மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 1
தாய் மடி தேடும் கன்றுகளின் குரல் கேட்டு பதில் குரல் கொடுக்கும் பசுக்களின் அழைப்பு..... குஞ்சுகளுக்கு இறைத் தேடிச்செல்லும் பறவைக் கூட்டம்.... முதிர்ந்த மரங்கள் பூக்களை உதிர்த்து விட்டு பிஞ்சுகளை உருவாக்கிக் கொண்டிருக்க... அதிகாலையில் பார்க்கும் அத்தனையிலும் தாய்மையின் சாயல்... தாய்மை தான் உலகின் ஆதாரம் எனக் கூறும் காலைப் பொழுது...

ஆனால் கீழ் வானம் மட்டும் சிவப்பா வெளுப்பா என்று புரியாத படி.... காதலனைத் தேர்ந்தெடுக்கத் தவிக்கும் கன்னிப் பெண்ணின் இதயத்தைப் போல் கலங்கித் தெரிய.... அந்த கலங்கித் தெரிந்த வானம் எதைச் சொல்ல வருகிறது என்று புரியாமல் சூரியன் ஒருபுறம் சோம்பலாக எழுந்து கொண்டிருந்தான்....

1988ம் வருடம் ஜூலை எட்டாம் தேதி காலை ஏழு மணி,, பெங்களூரில் இருந்து நாகர்கோயில் வரை செல்லும் தீவு எக்ஸ்பிரஸ் பாலக்காடு கடந்து சென்றுகொண்டிருந்தது... ஓடும் ரயிலின் வேகத்திற்கு ஏற்ப மரங்களும் செடிகளும் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது....

ரயிலின் இரண்டாம் வகுப்புப் பயணிகள் பயணித்த அந்தப் பெட்டிகளில் படுத்திருந்தவர்கள் அனைவரும் விடிந்து விட்டதை உணர்ந்து எழுந்து படுத்திருந்த படுக்கையின் கொக்கிகளை கழட்டிவிட்டு கீழ் சீட்டில் அமர்ந்து கொண்டனர்....

அருணகிரி,, தனது நான்கு வயது மகனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு ஜன்னல் வழியாகத் தெரிந்த இயற்க்கைக் காட்சிகளை காட்டிக் கொண்டிருக்க... பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவி சந்திரமதி தன் கணவரின் தோளில் சாய்ந்து மகன் பேசும் மழலையை ரசித்துக் கொண்டிருந்தாள்...

கடந்து செல்லும் புல் பூண்டை கூட விடாமல் விரல் காட்டி கேள்வி கேட்ட மகனுக்கு சளைக்காமல் பதில் கூறிக் கொண்டு வந்த இருவரையும் இவர்களைப் போலவே எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஜோடி ரசித்துக் கொண்டிருந்தது...

பத்ரிநாத்,, தேவி,, இருவரும் தங்களின் செல்ல மகளை மடியில் வைத்துக்கொண்டு கேள்வியால் துளைக்கும் அந்தச் சுட்டிப் பையனைப் பார்த்து சிரித்து "நம்ம வாலுப் பொண்ணும் இன்னும் கொஞ்ச நாள் ஆனா இப்படித்தான் கேள்வி கேட்ப்பா.... இவங்களைப் பார்த்து நாம ட்ரைன் பண்ணிக்க வேண்டியது தான்" என்று மகளின் நெற்றியில் முத்தமிட்டு கூறினாள் தேவி....

தேவி,, தெய்வ சொரூபம் இப்படித்தான் இருக்குமென்று கூறுவது போன்றதொரு தோற்றம்.... அகன்று நீண்ட கண்களில் எப்போதும் அமைதி,, தடித்துக் குவிந்த இதழ்களில் என்றும் மாறாப் புன்னகை,, நீண்ட கருங்கூந்தலை எடுத்து முன்னால் விட்டிருக்க... அந்த கூந்தலில் இருக்கும் மல்லிகை நுகர்ந்தபடி மனைவியின் மீது சரிந்து அமர்ந்திருந்த பத்ரிநாத்....



மகள் கைத்தட்டிச்சிரிக்க.... எதைப் பார்த்துச் சிரிக்கிறாள் என்று இருவரும் நிமிர்ந்துப் பார்த்தனர்..... எதிர் சீட்டில் அமர்ந்திருந்த சுட்டிப் பையனைப் பார்த்து குழந்தை சிரிக்க... அவனும் குழிந்த கன்னங்களுடன் பொம்மை போல் தலையசைத்துச் சிரிக்கும் குழைந்தையைப் பார்த்து தன் தந்தையிடம் கைகாட்டி "தாதி பாப்பா,, குத்திப் பாப்பா தாதி... என்னப் பாத்து சிதிக்கிது தாதி" என்று மழழையில் கூறிவிட்டு தேவியின் மடியிலிருந்த குழந்தையை நோக்கி தனது விரல்களை நீட்டினான்....

எட்டி அவன் விரல்களைப் பற்றிக்கொண்டு அவனிடம் தாவிச் செல்ல முயன்ற குழந்தையை கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக தேவி சமாளித்துப் பிடிக்க "இப்படிக் குடுங்க" என்று சந்திரமதி தனது கைகளை விரித்ததும் குழந்தை அவளிடம் தாவியது....

தேவி புன்னகை மாற முகத்துடன் குழந்தையைக் கொடுத்ததும்,, தன் அம்மாவிடம் வந்த உயிருள்ள பொம்மையை உரிமையோடு கொஞ்ச ஆரம்பித்தான் சுட்டிப் பையன்....

சற்று நேரத்திலேயே தன் மடியில் குழந்தையை உட்கார வைக்குமாறு அழ ஆரம்பித்தவனை சமாளிக்க வழியின்றி பெற்றவர்கள் நடுவே அவனை உட்கார வைத்து குழந்தையை அவன் மடியில் கிடத்தியதும் பாதுகாப்பாய் அணைத்துப் பிடித்துக் கொண்டான் சின்னவன்....

குழந்தையும் அழாமல் அவனுடன் விளையாட ஆரம்பிக்க.... இவர்களைப் பெற்ற இரு ஜோடிகளும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தனர்...

"நீங்க பாலக்காட்டில் தான் ஏறினீங்க போலருக்கு? ஆனா தமிழ் நல்லா பேசுறீங்களே?" என்று அருணகிரி பத்ரியைப் பார்த்துக் கேட்க....

"எங்க சொந்த ஊர் திருச்சிப் பக்கம் ஒரு கிராமம்ங்க... நான் இங்க பாலக்காடு ரயில்வேயில் கேட்கீப்பரா வேலை செய்றேன்....... நாகர்கோயில்ல இவளோட சித்திப் பொண்ணுக்கு கல்யாணம்... அதுக்காகப் போறோம்" என்றார் பத்ரி....

"ஓ... சரி சரி... நாங்க பெங்களூர்... சொந்தமா சின்னதா ஒரு ஸ்டீல் கம்பெணி வச்சிருக்கேன்... இப்போ கொஞ்சம் ஓய்வு கிடைச்சது... அதான் தென்மாவட்டங்களுக்கு ஒரு சுற்றுளா கிளம்பிட்டோம்..." என்ற அருணகிரி பக்கத்திலிருந்த மனைவியை காட்டி "இவ என் மனைவி சந்திரமதி" என்று அறிமுகம் செய்து வைத்தார்...

உடனே பத்ரி தன் மனைவியை அறிமுகம் செய்து வைத்தார்... 

இரு குடும்பமும் பரஸ்பரம் பேசிக்கொண்டே நெருக்கமாகினர்.... ஆண்கள் இருவரும் ஒரு இருக்கையிலும் பெண்கள் எதிர் இருக்கையிலும் மாற்றி அமர்ந்துகொண்டனர்

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க தேவி... அப்படியே அம்மன் சிலையாட்டம்......." பெண்ணாகயிருந்தும் இன்னொருப் பெண்ணின் அழகை மனம் திறந்து பாராட்டும் பக்குவம் சந்திராவிடம் இருந்தது....

தேவி பதில் சொல்லவில்லை... அழகாக வெட்கப்பட்டு "நீங்களும் அழகுதான்,, அண்ணா ரொம்ப லக்கி" என்றுவிட்டு சிரித்தாள்...

"நான் அழகுன்னு சொன்ன முதல் ஆள் நீதான் தேவி..." சட்டென்று நட்புடன் ஒருமைக்குத் தாவிய சந்திரா "ஆனா குட்டிப் பொண்ணு கூட உன்னை மாதிரி ரொம்ப அழகா வருவா... அப்படியே உன் ஜாடை தேவி" என்றாள்...

இதற்கும் வெட்கமாக ஒரு சிரிப்புதான் பதிலாக வந்தது தேவியிடம்... அருணகிரியிடம் பேசிக்கொண்டிருந்தாலும் தன் மனைவியின் வெட்கத்தை ரசிக்கத் தவறவில்லை பத்ரி...

அருணகிரி பரம்பரையாகவே சற்று வசதிப் படைத்தவராயினும் அந்த கர்வமில்லாமல் சகஜமாக பேசினார்.... சந்திரமதியும் கணவனைப் போலவே கர்வமின்றி தேவியிடம் பேசிக் கொண்டிருந்தாள்...

காலை உணவாக இரு குடும்பமும் எடுத்து வந்திருந்ததை பகிர்ந்து உண்டனர்.... சின்னவனும் குழந்தையும் அடித்த லூட்டியில் பெரியவர்கள் சிரித்து மகிழ்ந்தபடி வர நேரம் போனதே தெரியவில்லை...

சற்றுநேரத்தில் குழந்தை உறக்கத்திற்காக அழ ஆரம்பித்தாள்,, தேவி மெல்லியப் புடவையென்றை எடுத்து இரண்டு சீட்டுக்கும் நடுவே தூளிக்கட்டி அதில் மகளைக் கிடத்தி ஆட்டிவிட... அவளுடன் சின்னவனும் சேர்ந்து கொண்டான்... "ச்சூ பாப்பா,, அத கூதாது... உனக்கு சாக்கித் ததவா?" என்ற அவனது மழலையில் மயங்கிப் போன தேவி அவனையும் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு குழந்தையின் தூளியை ஆட்டி விட்டாள்....

பத்ரி,, கேரளாவில் தனக்கு தெரிந்த ஊர்கள் வரும் போதெல்லாம் அதன் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறியபடி வந்தார்... ரயில் கோட்டயம் தாண்டியதும் வேகமெடுத்தது... பகல் பத்து மணிக்கு காயங்குளம் ஏரியின் பாலத்தின் மீது பயணிக்கையில் இருபுறமும் தெரிந்த கேரளத்து இயற்கை அழகைக் காண கண்கள் கோடி வேண்டும் போல் இருந்தது...

ஓங்கி வளர்ந்த தென்னைகளும் பாக்கு மற்றும் பலா மரங்களுமாக கேரளத்து பூமி பச்சைப் பசேலென்று இருக்க..... இருவரும் மனைவிகளை அருகில் அமர்த்திக் கொண்டு ரசித்துக் கொண்டு வந்தனர்... தூரலா? சாரலா? என்று வகைப் படுத்த முடியாத மழைச் சரங்கள் பூமியை முத்தமிடத் தொடங்கின... தேவி குளிரில் கணவனுடன் ஒண்டிக் கொண்டாள்.... 

"அடுத்ததா அஷ்டமுடி ஏரி வரும்... ரொம்ப அழகான.. அதே சமயம் ஆழமான ஏரியும் கூட..... அந்த ஏரி மேல் செல்லும் பாலம் பெருமான் பாலம்னு சொல்வாங்க.... கொஞ்சம் பழமையான பாலமும் கூட...." என்று பத்ரி கூறும் போதே அஷ்டமுடி ஏரியின் சில்லிப்பு காற்றில் கலந்து வந்து உடலைத் தழுவி சிலிர்க்க வைத்தது...

சின்னவன் கைத்தட்டி ரசித்துக் கொண்டு வர "வாடா சின்னு" என்று தேவி தனது கைகளை நீட்டியதுமே அவளிடம் வந்து மடியில் ஏறி அமர்ந்து கொண்டான்....

பகல் சரியாக 12-50...... ரயில் தனது வேகத்தைக் குறைக்காமல் செல்ல.... "பாலம் ரொம்ப பழசு.. ஆனா ரயில் வேகம் குறையாம போகுதே?" என்று பத்ரி சந்தேகமாகக் கூறும் போதே பாலத்தின் கால்வாசியைக் கடந்த ரயில் தனது அதி வேகத்தால் பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டது...

இஞ்சினுக்கு அடுத்த பெட்டியிருந்து வரிசையாக ஒன்பது பெட்டிகள் பாலத்திலிருந்து நகர்ந்து ஏரிக்குள் விழ ஆரம்பித்தது.... ரயில் பெட்டிகளில் இருந்தவர்களின் கூக்குரல் எட்டுதிக்கும் ஒலிக்க... சுற்று வட்டார கிராம மக்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்....

முதலில் விழுந்த நான்கு பெட்டிகள் ஏரியின் அடியாளத்துக்குச் சென்றுவிட... அதனுள் இருந்தவர்களின் கூக்குரல் கேட்டுக்கொண்டே தண்ணீருக்குள் மறைந்தது... கதவைத் திறந்து தப்பிக்க முயன்றவர்களும் தண்ணீருக்குள் உதிர ஆரம்பித்தனர்...

அதன் மேல் விழுந்த பெட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்க... அந்தரத்திலும் சில பெட்டிகள் தொங்கிக் கொண்டிருந்தன..... தொங்கியப் பெட்டிகளில் பத்ரிநாத், அருணகிரி குடும்பங்கள் பயணம் செய்த பெட்டியும் ஒன்று....

தலைகீழாக தொங்கியப் பெட்டியிலிருந்து ஆளுக்கொருப் பக்கமாக சிதறிக் கிடக்க... ஆண்கள் இருவரும் தங்களின் மனைவி குழந்தைகளைத் தேடினர்.... மெல்ல முழ்க ஆரம்பித்த பெட்டியில் உருண்ட வேகத்தில் எங்கெங்கோ மோதிக்கொண்டதால் ரத்தக் காயமும் எழும்பு முறிவுகளும் பயணிகளை வலியால் கதற வைத்தது....

அதற்குள் ஓடி வந்திருந்த சில கிராம மக்கள் பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்......



பத்ரிக்கு அதிக அடியில்லை... தன்னைச் சுற்றிலும் தேடினார்.... சற்றுத் தள்ளி சந்திரமதி நெற்றியில் வழிந்த ரத்தத்தோடு நடந்தது புரியாமல் அதிர்ச்சியுடன் விழித்துக் கொண்டிருக்க.... சட்டென்று கை நீட்டிய பத்ரி "என் கையைப் பிடிச்சுக்கிட்டு மேல் நோக்கி நகர்ந்து வாங்கம்மா" என்று தனது கையை நீட்டினார்...

சந்திரமதிக்கு நிலவரம் புரிந்தது... பத்ரியின் கையைப் பற்றிக் கொண்டு மெல்ல ஊர்ந்து வந்தவளை எமர்ஜென்ஸி வின்டோ வழியாக வெளியேற உதவினார் பத்ரி....

வெளியே வந்தவள் சரிந்து கிடந்த பெட்டியின் மேலேயே அமர்ந்து "அய்யோ,, என் புருஷனையும் மகனையும் யாராவது காப்பாத்துங்களேன்" என்று சத்தமாகக் கூக்குரலிட்டு அழுதாள்...

அடுத்ததாக பத்ரியின் பார்வையில் பட்டது அருணகிரி,, வலது கால் எதிலோ மோதியதால் மூட்டு எழும்பு முறிந்து விட வலியால் துடித்தபடி அப்படியே கிடந்தார்.... "அருண் சார்,, எப்படியாவது முயற்சி பண்ணி நகர்ந்து வாங்க" என்று பத்ரி கத்தியதும் அருணகிரி தனது காலை இழுத்துக் கொண்டு ஊர்ந்து மேலே வர.... அவரும் வெளியேற உதவியதும் சந்திரமதி தனது கணவனைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தாள்...

இரண்டு சீட்டுக்கிடையே கம்பியைப் பிடித்து தொங்கியபடி இருவரைக் காப்பாற்றிய பத்ரி தனது மனைவி மகளையும் தேட.... தேவி கடைசியாக உடைந்து தொங்கிய ஒரு சீட்டுக்கு நடுவே சிக்கிக்கொண்டிருந்தாள்.... அவளின் அழகு முகமெங்கும் ரத்தம்... தூளியில் கிடந்த குழந்தை ஒரு சீட்டில் கிடந்து அழுது கொண்டிருக்க... சந்திரமதியின் மகன் தேவியின் அணைப்பில் துளி கூட அடியில்லாமல் பாதுகாப்பாக இருந்தான்...

"மெல்ல மேல வா தேவி" கத்தினார் பத்ரி....

கால்கள் இரண்டும் சீட்டுகளுக்கிடையே சிக்கி தொடையில் ஏதோவெரு கம்பி குத்தி அதுவேறு ரத்தம் வழிந்து கொண்டிருக்க..... கொஞ்சம் கொஞ்சமாக நினைவு தப்பியவளை பத்ரியின் குரல் மீட்டது...

"தேவி,, நம்ம குழந்தை தேவி..... சிமிம்மாவை மேல தூக்கிக் குடும்மா" பத்ரி கதறினார்....

ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரமதி " தேவி,, என் பிள்ளையை காப்பாத்து தேவி" என்று கை கூப்பியபடி கதறினாள்....

தேவிக்கு நினைவு தப்பினாலும்... குழந்தைகளையாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற உந்துதலில் உயிரைப் பிடித்து வைத்தாள்.... 

பாதியாய் மூழ்கிய பெட்டிக்குள் நீர் சரசரவென ஏறியது.... பாதிப் பெட்டிவரை நீரில் மூழ்கியிருக்க.. நேரம் ரொம்பவே குறைவாக இருப்பதும் புரிந்தது....

"வந்துடு தேவி,, குழந்தைகளைத் தூக்கிக் கிட்டு மேல வந்துடு தேவி" அலறினார் பத்ரி....

"எப்படியாவது மேல வந்துடு தேவி" சந்திராவும் தன் பங்கிற்கு கத்தினாள்...

குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேகம் தேவியை உயிர்க்க வைக்க... மிரண்டு போய் அழுத சின்னவனைப் பார்த்து "சின்னு,, ஆன்ட்டி முதுகுல படுத்து கழுத்தைக் கட்டிப் பிடிச்சுக்க தங்கம்" என்று தட்டுத் தடுமாறி சுவாசத்திற்குத் திணறியவளாகக் கூறினாள்

உடனே புரிந்து கொண்டு தேவியின் முதுகைக் கட்டிக் கொண்டான் சின்னு...... பெரும் முயற்சி செய்து கால்களை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள் தேவி.... கைக்கெட்டும் தொலைவில் மகள்.... கீழே தண்ணீர்... கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வந்தது...

"வந்துடு தேவி,, பெட்டி தண்ணிக்குள்ள முங்குது தேவி" பத்ரியும் சந்திரமதியும் மாற்றி மாற்றி அலறினார்கள்....

தேவியின் காதுகளில் அவர்களின் அலறல் விழுந்தது... அய்யோ குழந்தைகளை காப்பாத்திடனுமே,, மந்திரம் போல் முனுமுனுத்தபடி கை நீட்டி எட்டி மகளிருந்த சீட்டைப் பற்றிக் கொண்டாள்.... தாயைக் கண்டதும் அவளுக்கு சிரமமின்றி குழந்தை தன் தாயை நோக்கித் தாவிக் கொண்டு வந்தாள்...

மகளை வலது கையால் வாறியெடுத்துப் பக்கவாட்டில் அணைத்துக்கொண்டாள்.... முதுகில் சந்திரமதியின் மகன் சின்னுவை சுமந்தபடி வலது கையால் ஒரு ஒரு சீட்டின் அடியில் இருக்கும் இரும்பு கம்பிகளை ஆதாரமாகப் பற்றிக்கொண்டு மெல்ல முன்னேறினாள்... நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் தலையில் பலத்த காயம் என்று உறுதி படுத்த... செயலிழந்து போல் கிடந்த கால்களை இழுத்துக்கொண்டு இஞ்ச் இஞ்சாக மேலேறினாள்...

ரத்தம் சொட்ட மேலேறிய மனைவிக் கண்டு கதறியபடி பத்ரி கீழே இறங்க முயற்சிக்க.... யாரோ அவரின் சட்டையைப் பிடித்து வெளியே இழுத்தார்கள்.... அவர்களிடமிருந்து நழுவ முயன்றவரை கிராம மக்கள் பிடிவாதமாக இழுத்து வெளியே விட "அய்யோ என்னை விடுங்க,, என் மனைவியும் குழந்தையும் உள்ள மாட்டிக்கிட்டாங்க" என்று கதறியபடி ஜன்னல் வழியாக உள்ளேப் பார்த்தார்....

ஊசலாடும் உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு மேலேறிய தேவியை விட தண்ணீர் அதி வேகமாக மேலேறி ரயில் பெட்டி முற்றிலும் முழுக ஆரம்பித்தது....

யாரோ சிலர் அருணகிரி, சந்திரா, பத்ரி, மூவரையும் இழுத்து படகில் ஏற்றவும் அந்தப் பெட்டி சிறுகச் சிறுக மூழ்கவும் சரியாக இருந்தது...

"அய்யோ,, மகனே" என்றபடி கதறியழுத மனைவிக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியாது கால் எலும்பு முறிந்து போன கண்ணீருடன் கிடந்தார் அருணகிரி...

மனைவியையும் மகளையும் தன் கண்ணெதிரே நீருக்குள் மூழ்க விட்ட அதிர்சியில் இருந்து மீளாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படகில் சரிந்தார் பத்ரி...

அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.... மூழ்கிய பெட்டியின் எமர்ஜென்ஸி வின்டோ வழியாக சின்னுவையும் தனது மகளையும் வெளியே தள்ளிக் கொண்டிருந்தாள் தேவி...

"ஏடோ கொச்சுன்னு நோக்கட்டோடா" என்று கத்திய மீட்புக் குழுவினரில் இருவர் தண்ணீருக்குள் பாய்ந்து நீந்திச் சென்று குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வேகமாக நகரவும் அந்தப் பெட்டி முற்றிலும் மூழ்கிப் போனது....

மகன் மீண்ட சந்தோஷத்தில் கதறியழுத சந்திரமதி அந்த பெட்டி மூழ்கிய இடத்தை நோக்கி கைகூப்பிக் கும்பிட்டு "என் குலதெய்வமே தேவி,, என் மகனை காப்பாத்திக் கொடுத்த தெய்வமே" என்று புலம்பி அழுதாள்...

பத்ரியிடம் மகள் மட்டும் ஒப்படைக்கப்பட்டாள்... மகளைக் கட்டிக்கொண்டு மனைவிக்காக கதறினார்....

சற்று நேரத்தில் மீட்புக் குழுவினரின் பெரிய படகு வந்து அனைவரையும் அழைத்துக்கொண்டு கரைக்கு வந்தது.... காயம் பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்....

மீட்புக் குழுவினர் தண்ணீருக்குள் மூழ்கி உயிருக்குப் போராடியவர்களையும் இறந்து போனவர்களின் உடல்களையும் மீட்டனர்... மீட்கப்பட்ட உடல்களில் தெய்வப் பெண்மணி தேவியின் உடலும் ஒன்று...






" நம் முதல் அறிமுகமே,

" நான் உனக்கு சேயாகவும்,

" நீ எனக்கு தாயாகவும் தானே?

" இவர் தான் அப்பா..

" இதுதான் உலகமென்று

" அத்தனையும் அறிமுகம் செய்து,

" உறவுகளையெல்லாம் உறைத்துக் காட்டி,

" ஒர் நொடியில் ஒளிபிழம்பாய் மாறி,

" உயிரோடு மறைந்ததேனோ? 
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 30-05-2019, 10:50 AM



Users browsing this thread: 1 Guest(s)