Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
லண்டன்: உலகின் நாடுகளில் பெரும்பாலானவற்றில் அலுவலக வேலை நாட்கள் 6 நாட்களாக இருக்கும்போது இங்கிலாந்து நாட்டிலுள்ள ஒரு நிறுவனம் தனது ஊழியர்களின் சந்தோசத்திற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலைக்கு வந்தால் போதும் என்று அறிவித்து ஊழியர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. பரிசோதனை முயற்சியாக இந்நிறுவனம் 9 ஊழியர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் இந்த சலுகையை அளித்துள்ளது.
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கள் கிழமை வந்தால் அடுத்து எப்படா சனிக்கிழமை வரும் என்று ஆவலோடும் ஏக்கத்தோடும் காத்திருப்போம். ஒவ்வொரு நாளும் கவுண்ட்டவுன் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருப்போம். ஆனால் வேலை மட்டுமே பெரிதாக செய்திருக்க மாட்டோம். அலுவலகம் போனால் உருப்படியாக வேலையை பார்க்காமால் மிகவும் சீரியசாக அரட்டை அடித்துகொண்டு பொழுதை போக்கிக் கொண்டு இருப்போம்.


[Image: jobs234-1558925429.jpg]


 

அலுவலகத்தில் நம்முடைய மேலதிகாரிகளோ அல்லது உரிமையாளர்களோ நம்மை திட்டினாலோ அல்லது கடுப்பேற்றினாலோ உடனடியாக நம்முடைய மனதில், ச்சே என்னடா வாழ்க்கை இது, பேசாமல் லீவு போட்டுவிட்டு போயிடலாமா அல்லது ரிசைன் பண்ணிட்டு ஊர் பக்கம் போய் செட்டிலாகிடலாமா என்று கூட மனம் வெறுத்துப்போகும்.
இன்றைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் அலுவலக வேலை நாட்களை 5 நாட்களாக குறைத்துவிட்டன. ஒரு சில நிறுவனங்கள் சனிக்கிழமையன்று மட்டும் அரை நாளை மட்டும் வேலை நாளாக கடைபிடிப்பதுண்டு. இன்னும் சில நிறுவனங்கள் மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளை அலுவலக வேலை நாட்களாக அமைத்துக்கொண்டுள்ளன.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதில் இருந்து அலுவலக வேலை நாட்களின் எண்ணிக்கை 6 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைந்துவிட்டன. அதிலும் சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 8 மணிநேர வேலை என்பது கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஊழியர்கள் தங்கள் வேலைகளை ஆத்ம திருப்தியுடனும் கூடுதல் உற்சாகத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்து முடிக்க முடிகிறது. தங்களின் உற்பத்தித் திறனையும் அதிகரித்துக்கொள்ள முடிகிறது.
வெளிநாடுகளில் சில நிறவனங்கள் தங்கள் நிறவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் வார வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்கு நாட்களாக குறைத்து வருகின்றன. உலகின் பல நாடுகளிலும் வார வேலை நாட்களை 4 நாட்களாக குறைப்பதற்கு முயற்சிகளை எடுத்துவருகின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டில் நியூசிலாந்து நாட்டிலுள்ள பெர்பெச்சுவல் கார்டியன் (Perpetual Guardian) என்னும் நிறுவனம் 5 நாட்களாக இருந்து வந்த வேலை நாட்களை 4 நாட்களாக குறைத்தது. இதே பாணியை பின்பற்றி இப்பொழுது இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரத்திலுள்ள போர்ச்சுகலிஸ் லீகல் (Portcullis Legals) என்னும் சட்ட நிறுவனம் தனது அலுவலக வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்கு நாட்களாக குறைத்து அறிவித்துள்ளது.
தற்சமயம் பரிசோதனை முயற்சியாக 9 ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 5 மாதங்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் நான்கு நாட்கள் என்ற சலுகையை அறிவித்துள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ட்ரெவர் வொர்த் (Trevor Worth) தெரிவிக்கையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தால் அலுவலகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
 

அதோடு எங்களின் வாடிக்கையாளர்களுக்கும் எந்த சிரமமும் ஏற்படப்போவதில்லை. இந்த பரிசோதனை முயற்சி வெற்றிபெற்றால் படிப்படியாக நிறுவனம் முழுவதுக்கும் செயல்படுத்தப்போகிறோம் என்று உற்சாகமாக தெரிவித்தார்.
தங்களின் குடும்பத்திற்காகவும், மன நிம்மதி மற்றும் பொழுதுபோக்கிற்காகவும், இதர அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைப்பதால் அவர்கள் அலுவலகத்தல் முன்பை விட கூடுதல் உற்சாகத்துடன் வேலை செய்ய முடியும் என்றும் கூறினார்.
நம் ஊரில் இப்போதுதான் பல நிறுவனங்கள் வாரத்தில் 2 நாட்கள் விடுமுறையை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இந்த 3 நாள் லீவு எப்போ வருமோ. வேலைன்னு பார்த்தா இந்த மாதிரி கம்பெனியில வேலை செய்ய நினைக்கறீங்களா
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 27-05-2019, 09:14 AM



Users browsing this thread: 100 Guest(s)