..!!
"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"
அவள் சிரிக்கையில் மிகவும் அழகாக இருந்தாள். ஒரு குழந்தையின் குதுகலம் அவளுடைய முகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் தெரிந்தது. அவளுடைய முத்துப்பற்களின் ஜொலிஜொலிப்பும்.. ஆரஞ்சு அதரங்களின் மினுமினுப்பும்.. பளிங்கு கண்களின் பளபளப்பும்.. அருகில் இருந்து பார்த்த அசோக்கின் மனதுக்குள் அதகளம் செய்தன..!! அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள். தத்துபித்தென்று உளறிவிட்டோம் என்பதை தாமதமாக புரிந்து கொண்ட அசோக், இப்போது ஒரு அசட்டுப் புன்னகையுடன்..
"ஹலோ.. சிரிக்காதிங்க ப்ளீஸ்..!! நான் உங்கட்ட நெறைய விஷயம் சொல்லனும்னு நெனச்சேன்.. எல்லாம் இப்படி ஆர்டர் மிஸ் ஆகி.. அதது இஷ்டத்துக்கு வெளில வருது..!!" என்று பரிதாபமாக சொன்னான்.
"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"
அவள் அதற்கும் சிரித்தாள். மேலும் சிறிது நேரம்..!! நன்றாக ஆசைதீர மனம்விட்டு சிரித்தவள், பிறகு மெல்ல மெல்ல அந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். ப்ளேட்டில் கிடந்த அந்த மிளகாய் துகள் பாக்கெட்டை கிழித்து, அவள் தட்டில் மீதமிருந்த பிஸ்ஸாவின் மேனியெங்கும் மெல்ல தூவினாள். தூவிக்கொண்டே.. இவனை நிமிர்ந்து பாராமலே.. மிக கேஷுவலான குரலில் கேட்டாள்..!!
"லவ் பண்றீங்களா என்னை..??"
அசோக் சுத்தமாக அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. பக்கென்று அதிர்ந்து போய் அவளை பார்த்தான். பட்டென்று அவனுக்கு நாக்கு வறண்டு போன மாதிரியிருந்தது.
"அ..அது... அ..அதுலாம்.. அது.."
என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறினான். அவனுடைய விரல்கள் கூட இப்போது நடுங்க ஆரம்பித்திருந்தன. அவள் இப்போது நிமிர்ந்து இவனுடைய முகத்தை ஏறிட்டாள். இவனுடைய கண்களையே ஷார்ப்பாக ஒரு பார்வை பார்த்தாள். குரலில் ஒரு புதுவித கடுகடுப்புடன் சொன்னாள்.
"இங்க பாருங்க.. மனசுல நெனச்சதை வெளில சொல்ல துப்பு இல்லாதவன.. நான் ஆம்பளையாவே கன்சிடர் பண்றது இல்ல..!! அப்புறம் உங்க இஷ்டம்..!!"
அசோக்கிற்கு வேறு வழி இருக்கவில்லை..!! இப்போது இல்லை என்று சொல்லிவிட்டு.. பிறகு ஏதாவது வில்லங்கம் நேர்ந்துவிட்டால்..?? இவளுடைய குணம் வேறு படுடெரராக இருக்கிறது..?? கிடைத்த குறுகிய நேரத்திலேயே.. யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன்.. இப்போது தட்டுத்தடுமாறி சொன்னான்..!!
"ஆ..ஆமாங்க.. ப..பண்றேன்...!!"
"பண்றீங்களா.. என்ன பண்றீங்க..?? தெளிவா சொல்லுங்க..!!" அவள் விரட்டினாள்.
"ல..லவ்வுங்க.. லவ் பண்றேங்க.." அவசரமாகவும், பரிதாபமாகவும் சொன்ன அசோக்..
"ஐ.. ஐ லவ் யூங்க..!!" என்றான் தாழ்ந்த குரலில்.
"ம்ம்.. தேட்ஸ் லைக் எ குட்பாய்..!!" அவள் புன்னகையும், திருப்தியுமாக சொன்னாள்.
சொல்லிவிட்டு மீண்டும் அவளது உணவுத்தட்டை பார்த்து குனிந்துகொண்டாள். பிஸ்ஸாவை துண்டம் செய்தாள்.. வாயில் திணித்து சுவைத்தாள்..!! 'என் இதயத்தில் நீ இருக்கிறாய்' என்று இவன் உரைத்திருக்கிறான். ஆனால்.. அவன் ஏதோ 'எங்க ஏரியாவுல இன்னைக்கு பவர் கட்..' என்று சொன்னதை போலத்தான் அவளுடைய செய்கை இருந்தது. அவன் சொன்ன விஷயத்திற்கு அந்த அளவிலான ஒரு உணர்ச்சியையே முகத்தில் பிரதிபலித்தாள். அசோக்கோ அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற ஆர்வத்துடன், அவளுடைய முகத்தையே ஆர்வமாக, 'பே' என்று பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஒரு சில வினாடிகளில் பொறுமை இழந்து போய்..
"எ..என்னங்க.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்றிங்க..??" என்று கேட்டே விட்டான்.
"என்னை 'நீ வா போ'ன்னே சொல்லலாம்..!!"
"ஐயையோ.. ப..பரவாலைங்க.. இருக்கட்டும்.."
"இல்ல.. நான் இனிமே உன்னை அப்படித்தான் கூப்பிடப் போறேன்.. வேணும்னா நீயும் என்னை அப்படி கூப்பிட்டுக்கோ..!! இல்ல கஷ்டமா இருக்குனா 'நீங்க வாங்க'ன்னே கண்டின்யூ பண்ணு.. எதுனாலும் எனக்கு ஓகே..!!" அவள் கூலாக சொல்ல, 'என்ன குசும்பு இவளுக்கு..' என்று அசோக் மனதில் நினைத்துக் கொண்டான்.
"சரிங்.. சரி.. ட்ரை பண்றேன்..!!"
"குட்..!!"
"அதுலாம் இருக்கட்டுங்.. நான் கேட்டதுக்கு எதுவுமே சொல்லலையே..??"
"ம்ம்.. சொல்றேன்.. இரு..!! ம்ம்ம்ம்ம்... ஃபஜிட்டா பன்னீர் ஸ்டஃப்ட் பரிட்டோ.. அப்டின்னு ஒன்னு இருக்கு தெரியுமா..??"
"ம்ஹூம்.. என்ன அது..??" அசோக் நெற்றியை சுருக்கினான்.
"நெறைய வெஜிடபிள்ஸ்.. பன்னீர்.. பீன்ஸ்.. ரைஸ்.. ச்சீஸ்.. எல்லாம் உள்ளவச்சு.. சப்பாத்தி மாதிரி ஒன்னுல ரோல் மாதிரி ராப் பண்ணி தருவாங்க.. அதை ரெட் சில்லி சாஸ் தொட்டுக்கிட்டு ஒரு கடி கடிச்சோம்னு வச்சுக்கோ.. அப்படியே யம்மியா இருக்கும்..!!" அவள் அப்படியே அனுபவித்து ஆசையாக சொன்னாள்.
"ஓ..!! அ..அது சரி.. அதுலாம் எதுக்கு இப்போ எங்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்.. இ..இருக்க..??"
"அது.. அங்க டேகோ பெல்னு ஒரு ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் இருக்குல.. அங்க கெடைக்கும்.. போய் எனக்கு ஒன்னு வாங்கிட்டு வர்றியா..??" அவள் மிக இயல்பாக சொல்ல, இவன் தலையை சொறிந்தான்.
"என்னங்க நீங்க.. நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. நீங்.. நீ என்னடான்னா.. பரிட்டோ சொறிட்டோன்னுட்டு..??"
"இங்க பாரு.. மேற்கொண்டு நான் பேசணும்னா.. போய் எனக்கு ஒரு பரிட்டோ வாங்கிட்டு வா.. இல்லனா எடத்தை காலி பண்ணு.. கெளம்பு..!!"
சொல்லிவிட்டு அவள் பிஸ்ஸா சாப்பிடுவதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். இவனை கண்டுகொள்ளவே இல்லை. அசோக் என்ன செய்வது என்று தெரியாமல், சிறிது நேரம் திருதிருவென விழித்தபடி அமர்ந்திருந்தான். பிறகு வேறு எந்த வழியும் இருப்பதாக அவனுக்கு தோன்றாமல் போகவும், ஒரு முடிவுக்கு வந்தவனாய்..
"ச..சரி.. போய் வாங்கிட்டு வர்றேன்.." என்றுவிட்டு எழுந்தான். சலிப்பாக தலையை அசைத்தவாறே, அந்த கவுன்ட்டர் நோக்கி நடந்தான்.
"ஹலோ.. அப்படியே ஒரு கோக் டின்..!!" அவள் பின்னால் இருந்து இரைந்தாள்.
"சரீஈ..!!" அசோக் திரும்பி பார்க்காமலே வெறுப்பாக கத்தினான்.
"டயட் கோக்..!!" அவள் இன்னும் பெரிதாக இரைய,
"சரீஈஈஈ...!!"
அசோக் இன்னும் வெறுப்பாக கத்தியவாறே வேகமாக நடந்தான். 'ஷ்ஷ்ஷ்ஷ்..' என்று தலையை ஒருமுறை உலுக்கிக் கொண்டான். 'ச்சே.. என்ன எழவுடா இது..?? கொஞ்ச நேரம் பேசுனதுக்கே காதுலாம் 'கொய்ய்ய்ங்'னு இருக்குது.. இவனுகள்லாம் எப்படி மணிக்கணக்குல பேசுறானுக..?? இதுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே.. இவளை எப்படி பேசி சமாளிச்சு லவ் பண்ண வைக்கப் போறேன்..?? இவனுகள்லாம் எப்படி இந்த ஸ்டேஜை க்ராஸ் பண்ணி நெக்ஸ்ட் ஸ்டெப் போனானுக..?? பருப்பு பரதநாட்டியம் ஆடும்னு கிஷோர் சொன்னானே.. இதானா அது..??'
எரிச்சலுடனே சென்று அசோக் அந்தப்பெண் சொன்ன ஐட்டங்களை வாங்கிக்கொண்டான். திரும்பி நடந்து வருகையில், 'என்னடா இதுலாம்..??' என்று சைகையால் கேட்ட நண்பர்களுக்கு, 'நத்திங்..' என்று சைகையாலே தோளை குலுக்கி புன்னகைத்தான்.