03-09-2022, 08:19 PM
மேடம் என்று அழைத்தவள், ரம்யாம்மா என்று மாறியிருந்தாள். அந்த வயதிற்குரிய துறு துறு வால்தனங்களை, சில்மிஷங்களை எல்லாம் ரம்யாவிடம் வெளிப்படுத்தினாள்.
குழந்தையின் பெரிய மனுஷத் தனமும், பருவ வயதுப் பெண்ணின் அழகிய குழந்தைத்தனமும் மிகவும் ரசிக்கத்தக்கது!
அந்த ரசனை யாருக்கும் புன்னகையை வரவைக்கும்! ஆனால் ரம்யாவுக்கோ, சமயங்களில், அவளையும் அந்தச் செயல்களில் ஈடுபட வைத்தது! அவர்களிடையே வயது வித்தியாசமோ, ஏற்றத்தாழ்வோ எதுவுமில்லை.
வார இறுதிகளில், ப்ரியாவுடனான நேரத்தை, ரம்யாவே எதிர்பார்க்கத் தொடங்கினாள். ரம்யாவும், தன்னை மீறி ப்ரியாவின் வால்தனங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தாள்!
சாதாரணமாக, ரம்யாவைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமாக, ப்ரியா கதை கேட்க ஆரம்பித்தவள், கொஞ்சம் கொஞ்சமாக, ரம்யாவின் அடி மனது ஆசைகளையும் தோண்டி எடுக்க ஆரம்பித்தாள்!
உங்களுக்கு புடிச்ச ஹீரோ யாரு? அப்ப, உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படம் என்ன? மவுன ராகமா? அதுல கார்த்தி புடிக்குமா, மோகன் புடிக்குமா? அம்மா புடிக்குமா, அப்பா புடிக்குமா? உங்க அப்பா, ஹெட்மாஸ்டராச்சே, வீட்லியும் கண்டிஷனா? யாரு க்ளோஸ் ஃபிரண்டு? நல்லா படிப்பீங்களா? என்று ஆரம்பித்தது, கொஞ்சம் கொஞ்சமாக, அவர்களுடைய தனிமையில், அந்தரங்கத்தையும் தொட்டது!
நீங்க கோ எட் லதானே படிச்சீங்க? எத்தனை பேர் ப்ரபோஸ் பண்ணாங்க?... ஐ, ஐ, இந்தக் கதைதானே வேண்டாங்கிறது? இப்பியே, செம ஃபிகரா இருக்கீங்க! அப்ப இன்னும் மின்னியிருப்பீங்களே?!
ஒருத்தர் கூடவா சொல்லலை?... ஒண்ணு கூட இல்லையா?! ச்சே, இந்தப் பசங்களுக்கு, வர வர தைரியமே இருக்க மாட்டேங்குது! அவிங்களை விட்டுத் தள்ளுங்க! சரி, நீங்க எத்தனை பேர்கிட்ட ப்ரபோஸ் பண்ணீங்க? ம்ம்ம்?
கண்ணைச் சிமிட்டி, ரகசியம் பேசுவது போல், தன்னிடம் சிணுங்கிக் கொண்டே கேட்பவளைப் பார்க்க, பார்க்க ரம்யாவிற்கு சிரிப்பாகவும், ஆசையாகவும் இருந்தது!
![[Image: e7e5549df2fefa6010e64adc41c4b68c.jpg]](https://s-media-cache-ak0.pinimg.com/originals/e7/e5/54/e7e5549df2fefa6010e64adc41c4b68c.jpg)
ஆரம்பத்தில் அவளிடம் கோபப்பட்டாலும், தேவையில்லாத கேள்வில்லாம் வேண்டாம் என்றாலும், சமயங்களில் வேண்டுமென்றே உன் லிமிட் தாண்டுற ப்ரியா என்று கண்டித்தாலும், ப்ரியா அசரவேயில்லை!
கணேசனுக்கும், ராமிற்கும், என்னதான் ஆசையிருந்தாலும், வயது, உறவு, ஆண் என்று பல காரணங்கள் சேர்ந்து, ஒரு அளவிற்கு மேல் ரம்யாவை நெருங்க முடியவில்லை!
ஆனால் ப்ரியா அப்படியில்லை! அவள், குழந்தையாக, மகளாக, தோழியாக, சமயங்களில் தாயாகவும் மாறி, ரம்யாவை வெளிக்கொணர்ந்தாள்! ரம்யாவின் மனக்கதவுகளை, அவளையறியாமல் திறந்து விட்டாள்.
அவள் கையைப் பிடித்துக் கொண்டு, அவளருகே முட்டி போட்டு, மிகவும் அன்பாக, அ… அந்த டைம்ல ரொம்ப கஷ்டப்பட்டீங்களாம்மா? இத்தனை வருஷம் கழிச்சும், என்கிட்ட இவ்ளோ அசிங்கமா பேசுற உலகத்துல, அப்பியே, சின்ன வயசுலியே, தைரியமா நின்னீங்க பாருங்க, கிரேட்மா! அதான் எங்க ரம்யாம்மா!
நான் கூட, முதல்ல பாத்தப்ப, எவ்ளோ கம்பீரமா இருக்காங்க பாரேன்னு அட்மையர் பண்ணியிருக்கேன்! இப்ப, இவ்ளோ பணம், செல்வாக்குக்கு மத்தியில கம்பீரமா நிக்குறது பெருசில்லை!! ஆனா, இது எதுவுமே இல்லாம, அன்னிக்கே நின்னீங்க பாருங்க, அதுதான் கம்பீரம்! அது தைரியம்! சூப்பர்ம்மா!
ஐயோ, இப்ப, எனக்கு எப்டி இருக்கு தெரியுமா? சும்மா, ரஜினி படம் இண்ட்ரோ மாதிரி இருக்கு!
ஏய்… போதுண்டி, ஓவரா பில்டப் கொடுக்குற? என்னமோ கேசே ஜெயிச்சிட்ட மாதிரி குதிக்கிற?
அடப் போங்கம்மா, இனி கேசுல ஜெயிக்கிறேனா, தோக்குறேனாங்கிறதெல்லாம் எனக்கு மேட்டரே இல்லை! என் வாழ்க்கைல, நான் ஜெயிப்பேன்! உங்களை மாதிரி வந்து காமிப்பேன் பாருங்க!
பட படவென்று அவள் பேசிக் கொண்டே சென்றாள், அவளது ஜன்னல்களைத் திறந்து விட்டபடியே?! ப்ரியாவின் இந்த மாற்றம் ரம்யாவிற்க்கும் பார்க்க ஆசையாய் இருந்தது. அவள், இவ்வளவு எளிதில் அந்த பாதிப்பிலிருந்து வெளியே வர தான் காரணமாய் இருப்பது உள்ளுக்குள் மகிழ்ச்சியாய் இருந்தது. அந்த வகையில் இருவரும், ஒருவருக்கொருவர் உதவியாய் மாறினார்கள், அவர்களையறியாமல்!
ப்ரியா மெல்ல, ரம்யாவின் உடைகளில் மாற்றம் கொண்டு வந்தாள். முன்பெல்லாம் தன்னை நெருங்குபவர்களை, கோபத்தின் துணை கொண்டு ரம்யா அடக்கினாள் என்றால், இப்போது ரம்யாவின் அழகை சுடர் விட்டு எரியச் செய்தாலும், அதை விடப் பிரகாசமாய், அவளது கம்பிரத்தை ஒளி வீசச் செய்தாள்! அந்த கம்பீரம், யாரையும் எட்ட நிற்க வைத்தது!
உடையிலும், மற்ற விஷயத்திலும், ரம்யாவின் மறுப்பினை ப்ரியா கண்டு கொள்ளவேயில்லை! ராம் கூட இந்த விஷயத்தில் ரம்யாவிற்கு சப்போர்ட் செய்யவில்லை!
நீ ரொம்பப் பண்ற ப்ரியா?!
வேணும்ன்னா, ரெண்டு அடி கூட அடிச்சிக்கோங்கம்மா! ஆனா, இதை நீங்க செஞ்சே ஆகனும் என்று சொல்லியே அவளை வழிக்குக் கொண்டு வந்தாள்.
இது எல்லாவற்றையும், ப்ரியா திட்டமிட்டோ, கணேசன், ராம் கேட்டோ செய்யவில்லை! மாறாக, மிக இயல்பாக, ரம்யா இதுவரை தேடிக் கொண்டிருந்த ஒரு வடிகாலாக ப்ரியா மாறவும், மாற்றம் இயல்பாக வந்தது!