28-05-2019, 10:24 AM
14 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்கும் சிம்பு: அதில் யார் நடிக்கிறார் தெரியுமா?
சென்னை:14 ஆண்டுகள் கழித்து சிம்பு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
சிம்பு தற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் படம் இயக்கும் ஆசை வந்துள்ளது.
2006ம் ஆண்டு வல்லவன் படத்தை இயக்கி, நடித்து வெளியிட்டு அனைவரையும் வியக்க வைத்தார். சின்ன வயதில் இந்த பையனுக்கு இப்படி ஒரு திறமையா என்று பலரும் வியந்தார்கள்.
இந்நிலையில் அவர் மீண்டும் படம் இயக்குகிறார். அந்த படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் மன்மதன் படம் மூலம் பிரபலமான சந்தானம் தற்போது அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்.
ஹீரோவான பிறகு இனி அடுத்த ஹீரோக்களின் படங்களில் காமெடி பண்ணுவது இல்லை என்ற முடிவில் இருக்கிறார் சந்தானம். ஆனால் சிம்புவுக்காக தனது கொள்கையை தளர்த்தியுள்ளார்.
கையில் உள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு அடுத்த ஆண்டு படம் இயக்கும் வேலையில் ஈடுபடுவாராம் சிம்பு.