26-12-2018, 10:53 AM
''குடிசை மாற்று வாரியத்தில் இருந்து சொந்த வீட்டுக்கு குடியேறிருக்கேன்'' - விஜே சித்ரா
மக்கள் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாய் வளர்ச்சியடைந்திருக்கிறார் சித்ரா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்துக் கொண்டிருப்பவர், 'ஜோடி' டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய பர்சனல் விஷயங்களைப் பசுமை மாறாமல் பகிரச் சொல்லிக் கேட்டோம்.
''எங்க வீட்டுலேயே நான்தான் கடைக்குட்டி. என் அண்ணனும், என் அக்காவும் என்னைவிட ரொம்ப வயசு மூத்தவங்க. எங்க அம்மா வயித்துல நான் இருக்கும்போது இன்னொரு குழந்தை வேண்டாம்னு மருந்துலாம் சாப்பிட்டாங்களாம். ஆனாலும், எல்லாத்தையும் எதிர்த்து நான் பிறந்துட்டேன். எங்க பரம்பரையிலேயே முதல் தலைமுறை டிகிரி படிச்சது நான் மட்டும் தான். அதுவும் முதுகலைப் பட்டம் வரைக்கும் படிச்சிருக்கேன். அதுமட்டுமில்லாமல், யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்ன்னு எல்லா இடத்துலேயும் பெருமையா சொல்லுவேன். என்னை மீடியாவுக்கு அனுப்பவே மாட்டேன்னு சொன்னாங்க. நான் மீடியாக்குள்ளே வந்ததே ஒரு ஆக்ஸிடெண்ட்ல தாங்க!" புன்னகைக்குப் பின்னர் தொடர்ந்தார்.

![[Image: 6b52bed8-ed60-4691-b2d9-36349f1686d2_14138.jpg]](https://image.vikatan.com/news/2018/12/23/images/6b52bed8-ed60-4691-b2d9-36349f1686d2_14138.jpg)