screw driver ஸ்டோரீஸ்
அத்தியாயம் 7

அன்று மதியம். அதே ஃபுட் கோர்ட். அசோக்கும் நண்பர்களும் அப்போதுதான் உணவருந்த ஆரம்பித்திருந்தார்கள். முதல் வாய் எடுத்து வைத்து, சுவைத்து பார்த்ததுமே அசோக் சலிப்பாக சொன்னான்.

"ப்ச்.. பார்டா இவனுகளை.. பாஸ்தால உப்பே போடல.. சப்புன்னு இருக்கு..!!" அசோக் சொல்ல, வேணு அதற்காவே காத்திருந்தவன் மாதிரி

"ம்ம்.. நீ சொரணை கெட்ட பயன்னு அவனுகளுக்கும் தெரிஞ்சு போச்சு போல இருக்கு மச்சி..!!" என்று பட்டென கிண்டலாக சொன்னான்.

"ஹாஹா.. ஹாஹா..!!" கிஷோரும் சாலமனும் சிரித்தார்கள். அசோக் நிஜமாகவே கடுப்பாகிப் போனான்.

"ங்கொய்யால.. கொலைகாரனாக்காதிங்கடா என்னைய..!! நல்லா உங்க ஆசை தீர.. ஒருநாள் ஃபுல்லா என்னை ஓட்டிட்டிங்க.. போதும்.. அத்தோட விட்ருங்க..!!" என்று சூடாக சொன்னான்.

"ஒய்.. என்ன... ஓவரா சலம்புற..?? ஒருநாள் ஓட்டுனதுக்கே உனக்கு இவ்வளவு எரியுதா..?? நாங்கள்லாம் உன்கிட்ட எவ்வளவு வாங்கிருப்போம்..?? எங்களுக்கு எவ்வளவு எரியும்.??"

"ஹ்ஹ.. சும்மாவா ஓட்டுனேன்.. நீங்க பண்ணின காமடி அப்படி..!!" அசோக் டேபிளில் இருந்த அந்த துளையிட்ட சீசாவை எடுத்து, பாஸ்தாவில் உப்பு தூவிக்கொண்டே சொன்னான்.

"அப்போ நீ பண்ணினது காமடி இல்லையா..?? நாங்களாவது லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் அவளுகளுக்கு பயந்து சாகுறோம்..!! நீ பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே.. பின்னங்கால் பிடரில அடிக்க ஓடி வந்தியே மச்சான்.. அந்த காமடியை எங்க போய் சொல்றது..?? நாங்க அப்படித்தான் ஓட்டுவோம்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!!" - இது சாலமன்.

"சரிடா.. ஓட்டுங்கடா..!! ஆனா.. ஓட்டுறது ஒரு அர்த்தத்தோட ஓட்டுங்க.. சும்ம்ம்மா ஏதாவது சொல்லனுமேனு சொல்லாதீங்க..!!"

"இப்போ என்ன நாங்க ஓட்டுனதுல உனக்கு அர்த்தம் புரியல..??"

"ம்ம்ம்...?? சரி.. நேத்து நான் பயந்து போய் திரும்ப வந்துட்டேன்.. ஒத்துக்குறேன்..!! ஆனா.. சொரணை கெட்ட பயன்னு சொன்னா என்ன அர்த்தம்..?? அப்படி என்ன சொரணை கெட்டு போயிட்டேன்..??"

"பின்ன என்ன..?? நீதான நேத்து பெரிய புடுங்கி மாதிரி.. 'அந்தப் பொண்ணை லவ் பண்ண வச்சு காட்டுறேன் பாருங்கடா'னு.. சவால் விட்டுட்டு போன..?? 'சப்பை.. சப்பை மேட்டர்'னு.. சவடாலா பேசுன..?? அப்புறம் பேசாம பம்மிட்டு.. ஆல் ஹோல்ஸையும் அமுக்கி பொத்திட்டு திரும்ப வந்துட்டா.. உன்னை சொரணை கெட்ட பயன்னு சொல்லாம வேற என்ன சொல்றது..?? பேசுனா.. பேசுன மாதிரி செய்யணும்டா..!!"

"ஹேய்..!!! கொஞ்சமாவது மனசாட்சியோட பேசுங்கடா..!! கையில செருப்பை எடுத்து என் மூஞ்சிக்கு முன்னாடி ஆட்டுறா.. காளி மாதிரி அப்படியே ஆவேசமா நிக்கிறா.. அவகிட்ட போய் 'ஹாய்.. ஹவ் ஆர் யூ.. ஐ லைக் யூ..' அப்படின்னு இளிச்சுக்கிட்டே டயலாக் பேச சொல்றீங்களா..??"

"பேசிருக்கணும் மச்சி.. சொரணை இருக்குறவனா இருந்தா பேசிருக்கணும்.. அந்த செப்பலால ரெண்டு அப்பு வாங்கிருந்தா கூட தப்பே இல்ல..!!" சாலமன் கிண்டலாக சொல்ல,

"ம்ம்.. உனக்கு வேணா உன் ஆளுட்ட வாங்கி வாங்கி.. செருப்படி படுறதுலாம் சகஜமாகிப் போயிருக்கலாம்.. என்னாலலாம் முடியாது..!! நேத்து அவ ஏதோ பேட் மூட்ல இருந்தா.. அதான் பேசாம பேக் அடிச்சுட்டேன்.. வேணுன்னா இன்னைக்கு அவ வரட்டும்.. கண்டிப்பா போய் பேசுறேன்.. அவளை லவ் பண்ண வச்சு காட்டுறேன்..!!" அசோக் பொறுமையாக பதிலளித்தான்.

"அவதான..?? வருவா வருவா..!! நல்லா வாயை ஆ'ன்னு பொளந்துட்டு உக்காந்திரு..!!"

"நான் வாயை பொளந்துட்டு உக்கார்றது இருக்கட்டும்.. நீ மொதல்ல வாயை மூடிட்டு சாப்பிடு..!!"

அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான். ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாய் பாஸ்தா அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான். நண்பர்களை பார்ப்பதை தவிர்த்து, பார்வையை வேறெங்கோ செலுத்தியபடியே சாப்பிட்டான். மற்றவர்களும் இப்போது எதுவும் பதில் பேசவில்லை. அமைதியாக அவரவர் உணவை உண்ண ஆரம்பித்திருந்தனர்.

ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. சாலமன் மீண்டும் கேலியான குரலில் அசோக்கிடம் சொன்னான்.

"மானகெட்ட மாப்ள.. அந்த சால்ட் டப்பாவை கொஞ்சம் எடுக்குறியா..??" அவ்வளவுதான்.. அசோக் படுடென்ஷனாகிப் போனான்..!!

"த்தா.. சொல்லிட்டே இருக்குறேன்..!! மசுரு..!!"

என்று கத்தியவாறு உப்பு டப்பாவை எடுத்து சாலமனின் அடிவயிறை குறி பார்த்து எறிந்தான். சாலமன் அவசரமாய் கைகளை நகர்த்தி, அடி படாதவாறு அந்த டப்பாவை கேட்ச் பிடித்துக் கொண்டான்.

"ஹேய்.. ஏண்டா இப்படி டென்ஷன் ஆகுற..??" வேணு அசோக்கிடம் சீறினான்.

"பின்ன என்னடா..?? சும்மா சும்மா.. சொரணை கெட்டவன், மானம் கெட்டவன்னுட்டு..?? அதான் இன்னைக்கு அவ வந்தா போய் பேசுறேன்னு சொல்லிட்டேன்ல..?? அத்தோட விடுவீங்களா...??"

"ஆமாம்.. டெயிலி வர்றதுக்கு அவ என்ன ந்யூஸ் பேப்பரா..?? அவள்லாம் இனி வர மாட்டா.. அவ்வளவுதான்..!!" சாலமன் எரிச்சலாக கத்த, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கிஷோர் இப்போது வாயை திறந்தான்.

"ஏய்.. மேட்டர் தெரியாம பேசாதீங்கடா..!! அந்தப் பொண்ணு கண்டிப்பா வருவா..!!"

கிஷோர் அந்த மாதிரி அமைதியாக சொல்லவும், இப்போது மற்ற மூன்று பேரும் திரும்பி அவனுடைய முகத்தை குழப்பமாக ஏறிட்டனர். வேணுதான் அந்த குழப்பம் கலந்த குரலிலேயே கிஷோரிடம் கேட்டான்.

"எ..எப்படிடா சொல்ற..??"

"நம்ம பையனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஒரு Wi-Fi கனெக்ஷன் இருக்கு மச்சி.. நம்ம கண்ணுக்குலாம் தெரியாது அந்த கனெக்ஷன்..!!"

"பு..புரியலடா..!!"

"நான் அந்த பொண்ணை செலக்ட் பண்றதுக்கு முன்னாடியே.. நம்ம பையன் பலநாளா அவளை சைலண்டா சைட் அடிச்சிருக்கான்..!! உங்கள்ல யாருக்காவது தெரியுமா..?? ம்ம்..?? எனக்கும் இத்தனை நாளா தெரியாது.. எவ்வளவு பெரிய கேடின்னு பாரு இவன்..??"

"ஏய்.. இ..இவன் என்னடா சொல்றான்..??"

வேணுவும், சாலமனும் குழப்பமாய் அசோக்கை பார்த்தனர். அவனோ கிஷோரையே எரிச்சலாக முறைத்துக் கொண்டிருந்தான். இத்தனை நாட்களாக சங்கீதாவிடம் சொல்கிற விஷயங்கள்தான் கிஷோருக்கும் சென்றுவிடும். இன்று அம்மாவிடம் பேசிய விஷயமும் அவனை வந்து அடைந்திருக்கிறதே என்ற எண்ணத்தில் வந்த எரிச்சல் அது.

"என்னடா மொறைக்கிற..??" கிஷோர் அசோக்கை சீண்டும் விதமாய் கேட்டான்.

"உளறிட்டாங்களா உன்கிட்ட..??" அசோக்கின் குரலில் ஒருவித கடுப்பு கலந்திருந்தது.

"டேய்.. ஆன்ட்டியை கொறை சொல்லாத.. அவங்க நெலமைல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு..!! இன்னைக்கு எங்கிட்ட பேசுறப்போ எவ்வளவு சந்தோஷமா பேசினாங்க தெரியுமா.. அவங்க இவ்வளவு சந்தோஷப்பட்டு நான் பாத்ததே இல்ல..!! அந்த பொண்ணை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க.. 'என் புள்ளை அந்த பொண்ணை லவ் பண்றான் போல இருக்கு.. நீங்க ஃப்ரண்ட்ஸ் தடிப்பசங்கள்லாம் முடிஞ்ச வரை அந்த லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுங்கடா'ன்னு கேட்டுக்கிட்டாங்க..!!"

"லவ்வாஆஆ..????" வேணுவும் சாலமனும் வாயை பிளந்தனர்.

"ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா..!!" அசோக் பலவீனமாக மறுத்தான்.

"இருக்கு மச்சி.. உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்கு..!! அப்புறம் எப்புடி கரெக்டா அவளை நான் செலக்ட் பண்ணி காட்டனும்..??"

"ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு அவ கரெக்டா செருப்பை தூக்கி காட்டனும்..??"

"ப்ச்.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும்டா..!! நீ வேணா பாரு.. அவ கண்டிப்பா வருவா..!!'

"ம்.. ம்.. வந்தா பாத்துக்கலாம்..!!" அசோக் அசால்ட்டாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமன் திடீரென உற்சாகமாக கத்தினான்.

"மச்சீஈஈ..!!!!"

"என்னடா..??"

"வந்துட்டா மச்சி.. வந்துட்டா..!!"

சாலமன் சொல்லவும், இப்போது அனைவரும் படக்கென திரும்பி அவன் பார்வை சென்ற திசையை பார்த்தார்கள். அங்கே அவள் வந்துகொண்டிருந்தாள். நேற்று மாதிரியே கூந்தலும், காதுவளையமும் காற்றில் ஆட.. குதிரை கணக்காக வந்து கொண்டிருந்தாள்..!! டி-ஷர்ட் ஜீன்ஸ்.. தோளில் பேக்.. கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் ப்ளேட்.. அதன்மேல் ஒரு சிறிய உணவு ப்ளேட்..!!

அவளை பார்த்த மாத்திரத்திலேயே அசோக்கின் இதயம் கிடந்தது தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்திருந்தது. நாடித்துடிப்பு எல்லாம் கன்னாபின்னாவென்று எகிற ஆரம்பித்தது. ஆச்சரியம், சந்தோஷம், நிம்மதி, பயம் என பலவித உணர்வுகள் கலந்துகட்டி அவனை தாக்கின. பதித்த பார்வையை எடுக்க மனமில்லாமல், அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இவர்களை கடந்து சென்றாள். ஓரமாக யாருமற்று கிடந்த அந்த டேபிளில் சென்று அமர்ந்து கொண்டாள். பேகை பக்கத்து சேரில் வைத்துவிட்டு, ப்ளேட்டை பார்த்து குனிந்து கொண்டாள். 

இவர்கள் நால்வரும் இன்னுமே அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க, வேணுதான் முதலில் வாய் திறந்தான்.

"மச்சீஈஈ.. என்ன டைமிங்டா இது..?? சான்சே இல்ல போ..!! நீ சொன்னது நூத்துக்கு நூறு உண்மைடா.. இவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு வயர்லஸ் நெட்வொர்க் இருக்குது மச்சி..!!"

"ஃபேக்ட்.. ஃபேக்ட்.. ஃபேக்ட்..!!" சாலமனும் ஆமோதித்தான்.

"ஏய்.. போடா.. போய் அவகிட்ட பேசு.. போ..!!" கிஷோர் அசோக்கை தூண்டினான்.

"ஆமாம் மச்சி.. போடா.. போய் பேசு.. எந்திரி..!!" வேணும், சாலமனும் கிஷோருடன் சேர்ந்து கொண்டார்கள்.

"ஹேய்.. எ..எனக்கு ஒரு மாதிரி இருக்குதுடா..!!" அசோக்கிற்கு நிஜமாகவே உதறலாக இருந்தது.

"ப்ச்.. ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத மச்சி..!! நீ சொன்ன மாதிரி.. நேத்து அவ ஏதோ பேட் மூட்ல இருந்திருக்காடா.. அதான் அப்படிலாம் நடந்துக்கிட்டா..!! இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கா.. தைரியமா போய் பேசு..!!" என்றான் வேணு.

"அவ நல்ல மூட்ல இருக்கான்னு உனக்கு எப்படி தெரியும்..??"

"எ..எல்லாம்.. ஒரு சில அறிகுறிகளை வச்சு சொல்றதுதான்..!! நேத்து அவ என்ன கலர் டி-ஷர்ட் போட்டுட்டு வந்தா..??"

"ப்ளாக்..!!"

"ப்ளாக்னா என்ன அர்த்தம்..?? துக்கம்.. தடங்கல்… அமங்களம்..!! இன்னைக்கு பாரு.. வொயிட் டி-ஷர்ட்.. மங்களகரமா வந்திருக்கா.. நல்ல அறிகுறிடா.. போய் பேசு போ..!!"

"வெள்ளை.. மங்களகரமா..?? மஞ்சளைத்தான அப்படி சொல்வாங்க..??"

"ஓ..!! அப்போ வெள்ளைக்கு என்ன..?? ஆங்.. சாந்தம்.. சமாதானம்..!! அவ நல்ல மூட்ல இருக்கான்றதுக்கு இதைவிட வேற என்னடா ப்ரூஃப் வேணும்..?? கெளம்புடா.. டைம் வேஸ்ட் பண்ணாத..!!"

ஏதேதோ லாஜிக் எல்லாம் சொல்லி, நண்பர்கள் மூவரும் அசோக்கை ஏற்றிவிட, அவனோ இன்னும் தயக்கத்துடனே அமர்ந்திருந்தான். நேற்று பார்த்த அவளுடைய ஆவேசமும், அந்த ஒற்றைக்கால் செருப்பும், இன்னுமே அவனுடைய மூளையை தாக்கி இம்சை செய்தன. உடலிலும் மனதிலும் ஒரு படபடப்பை கிளறி விட்டிருந்தன. சில வினாடிகள் அவ்வாறு தடுமாறியவன், அப்புறம் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுந்தான்.

"மச்சீஈஈ.. எல்லாம் எனக்காக நல்லா வேண்டிக்கங்கடா..!!" சொல்லிவிட்டு அசோக் நகர முயல,

"ஏய் ஏய்.. இந்தாடா.. இதையும் எடுத்துட்டு போ..!!" என்று கிஷோர் பாஸ்தா ப்ளேட்டை அவன் கையில் திணித்தான்.

"டேய்... நே..நேத்து மாதிரி எதுவும் ஆயிடாதுல..??" அசோக் பரிதாபமாக கேட்க,

"ஐயே... தைரியமா போ மச்சி..!! சத்தியமா நேத்து மாதிரி நடக்க சான்சே இல்ல.. எல்லாம் நான் அப்போவே நல்லா பாத்துட்டேன்..!!" உறுதியான குரலில் சொன்னான் சாலமன்.

"ந..நல்லா பாத்துட்டியா..?? எதை..??" அசோக் குழப்பமாய் நெற்றி சுருக்கினான்.

"அவ காலை..!! இன்னைக்கு ஷூ போட்டுட்டு வந்திருக்கா மச்சி.. சத்தியமா நேத்து மாதிரி நடக்க சான்சே இல்ல..!!"

சாலமன் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொல்ல, அசோக் அவனை எரித்து விடுவது போல முறைத்தான். கையிலிருந்த பாஸ்தாவை அப்படியே அவன் தலையில் கொட்டிவிடலாமா என்று யோசித்தான். அப்புறம் 'மவனே.. உன்னை வந்து வச்சுக்குறேன்..!!' என்று சன்னமான குரலில் அவனை எச்சரித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

தடதடத்த இதயத்துடனே நடந்து சென்று, அந்தப்பெண் அமர்ந்திருந்த டேபிளை நெருங்கினான். அருகே நிழலாடவும், அவள் தலையை நிமிர்த்தி இவனை ஏறிட்டாள். அவளுடைய திராட்சை விழிகளில், இப்போது தன் பிம்பம் விழுந்திருக்கிறது என்ற உணர்வே, அசோக்கின் மனதை சில்லிட்டுப்போக வைத்தது. அவன் இப்போது ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தியவாறே,

"ஹாய்..!!!!" என்று இளித்தான்.

அவள் இவனை ஒருவித சலனமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை முறைக்கிறாளோ என்று கூட அசோக்குக்கு தோன்றியது. புருவத்தை ஒருமாதிரி உயர்த்தி, 'என்ன..??' என்று அந்த புருவ அசைவாலேயே கேட்டாள்.

"அ..அது.. ஆக்சுவலா.. அ..அங்க எங்கயுமே உக்காரதுக்கு இடம் இல்லங்க.. இஃப் யூ டோன்ட் மைண்ட்.. இ..இங்க நான் உக்காந்துக்கலாமா..??"

அசோக் தட்டு தடுமாறி கேட்டான். அவள் எதுவுமே சொல்லவில்லை. ஓரிரு வினாடிகள் அவன் முகத்தையே அமைதியாக பார்த்தவள், பிறகு மீண்டும் தனது தட்டை பார்த்து குனிந்து கொண்டாள். அசோக்கும் இப்போது தைரியம் பெற்றவனாய் அவளுக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்துகொண்டான். பாஸ்தாவை ஒரு ஸ்பூன் அள்ளி வாய்க்குள் தள்ளியவன், மெல்ல தலையை நிமிர்த்தி எதிரே இருந்தவள் மீது பார்வையை வீசினான்.
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 30-05-2019, 11:01 AM



Users browsing this thread: 8 Guest(s)