26-12-2018, 06:40 PM
மெல்போர்ன் டெஸ்ட்: முதல் நாளில்
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மெல்போர்னில் இன்று துவங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில், பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஹனுமா விஹாரியும், மயங்க் அகர்வாலும் களம் இறங்கினார். 8 ரன்கள் மட்டுமே எடுத்த ஹனுமா விஹாரி பட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-வது வீரராக களம் இறங்கிய புஜாரா, துவக்க வீரர் மயங்க் அகர்வாலுடன் இணைந்து நிதானமாகவும் அதேசமயம் பொறுப்புடனும் விளையாடினார். இதற்கு மத்தியில் சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 76 ரன்களில் பட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதையடுத்து, கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். புஜாரா- விராட் கோலி ஜோடி கவனமாக விளையாண்டு மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர். முதல் நாளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஆட்டநேர முடிவில், 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 68 ரன்களுடனும் விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.