26-12-2018, 11:07 AM
"விஜய் டிவியில் 'நண்பன்' இன்டர்வியூ ஃபங்ஷன் நடந்துச்சு. நான் விஜய் சாரோட தீவிர ரசிகை. அந்த சமயம் நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தேன். விஜய் வர்றார்னு என் ஃப்ரெண்ட்ஸெலாம் சொன்னதும் நானும் அவரைப் பார்க்கலாங்குற ஆசையில் தான் அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். அந்த நிகழ்ச்சியை கோபிநாத் சார்தான் இன்டர்வியூ பண்ணாங்க. அங்கே போனப்போ ஒரு பிரேம்லயாச்சும் நம்ம மூஞ்சை காட்ட மாட்டாங்களான்னு ஏக்கமா இருந்துச்சு. இப்போ அந்த இடத்துலேயே நான் நிற்பேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. அதுக்கப்புறம்தான் எனக்கு மக்கள் டிவியில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது. எனக்கு கிடைச்ச வாய்ப்பை முழுசா பயன்படுத்துக்கிட்டேன்'' என்றவரிடம் மீடியாவுக்குள்ளே நுழையும்போது வீட்டுல எதிர்ப்பு தெரிவிக்கலையான்னு கேட்க சிரிக்கிறார்.'ஆரம்பத்துல வீட்டுல சொல்லவே இல்ல. எங்க வீட்டுல மக்கள் டிவி வைக்கவே விடமாட்டேன். அவங்களுக்குத் தெரியாம தான் பண்ணிட்டு இருந்தேன். அவங்களுக்குத் தெரிஞ்சதுக்கு அப்புறம் கோபப்பட்டாங்க... சமாளிச்சிட்டேன். இப்போ அவங்களே என்ஜாய் பண்றாங்க. பொண்ணுங்களுக்கு மீடியா பாதுகாப்பு இல்லைங்குறது அவங்களுடைய எண்ணம். மீடியாதான் பொண்ணுக்கு பாதுகாப்புன்னு இப்போ தெரிஞ்சுகிட்டாங்க. என்னைப் பார்த்துட்டு எங்க ஃபேமிலியிலுள்ளவங்க அவங்களுடைய பசங்களையும் மீடியாவுக்கு அனுப்புறாங்க. நான் எல்லோருக்கும் ரோல் மாடலா இருக்கேன்னு நினைக்கும்போது நிஜமாகவே செம்ம ஹாப்பி!'' என்றவரின் எமோஷனல் பக்கங்கள் வலிமிகுந்தது! அதனைப் பகிர்ந்தார்
![[Image: 43325521_498089177266568_162506699711900..._14476.jpg]](https://image.vikatan.com/news/2018/12/23/images/43325521_498089177266568_162506699711900592_n(1)_14476.jpg)