கருப்பு தினம்!
#11
ச்சே... என்ன ஒரு நாடு இது... மதம் கடந்து மனிதம் காப்பது நம் இந்திய நாட்டில் மட்டும் தான் சாத்தியமோ? என மெய் சிலிர்த்தவாரே நசீராவின் VIP அறைக்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றேன்.

அங்கே அப்படி ஒரு அறையை பார்த்தது இல்லை. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு சுத்தம். நசீராவை போலவே அவள் தங்கி இருக்கும் அறையும் பலபலத்தது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சக மாணவிகள் தங்கி இருக்கும் அறைகளுக்கு சென்றுள்ளேன். அவை சுத்தமில்லாமல் ஒழுங்கு இல்லாமல் இருக்கும்.
ஆனால் இங்கு சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தது. அறை உள்ளே நுழைந்ததும் ஒரு வித அமைதி. அறையில் மட்டும் அல்ல. என் மனதிலும் தான்.

கோவிலுக்கு சென்றால் மன அழுத்தம் நீங்கி ஒரு அமைதி கிடைக்கும் என்று படித்துள்ளேன். அதை இந்த அறையில் அனுபவிக்கிறேன்.
அப்போது இந்த அறைதான் கோவிலா? நசீராதான் தெய்வமா? மனதில் கேள்விகளோடு அவளை பார்த்தேன். இந்த நடுராத்திரியில் ஏதோ புத்தகத்தை வைத்து படித்து கொண்டிருக்கிறாள். அவள் அழகிலும் வசீகரத்திலும் அவளின் அமைதியிலும் ஒரு தெய்வீக கலை தெரியத்தான் செய்தது.

நான் நசீராவை பார்ப்பதை கவனித்த நசீரா என்னை படுத்து உறங்க சொன்னாள்.
கட்டில் பெருசுதான். மிக மிருதுவான மெத்தை. கொசு கடியில்
மண் தரையில் உறங்கி பழகிய ஏழை பெண்ணாகிய நான் இன்று முதன் முதலில் சொகுசு மெத்தையில் ஃபேன் காற்றில் படுக்கிறேன்.
பயண களைப்பும், சொகுசு மெத்தையும் என் கண்களுக்கு விரைவாக உறக்கத்தை கொடுக்க அசதியில் என் நிலை மறந்து தூங்கினேன்.

திடீரென்று 
என்னை சுற்றி யாரென்றே தெரியாத பல வினோத ஆண்கள் மேலாடை இன்றி சூழ்ந்திருக்க ... என்னை மோக பார்வையோடு நெருங்க...
என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. அவர்கள் சொல்லும் படி செய்கிறேன்.அவர்கள் ஆசைக்கு இணங்குகிறேன்.
என் ஆடைகளை கழற்றுகிறார்கள்... நான் தடுக்கிறேன்... உடலில் பலம் இல்லை.. தள்ளாடி தடுமாறி கீழே விழுந்தேன். விழுந்த அதிர்வில்
நான் திக் என்று எழுகிறேன்.
எழுந்து பார்த்தால் எல்லாம் கனவு.

சென்னை வந்த முதல் நாளே இப்படி ஒரு கனவா? இது நல்ல சகுனம் தானா? இல்லை எதுவோ என்னை எச்சரிக்கிறதா?
குழம்பியப்படி திரும்பி பார்த்தேன்.
அங்கு நசீரா குணிந்து நிமிர்ந்து எதோ செய்ய அது புதிதாக இருந்தது. மணி அதிகாலை 5:30.
யார் இந்த நசீரா? நள்ளிரவு படிக்கிறாள். அதிகாலையில் ஏதோ செய்கிறாள். ஒன்றும் புரியவில்லையே...

யோசனை செய்தபடி பாத்ரூமிற்கு நுழைந்தேன்.
பாத்ரூம் என்றால் நாற்றம் என்று பழகிய எனக்கு பாத்ரூம் முழுக்க வாசம்.
அது சோப் வாசமா? இல்லை சென்ட் வாசமா? புரியவில்லை. நான் சென்று பல் தேய்த்து குளித்து முடித்து வேறு ஆடை அணிந்து வெளியே வர நசீரா என்னை பார்த்து புன்னகைத்தாள்.

நானும் பதிலுக்கு சிரித்து வைத்தேன்.

நான் : என்னங்க நீங்க.. நடு சாமத்துல ஏதோ படிக்கிறீங்க? அதிகாலையில் ஏதோ குனிஞ்சு நிமிர்ந்து எக்ஸர்சைஸ் பன்றீங்க. தூங்கவே மாட்டீங்களா?

நசீரா சிரித்தாள்! 
அந்த அமைதியான அறையில் நசீராவின் அழகிய சிரிப்பொலி எதிரொலித்தது.

நான் : நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க..

நசீரா மீண்டும் சிரித்தாள்... இப்போது பேரழகு! தேவதைகள் சிரிப்பு இப்படித்தான் இருக்குமோ? வியந்தேன்.

நசீரா: நான் ஒரு மெடிக்கல் ஸ்டூடன்ட். ஃபைனல் இயர்.
அம்மாவோட பூர்வீகம் கேரளா
அப்பாவோட பூர்வீகம் தமிழ்நாடு.
நான் பிறந்தது வளர்ந்தது சவுதி அரேபியாவில்.
இந்தியால இருக்க என் தாத்தா பாட்டியை பார்க்க வந்தேன். அவங்க ஆசைக்காக இங்க தங்கி மெடிக்கல் படிக்கிறேன்.
காலேஜில் இருந்து வீடு தூரம்.அதனால இங்க ரூம் எடுத்து தங்கியிருக்கேன்.
எனக்கு இப்போ படிப்பு முக்கியம் காரணம் இதான் கடைசி வருஷம்‌. இத்தனை நாள் படிச்சதெல்லாம் இந்த ஒரு வாரத்துலதான் இறுதி கட்டத்துக்கு வருது. இந்த ஒருவாரம் கடைசி செமஸ்டர்.
மத்தவங்களோட சேர்ந்து தங்கினால் கவனம் சிதறும் படிப்பில் கோட்டை விட நேரிடும்.
அதான் VIP ரூம் போட்டு தங்கி இருக்கேன்.
அதும் இல்லாமல் எனக்கு தனியாக இருக்கத்தான் பிடிக்கும்.
நீ கவலைப்படாதே. உனக்கு விருப்பம் இருக்கும் வரை இங்க தங்கிக்கலாம்.
எனக்கு ஃபைனல் எக்ஸாம் நடக்கிறது. அதனால்தான் ராத்திரி பகல்னு படிச்சிக்கிட்டு இருக்கேன்.
அப்பறம் காலையில் நீ பார்த்தது எக்ஸர்சைஸ் இல்லை. தொழுகை. நாங்க அதிகாலை தொழுகை செய்வோம்.
நான் : அது என்ற நாங்க? நாங்க ன்னா?

நசீரா : நாங்க என்றால் முஸ்லிம். முஸ்லிம் தொழுகை பன்னுவாங்க....
சரி உன் கதையை நான் குளிச்சிட்டு வந்து கேட்டுக்கிறேன்.

சொன்னவள் சிரித்த படி எழுந்து தன் டவளை எடுத்து கொண்டு குளியலறை சென்றாள்.

குளியலறை சென்ற நசீரா மீண்டும் திரும்பி வந்தாள்...

ச்சீ... என்ன கன்றாவி இது?
முகம் சுழித்தவாரே வெளியே வர... வந்தவள் கையில் நான் குளிக்கும் முன் கழற்றி போட்ட எனது பாடி & ஜட்டி....

-தொடரும்.
Like Reply


Messages In This Thread
RE: கருப்பு தினம்! - by Ishitha - 21-10-2022, 03:18 PM



Users browsing this thread: 1 Guest(s)