26-12-2018, 10:45 AM
ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது பெருமளவு ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தருவார்கள். 2013-ம் ஆண்டு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியில் சுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருகை தந்தனர்.
கடந்த முறை இந்திய பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது சுமார் 69 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்தனர். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சுமார் 88 ஆயிரம் ரசிகர்கள் மெல்பர்ன் மைதானத்தில் குவிந்தனர்.கடந்த வருடம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தியா மெல்பர்னில் சிறப்பாக விளையாடலாம். ஆனால் ஆடுகள சாதக பாதகங்கள், வானிலை அம்சங்கள் ஆகியவற்றோடு மெல்பர்னில் இந்தியாவுக்கு இன்னொரு சவாலும் உண்டு.
மெல்பர்னில் ரசிகர்களின் பலத்த ஆதரவோடு களமிறங்குவதால் ஆஸ்திரேலிய அணியினருக்கு கிடைக்கும் உற்சாகத்தால் ஏற்படும் உத்வேகத்தையும் இந்தியா சமாளிக்க வேண்டியதிருக்கும்.