13-09-2022, 10:48 AM
(13-09-2022, 07:51 AM)Reader 2.0 Wrote: பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பார்கள்.... கால் கடுக்க பாதயாத்திரை செல்பவனும், காவடி எடுப்பவனும் மட்டுமே பக்தர்கள் கூட்டம் இல்லை.... "அறியாத சிறுவனா நீ?".. என்று உரிமையோடு அதட்டும் அவ்வையாரும் ஒரு தீவிர பக்தை தான்.... "ஏன்டா இப்படி செஞ்சே?... சொல்லுடா முருகா!" என்று உரிமையோடு திட்டும் சாண்டோ சின்னப்பா தேவரும் ஒரு தீவிர பக்தர் தான்....
அதுமாதிரி தான் இங்கே வாசகர்கள்... பிளாக் மாஸ்க் வில்லன், ராஜா 12345, ஆனந்த குமார், வந்தனா விஷ்ணு, வினோத் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தொடங்கி, இப்படி உரிமையோடு திட்டும் வாசகர்கள் வரை இருப்பார்கள்... ஆனந்த் வினோத் போன்ற எழுத்தாளர்கள் சக எழுத்தாளர் என்ற உரிமையில் தங்கள் ஆதங்கத்தை, அழகாக வெளிப்படுத்துவதும், மற்ற வாசகர்கள் பாராட்டுவதும், சில வாசகர்கள் திட்டுவதும் இயல்பான ஒன்று தானே...விபரம் தெரியாத சின்னக் குழந்தை ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும் ...
நன்றி நண்பா for supporting me