Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--title-color)]ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ்... இந்தியன் 2, இம்சை அரசன் அப்டேட்ஸ்
[color=var(--content-color)]எம்.குணா[/color]
[color=var(--title-color)]கமல், வடிவேலு படங்களுக்கு 50 கோடி செலவு செய்தது லைகா.[/color]
[/color]
[Image: vikatan%2F2019-05%2Fa4ef481b-db99-45cd-8...2Ccompress][color=var(--meta-color)]ஷங்கர்[/color]
[color=var(--content-color)]'இந்தியன் -2' படத்துக்கான வேலையை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை சோதனை மேல் சோதனை. முதலில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனையும், ஆர்ட் டைரக்டர் முத்துராஜையும் அழைத்துக் கொண்டு உக்ரைன், ஹாலந்து நாடுகளுக்குச் சென்று ஷூட்டிங் நடத்த இருக்கும் லொகேஷன்களை தேர்வு செய்துவிட்டு திரும்பினார், ஷங்கர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-05%2F71ef7333-7100-4cf5-b...2Ccompress]indian 2[/color]
[color=var(--content-color)]ஏற்கெனவே திட்டமிட்டதைவிட '2.0' திரைப்படத்தின் பட்ஜெட் எகிறிப்போனது. அதனால் 'இந்தியன்-2' படத்துக்கான பட்ஜெட் எவ்வளவு என்று எழுதிக்கொடுங்கள் இப்போதே ஒப்பந்தம் போட்டுவிடலாம் என்று ஷங்கரிடம் கேட்டது லைகா.[/color]
[color=var(--content-color)]இந்த சூழ்நிலையில் 'இந்தியன்-2' படத்தையும் எடுக்காமல், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' முடிக்காமல் ஷங்கர் தெலுங்கு சினிமாவின் மேல் கவனம் செலுத்தியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது, லைகா. பென் மீடியா தயாரிக்கும் படத்தை இயக்குவதாக ஒப்புக்கொண்ட ஷங்கர் அந்தப்படத்தில் நடிப்பதற்காக 'பாகுபலி' பிரபாஸிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-05%2F738c9820-86d2-412a-b...2Ccompress]இம்சை அரசன் 24[/color]
[color=var(--content-color)]கமல் படத்தையும், வடிவேலு படத்தையும் அந்தரத்தில், விட்டுவிட்டு பிரபாஸிடம் பேசும் ஷங்கரின் மேல் லைகா கடுங்கோபத்தில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் சினத்தின் உச்சிக்கே போன லைகா, 'இந்தியன் - 2' ' இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்துக்காக செலவு செய்த 50 கோடி பணத்தை உடனடியாக திரும்பி கொடுக்கும்படி ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 'லைகா'விடம் பணம் பெற்றதற்கான எழுத்துபூர்வமான அக்ரிமென்ட் ஆதாரம் எதுவும் இல்லாததால் ஷங்கர் தரப்பு ஷாக் ஆகவில்லை என்று சொல்கிறார்கள்.[/color]
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 28-05-2019, 10:13 AM



Users browsing this thread: 10 Guest(s)