30-05-2019, 10:09 AM
ஐரோப்பிய யூனியன் தேர்தலுக்குத் தயாராகும் தென்னிந்திய கிராமம் - சுவாரஸ்ய தகவல்கள்
இந்தியத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள இந்திய மக்கள் ஆர்வமாக உள்ள நேரத்தில், யானமில் தொலைதூர கிராமத்தில் இருக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம் ஐரோப்பியத் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகி வருகிறது.
பிரான்ஸ் அரசின் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்ட பகுதியாக ஏனாம் இருந்துள்ளது. இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பிறகு 1954ல் அந்தப் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மாகே, காரைக்கால், ஏனாம், புதுவை ஆகிய பகுதிகள் புதுவை யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. இதில் சில குடிமக்கள் இன்னும் பிரான்ஸ் தேசத்து குடிமக்கள் என்ற உரிமையையும் வைத்துள்ளனர். அந்தக் குடிமக்களில் சுமார் 5,500 பிரெஞ்ச் வாக்காளர்கள் உள்ளனர்.
வங்காள விரிகுடா கரையோரத்தில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் யானம் பகுதி அமைந்துள்ளது. அங்கு 32,000 பேர் வாழ்கின்றனர். அதில் இந்தச் சிறிய கிராமத்தில் உள்ள 80 வாக்காளர்கள், மே 23 முதல் 26 வரை நடைபெறும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
ஏனாம், பிரான்ஸ் அரசின் காலனி ஆதிக்கப் பகுதி
ஏனாம் பகுதி 1723 முதல் 1954 வரையில் பிரான்ஸ் அரசாட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. இப்போதும்கூட அதை பிரெஞ்ச் யானம் என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
இந்தியாவுடன் யானம் இணைந்துவிட்ட போதிலும், பிரான்ஸ் அரசில் பணிபுரிந்தவர்கள் இந்தியா மற்றும் பிரான்ஸ் குடிமக்கள் அந்தஸ்தைத் தேர்வு செய்து கொள்ளும் விருப்ப உரிமை வழங்கப்பட்டது. பலர் இந்திய குடியுரிமை பெற்றுக் கொண்ட போதிலும், சிலர் பிரெஞ்ச் குடியுரிமையை வைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.
அவர்களுடைய வழித்தோன்றல்களுக்கும் தானாகவே பிரெஞ்ச் குடியுரிமை கிடைத்தது. சில குடும்பத்தினர் பிரான்சில் குடியேறிவிட்டனர்.
பிரெஞ்ச் தேசியக் கொடியை நினைவுபடுத்தும் வகையிலான நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்ட, பிரெஞ்ச் கட்டுமான கலைநயத்தைக் காட்டும் கட்டடங்கள் ஏனாமின் தெருக்களில் இன்னமும் பிரெஞ்ச் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன.
தொடரும் மரபு
பிரான்ஸ் அரசில் பணிபுரிந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை உள்ளது என்று, யானமில் பிரான்ஸ் குடிமக்களுக்கான ஆலோசகராக உள்ள சதனலா பாபு பி.பி.சி.யிடம் தெரிவித்தார். பிரெஞ்ச் குடிமக்கள் தொடர்பான விவகாரங்களைக் கவனிப்பதற்காக பிரெஞ்ச் அரசால் இவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
``என்னுடைய தாயார் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர். அவர் மூலமாக எனக்கு அந்தக் குடியுரிமை கிடைத்தது. 1979ல் இருந்து ஐரோப்பிய தேர்தல்களில் நாங்கள் பங்கேற்று வருகிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.
வாக்களிப்பின் நடைமுறைகளை விவரித்த அவர், ``புதுவை மற்றும் சென்னையில் பிரெஞ்சு தூதரகங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டிருக்கும். பயணம் செய்ய முடியாதவர்கள், நேரில் செல்லாமல் இன்னொருவர் மூலமாக வாக்களிக்கும் வசதியும் இருக்கிறது. வாக்களிப்பதற்காக நீண்ட தொலைவுக்கு பயணம் செய்ய முடியாதவர்கள், தங்களுடைய வாக்கின் உரிமையை எழுத்துபூர்வமாகத் தெரிவிப்பார்கள். ஒரு வாக்காளர், வேறு இருவரின் வாக்குகளை இவ்வாறு எடுத்துச் சென்று அவர்கள் சார்பாக வாக்குகளைப் பதிவு செய்யலாம்'' என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டுக்கு வெளியே வாழும் பிரெஞ்ச் குடிமக்களுக்கு ஒரு கட்சி என்ன வசதிகளை செய்து தர முன்வருகிறது என்பதன் அடிப்படையில், வேட்பாளர்களை தாங்கள் தேர்வு செய்வதாகவும் அவர் கூறினார்.
பிரெக்சிட் முடிவு காரணமாக, இப்போதைய ஐரோப்பிய யூனியன் தேர்தல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய யூனியனில் பிரான்ஸுக்கு 72 பிரதிநிதிகள் உள்ளனர். அதில் மூன்று பேர் யானம் பகுதியின் பிரெஞ்ச் குடிமக்களின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். இந்த மூன்று இடங்களுக்கு 33 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குச் சீட்டு முறையில் அவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.
இந்தியாவுக்கான பாடங்கள்
பிரெஞ்ச் குடியுரிமை தொடர்பாக இந்தியாவுக்கும் பிரான்ஸ் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன என்று, புதுவை அரசில் கால்நடை பராமரிப்புத் துறையில் இணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற மேடிசெட்டி ஜின்னாய்யா தெரிவிக்கிறார்.
``நான் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவராக இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாக இந்திய அரசின் அலுவலராக இருந்திருக்கிறேன்'' என்று அவர் விவரித்தார்.
இந்தியா மற்றும் பிரான்ஸ் தேர்தல் நடைமுறைகளுக்கு இடையே உள்ள மாறுபாடுகள் பற்றி குறிப்பிட்ட அவர், ``பிரான்ஸ் தேர்தலில், பிரச்சாரம் செய்யும் வகையில் வாக்காளர்களை வேட்பாளர்கள் சந்திப்பது கிடையாது. அரசே பிரச்சாரம் செய்கிறது. வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள், செயல்பாடுகள் குறித்த விவரங்களை அரசே வாக்காளர்களுக்கு மெயில் மூலம் தகவல் அனுப்பிவிடும். அதன்பிறகு தங்கள் விருப்பத்தின்படி வேட்பாளர்களை வாக்காளர்கள் தேர்வு செய்கின்றனர்'' என்று தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு தான் முதன்மையான கவனம் செலுத்தப்படும் என்கிறார் ஜின்னய்யா.
இந்தியாவின் தேர்தல் முடிவுகள் பற்றி இந்திய வாக்காளர்கள் ஆர்வம் கொண்டிருப்பதைப் போல, பிரெஞ்ச் தேர்தல்கள் பற்றி நாங்கள் ஆர்வம் கொண்டிருக்கிறோம் என்கிறார் அவர்.
பிரெஞ்ச் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஏனாம் அரசில் பணியாற்றும் ஜுரேக்கா சுல்தானா உற்சாகம் கொண்டிருக்கிறார்.
``இந்திய வாக்காளர்களைப் போல, நாங்கள் பிரெஞ்சு தேர்தலில் வாக்களிக்கத் தயாராக இருக்கிறோம். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த விஷயங்களை நாங்கள் முதன்மையான விஷயங்களாகக் கருதுகிறோம். பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், எங்களுக்கு கல்வி வசதிகள் கிடைப்பது எளிதாக இருக்கிறது. மேலும் ஐரோப்பாவில் எல்லா நாடுகளுக்கும் நாங்கள் பயணம் செல்லவும் அதன் மூலம் அனுமதி கிடைக்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் அரசிடம் இருந்து தங்களுக்கு நிறைய பயன்கள் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த தலைமுறை: எனது இரு பிள்ளைகளும் பிரான்ஸில் வசிக்கின்றனர்
பிரான்ஸ் அரசு அளிக்கும் அனைத்து கல்வி உதவிகளையும் எங்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள முடியும் என்று சதனலா பாபு தெரிவிக்கிறார். ``எனது இரு பிள்ளைகளும், என் தாயாருடன் இப்போது பிரான்ஸில் வசிக்கின்றனர். எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அந்த அரசு அளிக்கிறது'' என்று அவர் கூறினார்.
``பிரான்ஸ் நாட்டுக்கு வெளியில் வசிக்கும் பிரெஞ்ச் குடிமக்கள் சார்பாக எங்கள் பிரதிநிதிகளை நாங்கள் தேர்வு செய்கிறோம். எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அவர்கள் பணியாற்றுகின்றனர். புயல்கள் மற்றும் இயற்கைப் பேரிடர் சமயங்களில் எங்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன. தகுதி உள்ளவர்களுக்கு முதியோர் ஓய்வூதியங்கள் வழங்கப் படுகின்றன'' என்று அவர் தெரிவிக்கிறார்.
யானமில் வரி விகிதங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளன. பிரெஞ்ச் குடிமக்களுக்கு மாதம் 830 யூரோக்கள் ஓய்வூதியமாக பிரெஞ்ச் அரசிடம் இருந்து கிடைக்கிறது.
யானம் மட்டுமின்றி, உலகில் 52 நாடுகளில் பிரெஞ்ச் குடிமக்கள் வாழ்கின்றனர். இந்த மக்களின் நலன்களை பிரெஞ்ச் அரசாங்கம் கவனித்துக் கொள்ளும்.
ஐரோப்பிய யூனியன் தேர்தல்கள் மே 23 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. புதுவையில் இந்த எல்லையில் உள்ள வாக்காளர்கள் மே 26 ஆம் தேதி வாக்களிப்பார்கள். 28 நாடுகளைச் சேர்ந்த 10 கூட்டணிகள் இந்தத் தேர்தல்களில் போட்டியிடுகின்றன.