26-12-2018, 10:41 AM
ஆஸ்திரேலியா பொதுவாக 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அல்லது இன்னிங்ஸ் வெற்றி அல்லது ஐந்துக்கும் அதிகமான விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்பர்னில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளது.
ஆக, ஆஸ்திரேலிய அணியை மெல்பர்ன் மண்ணில் வெல்வது இந்தியாவுக்கு எளிதான காரியமாக இருக்கப்போவதில்லை.
ஆனால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லாமலில்லை என்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ்.
இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து பிபிசி தமிழின் விவேக் ஆனந்திடம் சடகோபன் ரமேஷ் உரையாடினார்.
''முன்பு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பௌலர்கள் விக்கெட்டுகள் எடுக்க சிரமப்படுவார்கள். இப்போது அத்தகைய நிலை இல்லை. இந்திய பௌலர்களை எதிர்கொண்டு நானூறு ரன்களுக்கு மேல் குவிப்பது தற்போது மிக எளிதான காரியமல்ல. பௌலர்கள் சிறப்பாகச் செய்லபடும்போது பேட்டிங்கும் இந்தியாவுக்கு கை கொடுத்தால் மெல்பர்னிலும் கோலியால் வெற்றிக்கொடி நாட்ட முடியும்'' என்கிறா