Romance மனநிம்மதிக்கு மருந்து
#16
ருத்ராட்சபுரீசுவர் கோயிலை தாண்டி சிறு குடியிருப்பு பகுதியை கடந்து இடதுபக்கம் சென்ற சாலையில் பத்ததடி தூரத்தில் வீரபாண்டியன் வீடு தெரிந்தது. அது வீடில்லை. அதொரு குட்டி பங்களா.. ஏழு அடி உயர கருங்கல் சுவரில் காம்பௌண்ட்.. ஒரு ஆறு அடியில் பழைய துருபிடிச்ச கேட்.. கேட்டை தாண்டி பங்களாவிற்கு செல்லும் வழியை தவிர பங்களாவை சுற்றி காடுகள் போல மரங்கள் இருந்தன.

எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. காரை கேட்டின் முன் நிறுத்தினேன். அந்த பங்களாவின் பிரதான இரும்பு கதவு பெரிய சங்கிலியால் கட்டப்பட்டு பூட்டப்பட்டிருந்தது.

"வீட்டுல ஆள் இல்லைங்களா? வெளிய பூட்டியிருக்கு?" என கேட்டேன்.
"இவ்வளவு தூரம்.. வீட்டிலிருந்து தனியா வந்து திறந்துவிட அவங்களுக்கு பயம்.‌அதனால வெளியே போனா.. நானே சங்கிலி போட்டு பூட்டிடுவேன்" என வீரபாண்டியன் சொன்னார்.

"இதுக்கு மேல காரை ஓட்டிக் கொண்டு போகமுடியாதுங்க. ஒரு கேட்டுதான் திறக்கும். இன்னொரு கேட்டோட கொண்டி உடைஞ்சு போச்சு. " என கார் கதவை திறந்து கொண்டு வெளியே போனார். ஒரு கதவு தரையில் லேசாக சாய்ந்து புதைந்திருந்திருப்பது தெரிந்தது.
"சரி...
நானும் காரை அனைத்துவிட்டு ஹேண்ட் லாக்கை போட்டுவிட்டு கார் கதவை மூடினேன். பூட்டினை திறந்து ஒரு ஆள் நுழையும் அளவுக்கு மட்டும் கேட்டினை விலக்கி சென்றார். அவரை தொடர்ந்து நான் நுழைந்ததும் கேட்டினை உள் பக்கம் பூட்டினார்.

"கேட்டினை‌ உள்பக்கம் தாள் வைக்க முடியாதுங்க. கதவு திறந்திடும்." என உள்பக்கமாக தாள் வைப்பதற்கான காரணத்தை சொன்னார். அதுவும் சரிதான்.

அக்கம் பக்கத்தில் வீடுகளே இல்லாத சிறிய கிராமத்தில் எப்படி இவ்வளவு அழகான பங்களா? நானே வீர பாண்டியனிடம் கேட்டேன்..
"பாண்டியன்.. வீடுனு சொன்னிங்க.. இது பெரிய பங்களா போலிருக்கே??!"
"பெரிய பங்களா எல்லாம் இல்லைங்க. சின்னதுதான். காட்டுப்புத்தூர் ஜமீன் பத்தி கேள்வி பட்டிருக்கிங்களா? "
"ஆங்.. கேள்விப்பட்டிருக்கேனன்"
"அந்த காட்டுப்புத்தூர் ஜமீன் பரம்பரையில ஜெகவீரபாண்டியன் அப்படினு ஒருத்தர் இருந்தாரு.. பட்டத்து ஜமீன். நம்ம சூர்யா தம்பி கார்த்தி காஸ்மோரானு ஒரு படத்துல நடிச்சிருந்தாரே.. "

"ஆமாம் ஒரு பேய்படம்.."
"அதேதாங்க.‌ அதுல காஸ்மோரானு ஒரு தளபதி கதாப்பாத்திரம். இளம் பொண்ணுங்களா தேடி தேடி வேட்டை ஆடிவாரு.. அந்த கதாப்பாத்திரத்துக்கு இன்ஸ்பிரசனே ஜெகவீரபாண்டியன் தாங்க.. "
"அப்படியா.."

"ஆமாங்க.. என்கிட்ட கூட அந்த டேரெக்டர் படம் எடுக்கிறதுக்கு முன்னாடி பேசினார். ஜெகவீரபாண்டியன் ஜெமீன் பத்தி நிறைய கேட்டார். நானும் தெரிந்த வரை சொன்னேன். அதை வைச்சே நிறைய படம் எடுக்கலாமுனு பத்தாயிரம் ரூபாய் தந்தாருனா பாருங்களேன்" என்றார்.
"அப்படியா" எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மெயின்கேட்டிலிருந்து பங்களாவிற்கு செல்லும் பாதை மட்டுமே தெளிவாக இருந்தது. மற்ற இடங்களில் எல்லாம் புற்களே முழங்கால் வரை வளர்ந்திருந்தது. தூரத்தில் தெரிந்த ஒரு அரசமரத்தடியில் ஒரு பெரிய‌கூண்டு இருந்தது.

"நாயெல்லாம் வளர்க்கரிங்களா பாண்டியன்? இவ்வளவு பெரிய கூண்டெல்லாம் இருக்கு?" என கேட்டபடி நடந்தேன்.
"அட.. அது நாய் கூண்டு இல்லைங்க. மனுச கூண்டு. ஜமீனுக்கு பிடிச்ச பொண்ணுங்களை தூக்கிட்டுவந்து இந்த மாதிரி கூண்டுல அடைச்சு வைச்சு சித்ரவதை பண்ணுவாரு. "

"ஓ.. இதெல்லாம் கேள்விபட்டதே இல்லையே.." என்றேன்.
"ஜெகவீரபாண்டிய ஜமீனைப் பத்தி ஊர் மக்கள் மறந்துட்டாங்க.‌ அவருக்கு அப்புறம் மூனு தலைமுறை ஜெமீன் மாறிட்டாங்கள‌... அதான் மக்கள் மறந்துட்டாங்க" என்றார். எனக்கு அந்தக் கூண்டை அருகே சென்று பார்க்க வேண்டும் என‌ தோன்றியது.

***
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: மனநிம்மதிக்கு மருந்து - by sagotharan - 12-09-2022, 07:11 AM



Users browsing this thread: 2 Guest(s)