06-12-2022, 07:32 PM
(06-12-2022, 06:44 PM)Manma dhan67 Wrote:இந்த கதையை எழுத ஆரம்பித்த போது என்ன செய்யக் கூடாது என்று நினைத்தேனோ அதை செய்ய வேண்டிய நிலை உருவாகி விட்டது. இந்த பதிவு யாரையும் குறை சொல்லும் பதிவல்ல. என் மனக் குறையை என் கதைக்கு இருக்கும் மிக சொற்பமான ஆதரவாளர்களுடனும் இந்த தளத்தில் நல்ல கதைகளை தேடிக் கொண்டிருக்கும் அப்பாவிகளிடமும் சொல்ல நினைக்கிறேன்.
அதற்கு முன் கதையின் அடுத்த பகுதியை பதிவதில் ஏற்பட்ட தாமத்திற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த இடைவெளி ஏற்பட்டது என்னவோ ஒரு நியாயமான காரணத்திற்காக தான். நான் எப்போதும் அடுத்தடுத்த மூன்று பதிவுகள் போடும் அளவுக்கு கதை தயாராக இருந்தால் மட்டுமே கதையின் அடுத்த பகுதியை பதிவேன். அப்படி செய்தால் தான் எதோ ஒன்றை எழுதி பதிவிட வேண்டும் என்ற கடமைக்காக அவசர கதியில் எழுதி அதில் எந்த சுவாரசியமும் இல்லாமல் போகும் ஆபத்து வராமல் இருக்கும்.
கதை ஆரம்பித்த போது சீரான இடைவெளியில் கதையின் பாகங்கள் பதிவிடப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். அந்த ஆர்வ கோளாறில் சொன்ன வார்த்தை மீறாமல் வாரம் மூன்று பதிவுகள் பதிந்ததன் விளைவு எழுதும் வேகம் எழுதிய பகுதிகளுடன் போட்டி போட முடியாமல் தயாராக இருந்த பகுதிகள் அனைத்தையும் பதிவு செய்து விட்டேன்.
அதனால் இன்னும் மூன்று பதிவுகள் போடும் அளவுக்கு கதையை தயார் செய்த பின் தான் பதிவிட வேண்டும் என்று பதிவுகளில் இடைவெளி விட்டேன்.
ஆனால் அதனால் நான் எதிர்பாராத ஒரு விசயம் கவனிக்க நேர்ந்து என் மனம் உற்சாகம் இழக்க காரணமாகி விட்டது.
எழுத்துப் பிழைகள் இல்லாமல் உணர்ச்சிகளை தூண்டும் வர்ணனைகளோடு மிக சிறப்பாக நான் கதை எழுதுவதாக என்னை நானே ஏமாற்றிக் கொண்டது புரிந்தது.
இந்த தளத்தில் கதை எழுதுவது என்னுடைய நோக்கமே இல்லை. பழைய தளமாகட்டும், இந்த தளமாகட்டும், ஒரே தளத்தில் ஏகப்பட்ட கதைகள் கொட்டி கிடப்பது இங்கே தான் என்பதால் கதைகளை படிக்க தான் இந்த தளத்தில் அதிக நேரம் செலவிடுவேன்.
அப்படி நான் இந்த தளத்திற்கு வரும் போதெல்லாம் முதலில் கவனிப்பது என் கதைகளின் பகுதிகளுக்கு எத்தனை பேர் லைக் போட்டிருக்கிறார்கள், ரேட்டிங் யாராவது கொடுத்து எனக்கான ரெபுடேசன் மதிப்பு அதிகமாகி இருக்கிறதா என்பதை தான்.
லைக்ஸ்ம், ரெபுடேசனும் அதிகமாகி இருந்தால் என் மனம் மகிழ்ச்சியடையும்.
என் கதையில் கமெண்ட் செய்யும் ஒவ்வொருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லி பதிலளிக்கிறேன்.
ஆனால் இப்போது கதையில் இடைவெளி விட்ட போது இரண்டு நாட்களில் என் கதை கேட்பார் படிப்பார் யாருமின்றி நூறாவது இடத்தை தாண்டி கீழே கீழே சென்றுக் கொண்டே இருந்தது.
அது எனக்கு பெரிய ஆச்சரியம் தான்.
கதை யாருக்கும் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். தேடி வந்து படிப்பவர்கள் ஒருவர் கூட இல்லை. பதிவு போட்டிருந்தால் படிப்போம். இல்லை என்றால் அடுத்த கதைக்கு போவோம் என்ற நிலையில் தான் என் கதை இருக்கிறது என்பது புரிந்தது.
இதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. என் கதையை படியுங்கள் என்றோ, கருத்து சொல்லுங்கள் என்றோ, லைக்ஸ் போடுங்கள் என்றோ யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்பது எனக்கும் தெரியும்.
இருந்தாலும் மனம் சோர்ந்து விட்டது.
ஆனால் அவ்வப்போது இந்த தளத்திற்கு வருவதையும் நல்ல கதைகளை தேடுவதையும் விட முடியவில்லை.
அப்படி தேடும் பொழுது இன்னொரு விசயமும் கவனித்தேன்.
அதை விளக்கமாக சொல்லும் முன் ஒரு சின்ன விசயம் சொல்கிறேன். சோதித்து பாருங்கள்.
நீங்க இந்த பதிவை படிக்கும் போது இந்த தளத்தில் டாப் லிஸ்ட்டில் காட்டப்படும் கதைகளை ஒரு முறை பாருங்கள்.
இரண்டு வருடங்களாக பதிவுகளே போடாத கதைகளுக்கு அப்டேட் அப்டேட் என்று வரிசை கட்டி கமெண்ட் போட்டு மேலே கொண்டு வந்திருப்பார்கள்.
இல்லையென்றால் படிக்கவே முடியாத அளவுக்கு வார்த்தைக்கு வார்த்தை எழுத்துப் பிழைகள் இருக்கும் கதைகளில் கமெண்ட் போட்டிருப்பார்கள்.
இது போக இந்த தளத்தில் நான் அதிக நேரம் செலவழிப்பவன் என்பதால் கவனித்த இன்னொரு விசயம் பாதி கதைகள் பதிவுகள் எதுவுமே இல்லாமல் வெற்றுப் பக்கங்களாக இருக்கின்றன.
இங்கே கதை எழுத என்ன மாதிரியான கதை எழுத வேண்டும் என்பதே எனக்கு புரியவில்லை.
ஒரு வாரமாக லைக்ஸ் ஒரே நம்பரில் நிற்கிறது.
லாகின் செய்து படிக்கும் யாருமே என் கதையை தேடவில்லை.
இதெல்லாம் கதையை தொடரும் ஆர்வத்தை சுத்தமாக துடைத்து எறிந்து விட்டாலும் கதையை நிறுத்தும் எண்ணம் இல்லை.
ஆனால் இனி எதையுமே எதிர்பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
அதே போல் சீரான இடைவெளியில் கதையை பதிய முடியுமா என்று தெரியவில்லை. எப்போதெல்லாம் ஒரு பதிவு செய்வதற்கான அளவு கதை தயாராக இருக்கிறதோ அப்போதெல்லாம் கதையை பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
இப்போதைக்கு ஆர்வம் குறைந்திருப்பதால் கதை எழுத உகந்த மனநிலை இல்லை.
விரைவில் வருவேன்.
இதுவரை ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த சிறிய ஏமாற்றத்திற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
brother........v didnt expect this from u.....really sorry brother....pls continue