Adultery அவளும் பெண் தானே
#96
சென்ற பகுதியின் தொடர்ச்சி...

நான் அகல்யாவிடம் என் மனதில் இருந்த ஆசை ஒரு வழியாக சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காக அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  அவளும் என்னை போன்றே ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறாள் என்பது அவளின் முகத்தை பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது. 

"இப்பவே உங்க பதில்ல சொல்லனும் இல்ல அகல்யா. நல்லா டைம் எடுத்து யோசித்து சொன்ன கூட போதும்." என்றேன். 

"பதில் யோசிக்க வேண்டியதில்ல. ஆனா அந்த பதில்ல எப்படி சொல்றது. அத சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்க தெரியல."

"பதில்ல பாசிட்டிவ் இருந்தாலும் ஓகே நெகட்டிவ் இருந்தாலும் ஓகே தான் அகல்யா. உங்கட்ட பதில் இருந்தா இப்பவே சொல்லிடுங்க.."

"சாரி மிஸ்டர்" அவள் இழுக்க நான் என் பெயரை சொல்ல 

"ம்ம் மிஸ்டர்" உடன் என் பெயரை சேர்த்து சொல்லி 

"இங்க பாருங்க முதல்ல இந்த கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல. உங்கள மட்டும் வச்சு சொல்லல. பொதுவாவே எனக்கு கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்ல."

"கல்யாணம்றது ஒவ்வொரு பொண்ணுக்கு ஒரு மாதிரி. சிலருக்கு அது சந்தோஷத்தை குடுக்கும். சிலருக்கு துக்கத்த குடுக்கும்." சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் அவளின் பேச்சை இடைமறித்து

"இல்ல அகல்யா நா உன்ன ரொம்ப லவ் பண்றேன். உன்னைய மேரேஜ் பண்ண வாழனும் ஆசைபடுறேன்."

"இங்க பாருங்க மிஸ்டர் நீங்க என் மேல ஆசைபட்டத நா தப்பு சொல்லல. உங்க மனசுல அப்படி ஒரு ஆசை தோணியிருக்கு. அதுக்கு நா எதும் சொல்ல முடியாது. பட் என் மனசுல இருக்குறத நீங்க கன்சிடர் பண்ணனும்."

"இங்க இருக்குற குழந்தைகள், என்னை மாதிரி பெண்கள் உருவாக இந்த இடத்துக்கு வர காரணமே இந்த காதல், கல்யாணம் தான். அதனால தான் சொல்றேன் என்னைய மாதிரியான பெண்களுக்கு இந்த ரெண்டுமே வாழ்க்கையில கசப்ப மட்டுமே தரும். எனக்கு முன்னாடி இருந்தவங்க செஞ்ச தப்பா நானும் திரும்பி செய்ய விரும்பல. சோ என்னைய விட உங்களுக்கு நல்ல பொண்ணு கண்டிப்பா கிடைப்பாங்க. கவலைபடாதீங்க"

"ஏதோ ஒன்னு ரெண்டு பேர் செஞ்ச தப்புக்காக எல்லாருடைய காதல் தப்பு சொல்ல கூடாதுல."

"காதலும் பால் மாதிரி தாங்க.. போக போக புளிச்சி போய்டும். ஏன் எத்தனையோ காதல் கல்யாணத்துக்கு முன்னாடியே புளிச்சி போயிருக்கு. காரணம் அப்போ அவங்க தேவைகள் முடிஞ்சிருக்கும். இல்ல புதுசா ஏதோ தேவையோ, அவசியமோ, நிர்பந்தமோ வந்து உள்ளே நுழைஞ்சிருக்கும்."

"பெண்கள காதல் பண்ணி ஏமாத்தறது ஆண்கள் மட்டும் தான் காரணம் சொல்றீங்களா?"

"இங்க இருக்கிற குழந்தைகள், பெண்கள் யாருக்கும் அம்மா, அப்பா ஏன் எந்த ஒரு உறவும் வெளியில இருந்து இல்ல.. இங்க இருக்குறவங்க தான் உறவு. இதுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் சொல்ல முடியாது. பெண்களும் தான் காரணம்."

"காரணம் சொல்லனும்னா காதல்,  கல்யாணம், தவறான வழியில பிறந்த குழந்தை, ஏன் இயற்கையா நடக்குற விபத்து கூட ஒரு காரணம் தான். ஆனா யாராவது ஒருத்தர் இந்த காரணத்துக்கு  பொறுப்பு எடுத்திருந்தா இன்னிக்கு இந்த மாதிரி ஹோம் இருக்கவே இருக்காது." 

காதல், கல்யாணம் இதனால் அரிதாக ஏற்படக் கூடிய பாதிப்புகள் தான் அவளுடைய மனதில் பிரதானமாக இருந்தது. அதற்கு காரணம் அவளுடைய வாழ்க்கை முறை, வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்கள் தான் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதற்கு மேலும் அவளிடம் வாதாட விரும்பவில்லை. 

எப்போதும் இயற்கையின் விதியின்படி எல்லாமே இரண்டு வகை தான். அது மனிதர்களாகட்டும் அவர்களின் குணநலன்கள், வாழும் வாழ்கை, மதிப்பு, மரியாதை இவைகள் எல்லாம் இருவகை தான். இதற்கு காரணம் மனிதர்களா? இல்லை கட்டமைக்கப்பட்ட இந்த சமுதாயமா? என தெரியவில்லை. பல குழப்பங்களும், சிந்தனைகளுக்கு மத்தியில் அங்கிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அடுத்து என் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது ஏன் இந்த நொடி அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாத குழப்பமான மனநிலையில் உட்காந்திருந்தேன். 

அப்போது தான் என்னில் இருந்து என் மனசாட்சி வந்து பேச ஆரம்பித்தது. 

"என்ன குழப்பமாக இருக்கா? ரொம்ப எல்லாம் மனச போட்டு குழப்பிக்காத. அகல்யா சொன்னது அவளை பொறுத்தவரை சரி தான். ஏன்னா அவளும் பாதிக்கபட்டுருக்கா. அவள மாதிரி இந்த ஹோம்க்கு வர உன்ன மாதிரி ஆண்களும் புருசன் சுகம் சரியா குடுக்கலனு உன் தேடி வந்த கற்பகம் மாதிரி பெண்களும் தான் காரணம்." சொல்ல அப்போது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.

நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு திருப்பி பார்த்தால் அதில் வெறும் காமம் மட்டுமே நிறைந்திருந்தது. அதை தவிர வேறெதுவும் இல்லை. வாழ்க்கையில் காமம் என்பது வெறும் ஒரு சிறிய பகுதி தான் என்பது தெரிந்தது. இந்த சிறிய பகுதிக்காக இவ்வளவு நாள் வாழ்க்கை வீணாக்கி இருக்கிறேன் என்பது அப்போது தான் புரிந்தது.

மீண்டும் என் மனசாட்சி என்னிடம் 

"என்ன யோசிச்சு பாக்கிறியா? பாரு. பாரு.. என்ன பாத்தாலும் சுகம்.. சுகம்.. காம சுகம் இதை தவிர வேறெதுவும் உன் வாழ்க்கையில சொல்ற மாதிரி பண்ணியிருக்கியா?" கேட்க 'இல்லை' என்ற பதில் என்னையும் அறியாமல் வாயிலிருந்து வந்தது. 

"அகல்யா பாத்ததும் வேணா உனக்கு புடிச்சு போய் கல்யாணம் பண்ணியிருக்கனும் தோணியிருக்கலாம். ஆனா இதுக்கு முன்ன பாத்து பழகி காதலிக்கிறேன் சொல்லி அனுபவிச்ச பெண்கள் நெலமைய கொஞ்சம் யோசிச்சு பாரு."

"கர்மா எக்காலத்துக்கும் பொருந்தும்.. நீ செய்த வினைகள் உன்னை ஒருநாள் தேடி வந்து உனக்கே எமனாக நிற்கும்."

"அகல்யா பத்தி நெனைக்கும் போதெல்லாம் இந்த சமுதாயத்தில இருக்கிற ஒட்டு மொத்த பொண்ணுங்கள பத்தி நெனச்சியா இல்லையா?"

"ம்ம்.. ஆமா நெனப்பு வந்துச்சு. நெனச்சு பாத்தேன்."

"சும்மா எப்படி நெனப்பு வரும்.. நீ செய்த கர்மா உன்னைய நெனக்க வச்சு அத அகல்யா மூலமா உனக்கு தெரியபடுத்தியிருக்கு.. இந்த உலகத்துல நிகழ கூடிய எல்லா சம்பவத்துக்கும் ஒரு கர்ம காரிய காரணங்கள் இருக்கத்தான் செய்யும்.. அது வெளிவர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வெளிவந்தே ஆகும்." 

"மனச போட்டு குழப்பிக்காம அமைதியா இரு. அகல்யா உன் வாழ்க்கைக்குள்ள வரனும் எழுதியிருந்தா கண்டிப்பா வருவா." என்றது என் மனசாட்சி. 

"ஓ.. அப்போ அகல்யா என்னைய கல்யாணம் பண்ண சம்மதிப்பாளா?" மனசாட்சியிடம் கேட்க 

"நா உன் மனசாட்சி தான். அடுத்து என்ன நடக்கும் உனக்கே தெரியாதப்ப உனக்குள்ள இருக்குற எனக்கு எப்படி தெரியும்." சொல்லி மறைந்தது. 

அகல்யாவின் பார்வையிலிருந்து... 

என் மனநிலைமையும் ஒரு குழப்பத்தில் தான் இருந்தது. அவர் மனதில் இருந்ததை நேரடியாக ஒளிவுமறைவின்றி பேசியதற்கு யாரையும் கல்யாணம் செய்யும் எண்ணம் இல்லை என சொல்லியிருக்கலாம். அதை விட்டு தேவையில்லாமல் ஏதோ ஏதோ பேசி அவரின் மனதை நோகடித்துவிட்டமோ என்ற குற்ற உணர்ச்சி தான் என் மனதில் மேலோங்கி இருந்தது.. இப்போது அவருடைய மனநிலையை நினைக்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் உடனே எழுந்து என் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்க ப்ரேயர் ரூம் நோக்கி விறுவிறுவென நடந்தேன்.. 

அங்கு கடவுளின் முன்பு மண்டியிட்டு என் மனதில் இருப்பவைகளை எல்லாம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த பக்கம் வந்த மதர் என் மனபுலம்பலை நின்று கேட்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது நான் இருந்த நிலையில் சுற்றி இருப்பவர்களை பற்றி எந்த கவலையும் படாமல் என் மன கவலையை மட்டும் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன்.. 

கடவுளின் முன் மண்டியிட்டு சொன்னதால் என்னவோ என் மனத்தின் பாரம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது. அதனால் எழுந்து வந்த போது அந்த ரூமை கடந்து மதர் எனக்காக நின்றுக் கொண்டிருந்தார். என்னை இந்த ரூமில் பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். இதுவரை எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் இங்கு வந்து முறையிட்டதே கிடையாது. 

என்னை பார்த்து, 

"என்ன ஆச்சு அகல்யா. இங்க வந்திருக்க.."

"இல்ல மதர் சும்மா மனசு கொஞ்சம் சரியில்ல அதான்." என்றேன். 

"உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் இங்க வந்து கடவுள் முன்னாடி முறையிட்டதே கிடையாது. இப்ப என்ன புதுசா வந்திருக்கே அதான் கேக்குறேன்.. எதுவும் பிரச்சனையா?"

"அய்யோ பிரச்சனை எல்லாம் இல்ல மதர்."

"ம்ம்.. பின்ன எதுக்கு இங்க வந்திருக்க அதுவும் பிரேயர் டைம் முடிஞ்சு வந்திருக்க."

"இல்ல மதர் ஒருத்தர் மனச கஷ்டபடுத்திட்டேன். அது என் மனசுக்கு எப்படியோ இருந்துச்சு. அதான் இங்க வந்து முறையிட்டேன்."

"அப்படி யார் மனச நீ கஷ்டபடுத்தியிருக்க போற.. இந்த ஹோம்ல இருக்குற எல்லாருக்கும் உன்னைய பத்தி நல்லா தெரியும்.. நீ தெரியாம பேசிட்டா கூட யாரும் பெருசு பண்ணமாட்டாங்க."

"இங்க இருக்குற யாரையும் இல்ல மதர். அந்த இன்ஜினியர் மனச தான் ஏதோ ஏதோ பேசி கஷ்டபடுத்திட்டேன்." 

"அவர் மனசையா? அப்படி என்ன பேசின?"

"இல்ல மதர் அவர் என்னைய கல்யாணம் பண்ணிக்க ஆசை அவரோட விருப்பத்த சொன்னார்."

"ம்ம்.. நல்ல விசயம் தான.. உனக்கு அவர பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டி தான. பாக்க ஆள் கூட நல்ல ஆள் மாதிரி தான் தெரியுது."

"இல்ல மதர் எனக்கு விருப்பம் இல்ல. அத மட்டும் சொல்லியிருக்கனும். ஆனா நா ஏதோ ஏதோ தேவையில்லாத பேசி அவர கஷ்டபடுத்திட்டேன்."

"அப்படி என்ன பேசுன அவர்ட்ட.." மதர் கேட்டவுடன் நான் அவரிடம் பேசியதை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தேன்..

"நா உனக்கு இப்ப ஆறுதல் சொல்றதா? இல்ல கல்யாணம் பண்ணி வாழ்க்கையில நல்லபடியா வாழ சொல்றதா? எனக்கே தெரியலம்மா.
ஏன் சொல்றேனா ஏற்கெனவே யாரோ உன்ன விட்டுட்டு போய்ட்டாங்க நீ நெனக்கிறது எனக்கு புரியது. இருந்தாலும் உன்ன கவனிச்சுக்க ஆள் வேணும்லம்மா."

"அதலாம் அப்ப பாத்துக்கலாம் மதர்.. யாராவது ஒருத்தர் கிடைக்காமலா போய்டுவாங்க.. இல்ல கடவுள் பாத்துப்பார்.."

"கடவுள் உன்ன நல்லா பாத்துப்பார் தான்ம்மா. இருந்தாலும் என்னைய மாதிரி கஷ்டபடாம நீ சந்தோஷமா இருக்கனும்."

"இப்ப எனக்கு என்ன குறை மதர். நா நல்லா சந்தோஷமா தான இருக்கேன்." 

"நீ இந்த விசயத்த எப்படி சொன்னாலும் கேட்கமாட்டேன் தெரியும்.. இருந்தாலும் என் மனசு என்னமோ இந்த பையன்ன கல்யாணம் பண்ணிகிட்டா நல்லது.. உனக்கும் வாழ்க்கை கிடைச்ச மாதிரி இருக்கும்.. இங்க இருக்குறவங்களுக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும் நெனச்சேன்.. ம்ம்.. இது உன்னோட வாழ்க்கை நீ தான முடிவு பண்ணனும். நீயே முடிவு பண்ணிக்கோம்மா. நா வரேன்" மதர் சொல்லிட்டு போக கொஞ்சம் விலகியிருந்த குழப்பம் மீண்டும் என் மனதை வந்து ஆட்கொண்டுவிட்டது.

அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். அன்று இரவு சாப்பாடு, தூக்கம் எதுவுமே பிடிக்கவில்லை. இப்போது என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று கூட தெரியாமல் அப்போது மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். ஒன்று மட்டும் புரிந்தது எனக்கு முன்னால் இருந்தது வாழ்க்கையின் இரண்டு பாதைகள். ஒன்று என் வாழ்க்கையில் திருமணமே செய்யாமல் இப்படியே சுலநலமாக வாழ்வது. இன்னொன்று அவரை திருமணம் செய்துக் கொண்டு இங்கிருப்பவருக்கு உதவியாக வாழ்வது. இதில் எதை தேர்ந்தெடுக்க என எனக்குள் பல தடவை கேட்டுக் கொண்டே இருந்தேன். அப்போது யோசித்து பார்த்தேன் ஆனால் பதில் தெரியவில்லை. அந்த இரவு எப்போது தூங்கினேன் என தெரியவில்லை. 

மறுநாள் காலையில் சூரிய வெளிச்சம் வந்து கண்ணில் பட்டு கூச உடனே எழுந்து மணியை பார்த்தேன். ஏழு மணியை தாண்டியிருந்தது. வேகமாக வேகமாக என் வேலைகளை எல்லாம் ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கட்டடம் கட்டும் இடத்திற்கு சென்று பார்த்தேன். ஆட்கள் எல்லோரும் வந்து அவர்களின் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதுவரை எத்தனையோ கான்ட்ராக்டர்கள் ஆட்களை கூட்டி வந்து இங்கு வேலை பார்த்திருக்கின்றனர். அவர்கள் எல்லாம் அதிக கூலிக்கு ஆசைப்பட்டு நாட்களை கடத்தி தான் வேலையை முடித்திருக்கின்றனர். இவர் கூட்டி வந்த ஆட்கள் தான் அவரவர் பொறுப்புணர்ந்து வேலை செய்திருக்கின்றனர். இப்போது அவரை என் கண்கள் தேடியது. ஆனால் அவரை மட்டும் காணவில்லை. அதற்கு காரணம் நானா இல்லை வேறு ஏதாவது வேலையா என தெரியவில்லை. அன்று மட்டுமல்ல கட்டிட வேலையின் கடைசி நாளும் அவர் வரவே இல்லை. அது என் மனதிற்கு வருத்தமாக தான் இருந்தது. 

இனியும் அவர் வருவார்...
[+] 1 user Likes SamarSaran's post
Like Reply


Messages In This Thread
RE: அவளும் பெண் தானே - by SamarSaran - 16-12-2022, 10:47 AM



Users browsing this thread: 7 Guest(s)