Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[Image: VM_174101000000.jpg]
24 மே, 2019 - 17:42 IST
 கருத்தைப் பதிவு செய்ய





  0  0 Google+
எழுத்தின் அளவு:


தினமலர் விமர்சனம் » பேரழகி ஐஎஸ்ஓ
நடிப்பு - ஷில்பா மஞ்சுநாத், விவேக், சச்சு, சரவண சுப்பையா
தயாரிப்பு - கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - விஜயன்
இசை - சார்லஸ் தனா
வெளியான தேதி - 24 மே 2019
நீளம் - 1 மணி நேரம் 58 நிமிடங்கள்
ரேட்டிங் - 1/5

அறிவியல் சார்ந்த சயின்ஸ் பிக்ஷன் கதைகளைப் படமாக்கும் போது அதற்கான பிரம்மாண்ட செலவைச் செய்து படத்தை ரிச் ஆக எடுக்க வேண்டும். அப்போதுதான் அதற்கான தாக்கத்தை ரசிகர்களிடம் கொடுக்க முடியும். ஆனால், இந்தப் படத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியை விடவும் மிகவும் மோசமான க்ரீன்மேட் காட்சிகளை வைத்து ஏதோ ஒப்பேற்றியிருக்கிறார்கள்.

கற்பனைக்கு எட்டாத ஒரு கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குனர் செல்வா, அதை திரைவடிவில் கொண்டு வரும் போது கோட்டை விட்டிருக்கிறார். அதற்கு அவருக்கு படத்தின் பட்ஜெட் காரணமாக இருந்தால் கூட காட்சிகள் ஒவ்வொன்றும் நகர்வதில் கூட சுவாரசியமில்லாமல் இருக்கிறது.

ஷில்பா மஞ்சுநாத்தின் பாட்டியான சச்சுவுக்கு இளம் பெண்களைப் போல இருக்க ஆசை. அதனால், பேத்தி ஷில்பா அளவிற்கு தன்னை இளமையாகக் காட்டிக் கொள்வார். அது பிடிக்காத அவருடைய மகன் லிவிங்ஸ்டன் அவரைத் திட்டி, வீட்டை விட்டு வெளியேறுகிறார் சச்சு.

ஸ்கின் கேர் கம்பெனி நடத்தும் சரவண சுப்பையா, வயதானவர்களை இளமையாக்கும் ஒரு அரிய வகை மன்னர் காலத்து மருந்து பார்முலாவைக் கண்டுபிடித்து எடுக்கிறார். வீட்டை விட்டு வெளியில் வந்த சச்சுவை வைத்து அதை சோதனை செய்து வெற்றியும் பெறுகிறார். இளமையாக மாறும் சச்சு, அவரது பேத்தி ஷில்பாவின் தோற்றத்திற்கே மாறுகிறார். பாட்டியும், பேத்தியும் ஒரே தோற்றத்தில் இருக்க அதனால் என்ன குழப்பங்கள் ஏற்படுகிறது என்பதுதான் படத்தின் கதை.

இளமையான பெண்ணாக ஒரு கதாபாத்திரம், தோற்றத்தில் இளமையாக இருந்தாலும் மனதளவில் பாட்டியாக இருக்க வேண்டிய மற்றொரு கதாபாத்திரம் என முடிந்தவரையில் இரண்டிலும் வித்தியாசம் காட்டி நடிக்க முயற்சித்திருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.

இளம் ஷில்பாவின் காதலராக, புகைப்படக் கலைஞராக நீ என்ன மாயம் செய்தாய், மித்ரா ஆகிய படங்களில் நடித்த விவேக் நடித்துள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் இளமைத் தோற்றத்தில் இருக்கும் பாட்டி ஷில்பாவையும் காதலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்தக் காட்சிகளை நன்றாகவே சமாளித்திருக்கிறார் இயக்குனர்.

கொஞ்ச நேரமே வரும் கதாபாத்திரங்களில் சச்சு, லிவிங்ஸ்டன். படத்தின் வில்லன் சரவண சுப்பையா. அவர் மிகப் பெரும் கோடீஸ்வரராம். ஆனால், அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றை மிகச் சாதாரணமாகக் காட்டுகிறார்கள்.

படத்தின் பல காட்சிகள் டிராமத்தனமாக இருக்கின்றன. ஒவ்வொருவரும் நடிக்க வேண்டும் என்று செயற்கையாகத் தெரியும் அளவில் நடித்திருக்கிறார்கள்.

சார்லஸ் தனா இசையமைத்திருக்கிறார். பல காட்சிகள் படத்தில் அமைதியாக நகர்கின்றன. தேவைப்படாத இடங்களில் பின்னணி இசையை அலறவிட்டிருக்கிறார்.

மொத்தமாக ஒரு அமெச்சூர்தனமான நாடகத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 27-05-2019, 09:11 AM



Users browsing this thread: 9 Guest(s)