13-09-2022, 11:12 AM
(13-09-2022, 10:00 AM)Reader 2.0 Wrote: கதை, திரைக்கதை, வசனம் நன்றாக யோசித்து எழுதுவது படிக்க அருமையாக உள்ளது...
ஒரு சிறிய ஆலோசனை... ஒவ்வொரு வரியையும் தனித்தனி பத்தியாக எழுதாமல், வரிகளுக்கு இடையே உள்ள அதிகப்படியான இடைவெளியை தயவுசெய்து குறைக்கவும்...
கதையின் தொடர் ஓட்டம், பத்தி, பத்தியாக... அதேசமயத்தில் தொடர்ச்சியாகவும் இருக்க வேண்டும்...
வசனங்கள் மட்டும் தான் தனியாக இருக்க வேண்டும்...
புதிய அப்டேட்ஸ் போஸ்ட் செய்த பிறகு, ஒரு முறை, நீங்கள் பதிவு செய்த பதிவை எடிட் செய்யவும்...
எடிட்டிங் செய்யும் போது, [b].. போன்ற அடையாளங்களை டெலீட் செய்து விடுங்கள்... முற்றுப் புள்ளி, கமா, அப்பாஸ்ட்ரபி குறியீடுகள் தகுந்த இடங்களில் பயன்படுத்தலாம்....
அதன் பின்னர் பாருங்கள்... உங்களுக்கே உங்கள் கதை பிடித்து விடும். மற்றவர்களுக்கும் கதையை படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்..
கதையை கலர்கள் மாற்றி, மாற்றி எழுதாமல், முடிந்தவரை, ஒரே கலரில், அதுவும் டார்க் ப்ளூ கவரில் எழுதவும்... கலர் இல்லாமல் கருப்பு எழுத்துக்கள் மட்டுமே இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்..
நான் ஏதாவது தவறாக சொல்லி இருப்பதாக நினைத்தால், விட்டு விடுங்கள்... தயவுசெய்து மன்னித்து விடுங்கள்...
ஓகே நண்பா அடுத்த பதிவில் இருந்து முயற்சி செய்கிறேன்.
நன்றி