முள் குத்திய ரோஜா(completed)
#27
சிறிது நேரம் அவள் பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்த விட்டு கிளம்பினோம். அவளும் வேலைக்கு போவதாக தனது பாட்டியிடம் சொன்னாள்.
பைக்கில் உட்காரும்போது எனக்குப் பின்னால் இடைவெளி விட்டே உட்கார்ந்தாள். அவள் உடை கூட என் மீது படவில்லை. ஆனால் அவளது பெர்ப்யூம் வாசமும்.. அவளின் வாசமும் தூக்கலாக இருந்தது. !!
” தேங்க்ஸ் நிலா..”
” எதுக்கு. ?”
” என்கூட.. நீ இப்படி வரதுக்கு..”
” எனக்கு பயமா இருக்கு நிரு..”
” ஏன் நிலா.. ?”
”நம்ம பழக்கம் சரிதானான்னு..”
” ம்ம். ! பட்.. இதைப் பத்தி.. அப்பறமா.. பேசிக்கலாமே.. ப்ளீஸ்.. !!”
” ம்ம் !”
” நான் உன்னை மோசம் பண்ணிர மாட்டேன். என்னை நம்பு.. !!”
” நம்பித்தான்.. இவ்வளவு தைரியமா கூட வரேன்.. !!”
” சரி.. எங்க போலாம்.. ?”
” மொதல்ல ஒரு கோயிலுக்கு போங்க.. ?”
” எந்த கோயில்.. ?”
” கூட்டம் இல்லாத கோயில்.. எது.. ?”
” ஆஞ்சநேயர் கோயில் போலாமா.. ?”
”ம்ம் !”
” நீ ஆபீஸ் போகணுமா.. ?”
” இல்ல.. நீங்க.. ?”
” அவசியமில்ல. ஆனா பாட்டிகிட்ட ஆபீஸ் போறேனு சொல்லிட்டு வந்த.. ?”
” அதெல்லாம் பிரச்சினை இல்ல. நான் சமாளிச்சுப்பேன்..!!”அவள் மெல்லச் சிரித்தபடி சொல்ல.. என் பைக்.. நிலாவினியை சுமந்தபடி காட்டுப் பகுதியை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது …… !!!!!! 
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா(adultery ) - by johnypowas - 26-12-2018, 11:52 AM



Users browsing this thread: 1 Guest(s)