24-11-2022, 02:39 AM
இந்த தளத்தில் நான் சில வித்தியாசமான விசயங்களை காண்கிறேன்.
ஆர்வ கோளாறில் கதையை துவங்கி விட்டு பின் தொடர முடியாமல் போவது இப்போது மிக சகஜமான ஒன்றுதான். ஆனால் நான் கவனித்ததில் வேறு சில வினோதமான விசயங்களும் நடக்கின்றன.
அதில் முக்கியமானது ஒரு சில கதைகள் கமெண்ட்களையும் வ்யூஸையும் பார்க்கும் போது நல்ல வரவேற்பு பெற்றிருக்கும். ஆனால் கதைக்கான திரியை ஓபன் செய்து பார்த்தால் எதுவுமே இருக்காது. கமெண்ட் மட்டும் ஆஹா ஒஹோ என்று இருக்கும். கதையின் பதிவுகள் எடிட் செய்யப்பட்டு ப்ளாங்காக இருக்கும். இதை கதையை எழுதிய நபரை தவிர வேறு யாரும் செய்ய முடியாது. எடிட் ஆப்சனை வைத்து இப்படி செய்கிறார்கள். எதனால் இப்படி செய்கிறார்கள். இதில் இவர்களுக்கு என்ன சந்தோஷம் என்று புரியவில்லை.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.