30-05-2019, 10:20 AM
[color=var(--title-color)]சென்ற முறை விஷால், கார்த்தி... இந்த முறை? நடிகர் சங்கத் தேர்தல் அறிவிப்பு[/color]
[color=var(--title-color)]தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது[/color]
[color=var(--meta-color)]தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்[/color]
[color=var(--content-color)]நடிகர் நாசர் தலைமை வகித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்தது. முன்னதாக நடந்த நடிகர் சங்க நிர்வாகிகளின் கூட்டத்தில், நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் சங்கத் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களின் தலைமையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.[/color]
[color=var(--content-color)]தென்னிந்திய நடிகர் சங்கம்[/color]
[color=var(--content-color)]முன்னதாக ஆனந்த விகடனுக்குப் பேட்டியளித்த நடிகர் நாசர், 'சென்ற பதவிக்காலத்தில் இருந்தவர்களில் துணைத் தலைவர் பொன்வண்ணன் தவிர, நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர். எஞ்சியுள்ள பதவிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.[/color]
[color=var(--content-color)]அதேபோல், கடந்த முறை நாசர், விஷாலை எதிர்த்துப் போட்டியிட்ட சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் நாசர் அணியை எதிர்த்துப் போட்டியிட நடிகர் ஆர்.கே.சுரேஷ் திட்டமிட்டுள்ளார். இவரின் அணியினர் கார்த்தி போட்டியிடும் பொருளாளர் பதவியைத் தவிர மற்ற அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளனர். அந்த நடிகர்களின் பட்டியலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.[/color]
[color=var(--content-color)][/color]
[color=var(--content-color)][/color]
[color=var(--content-color)]இந்த நிலையில், ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னனி நடிகர்கள் அங்கம் வகிக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூன் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)]நடிகர் சங்கக் கட்டடம்[/color]
[color=var(--content-color)]ஒரு தலைவர், இரண்டு உப தலைவர், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், 24 செயற்குழு உறுப்பினர்களுக்கான இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல், வைப்புத் தொகை, வேட்பாளர் முன்மொழிவதற்குரிய தகுதி என அனைத்தும் அடங்கிய ஒரு அறிக்கையை இன்று நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரி நீதியரசர் பத்மநாபன் வெளியிட்டுள்ளார்[/color]