03-09-2022, 08:10 PM
22.
ராம் கல்லூரியை முடித்து விட்டு, தன் நிறுவனத்தில், அம்மாவுடன் பொறுப்பெடுத்த நேரம். அம்மாவுடன் இருப்பதற்காகவே, கோவையின் மிகச் சிறந்த கல்லூரியில், மெக்கானிக்கல் முடித்திருந்தான்.
மீசை முளைக்கும் முன்பே, Man of the House ஆக விளங்கியவன், இப்பொழுது, அடர் மீசையுடன், வயதிற்குரிய உடற்கட்டுடன், சிரிக்கும் கண்களுடன், எல்லாவற்றையும் தாண்டி, நேர்மையும், பண்பும் அவனுடைய அழகையும், கம்பீரத்தையும், பறைசாற்றுகையில், ரம்யாவிற்கு எல்லாமுமாக மாறியிருந்தான்.
அவர்களுடைய அன்பு கூடியிருந்தது. அவன் தோள் சாய்வது, ரம்யாவின் தினசரியாகியிருந்தது. ரம்யாவின் அழகும் பல மடங்கு அதிகமாகியிருந்தது!
அழகு என்பது ஒரு ஒப்புமைச் சொல்!
தனக்காக எதையும் செய்யும் உயிர், தன் சக துணையின் கண்களின் முன் எப்போதும் பேரழகுதான்! உலக அழகியாய் இருந்தாலும், அன்பில்லாத துணையிருந்தால், அழகு தெரியாது. குரூரம் மட்டுமே தெரியும்!
ராம், ரம்யாவின் அன்பு பன்மடங்கு கூடியிருந்தாலும், எந்த இடத்திலும் அங்கு காமம் கலக்கவேயில்லை.
அவன் தோள்களில், அவள் சாய்ந்திருந்தாலும், அவள் மடியில், அவன் படுத்திருந்தாலும், எப்போதாவது, கன்னங்களில் இருவரும் முத்தமிட்டிருந்தாலும், சமயங்களில் அவனுக்காக மாடர்ன் உடைகளை, அவள் அணிந்திருந்தாலும், இருவரும் மட்டும் இணைந்து, வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றிருந்தாலும், அவன் ஆண்மையான உடலைக் கண்டு, அவள் பெருமைப்பட்டாலும், கேர்ள் ஃபிரண்டு கூட சுத்துற வயசுல என் கூட சுத்திட்டிருக்க, வயசுப் பையனாட்டமா நடந்துக்குற என்று அவனிடம் அன்பாய் சீண்டினாலும், நீதாம்மா என் கேர்ள் ஃபிரண்டு, அதான் உன் கூட சுத்துறேன் என்று அவன் பதிலுக்கு சீண்டினாலும், அனைத்துமே, அன்பின் அடிப்படையில் மட்டுமே நடந்தது. காமம் துளி கூட இல்லவே இல்லை!
அவனுடன் சேர்ந்து தனியாக இருக்கும் சமயத்தில்தான் அவள் கொஞ்சம் விளையாட்டாய் நடந்துகொள்வாள். மற்றவர்கள் முன்னிலையில், அதே பழைய ரம்யாதான்!
சமயத்துல ராமே, இப்ப நீங்க பாட்ஷாவா இருக்கீங்களா, இல்ல மாணிக்கமா இருக்கீங்களா என்று தனியாக இருக்கும் போது ஓட்டுவான்!
![[Image: f22c4081fad0cbd6643412412e008649.jpg]](https://s-media-cache-ak0.pinimg.com/originals/f2/2c/40/f22c4081fad0cbd6643412412e008649.jpg)
இரவு 8 மணி. நிறுவனத்தில் இருந்த ராமுக்கு, ரம்யாவின் அழைப்பு வந்தது!
சொல்லுங்கம்மா… மருதமலை போயிட்டு, வீட்டுக்கு வந்துட்டீங்களா???
ர்ர்…ர்ராம்! இந்தக் குரல் சரியில்லையே!
அம்மா… என்ன ஆச்சு? எங்க இருக்கீங்க?!
ராம்… கொஞ்சம் XXXX ஹாஸ்பிடலுக்கு வரமுடியுமா?
வர்றேம்மா, உங்களுக்கு ஒண்ணுமில்லையே?
எனக்கு ஒண்ணுமில்லை! ஆனா, நீ சீக்கிரம் வா!
வெகு விரைவில் ஹாஸ்பிடலை அடைந்தான். போவதற்குள் டிரைவர் மூலமாக நடந்ததை தெரிந்து கொண்டான்! ரம்யாவைப் பார்க்கும் போது, அவள் மிகவும் தவிப்பாய், கலங்கியிருந்தாள். அவளது உடல் இவனைப் பார்த்ததும் நடுங்கியது! அவனது கையை தவிப்பாய் பிடித்துக் கொண்டாள்.
அவளை அணைத்து தேற்றினான். அம்மா ஒண்ணுமில்லை! தைரியமாயிருங்க!
அங்குதான் அவன், முதன் முதலில் ப்ரியாவைக் கண்டான்!
17 ஏ வயது நிரம்பியிருந்த ப்ரியா, +2 வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றதற்க்காக, தனது தோழியுடன் மருதமலைக்குச் சென்று, திரும்பும் சமயத்தில், 3 மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்! செய்தது வேறு யாருமல்ல, தன்னுடன் வந்த தோழியின் அண்ணன் மற்றும் அவன் நண்பர்களால்.
![[Image: d0be39db0a28408b51a78e01c0fd08dd.jpg]](https://s-media-cache-ak0.pinimg.com/564x/d0/be/39/d0be39db0a28408b51a78e01c0fd08dd.jpg)
அவர்கள் குடிபோதையில் எல்லாம் செய்யவில்லை. முழு பணத்திமிரில், திட்டமிட்டு செய்தார்கள். மருதமலைக்கே வந்த தோழியின் அண்ணன், ப்ரியாவின் அன்னைக்கு விபத்து, ஹாஸ்பிடலில் இருக்கிறார் என்று சொல்லி அவளைக் கூட்டிச் சென்றவன், அருகிலுள்ள அவர்களது ஃபார்ம் ஹாவுசில் நண்பர்களுடன் சேர்த்து அவளைச் சீரழித்தான், பின் வெற்றியைக் கொண்டாட, அவர்கள் குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்!
அந்தச் சமயத்தில் தப்பியவள், தள்ளாடி, ரம்யாவின் காரின் முன் மயங்கி விழுந்திருக்கிறாள்! நிலைமையைப் புரிந்த ரம்யா, உடனடியாக ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறாள். கையோடு, போலீசும் வந்தது!
ரம்யாவின் பின்புலமும், ராமின் பக்கபலமும், போலீசை விரைவுபடுத்த, ப்ரியாவின் வாக்குமூலத்தை வைத்து அந்த மிருகங்கள் இரவோடிரவாக கைது செய்யப்பட்டார்கள்!
ப்ரியாவின் பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்லி, அன்றே அவர்களிடம் அவளை ஒப்படைத்தாலும், ரம்யா இன்னும் ப்ரியாவிடம் பேசியதில்லை. ரம்யா, போலீசுடன் பேசி குற்றவாளிகளை கைது செய்வதில் முனைப்பு காட்டியிருந்தாள். இருந்தாலும், இரு நாட்களாக, ப்ரியாவின் நினைவாகவே இருந்தது ரம்யாவிற்கு! இரண்டு நாட்கள் கழித்து, ஒரு தெரியாத எண்னிலிருந்து அழைப்பு வந்தது!
ஹாலோ…
ஹ… ஹ… ம்கும்… ர.. ரம்யா மேடமா?
மறுமுனையிலிருந்து கேட்ட தீனக்குரல், ரம்யாவை ஒரு மாதிரி உலுக்கியிருந்தது. அந்தச் சமயத்தில் ராமும் உடனிருந்தான்.
ஆமா… நீங்க!
நா… நான் ப்ரியா!
ப்ரி… ப்ரியா… சொல்லுமா! எப்டிம்மா இருக்க?
ரொ…. ரொம்ப தாங்க்ஸ்மா! எ… என்னைக் காப்பாத்துனதுக்கு மட்டுமில்லை, அ… அ… அவிங்களை அரெஸ்ட் பண்ண வெச்சதுக்கு…
ப்ரியா பேசப் பேச விசும்பினாள்! அவளது அழுகை, ரம்யாவையும் பாதித்தது!
ஏய்… அழாத! கண்ணைத் தொட?! நீயா தப்பு பண்ண?! அப்புறம் எதுக்கு அழுவுற? நீ போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு! இதுக்கெல்லாம் இடிஞ்சிடக் கூடாது! 21 வருடங்களுக்கு முன்பு, தன்னிடம் சொல்லப்பட்டதை, தன்னையறியாமல் ப்ரியாவிடம் சொன்னாள் ரம்யா!
இரண்டு நாட்களாக, தன் மேல் பாசமாக இருந்தவர்கள், அழுது புலம்பியவர்கள், பரிதாபத்துடன் பார்த்தவர்கள் மத்தியில், தன்னை அதட்டிய, அன்பு காட்டிய ரம்யாவை, பார்க்காமலேயே, பழகாமலேயே மிகவும் பிடித்து விட்டது ப்ரியாவிற்கு!
ப்ரியாவிடம் பேசிய பின், மனது கேளாமல், ராமுடன் மருத்துவமனைக்கு சென்ற போதுதான், அவளுடைய பெற்றோர், அவளை கேஸை வாபஸ் வாங்கச் சொல்லிக் கொண்டிருந்தனர்!
அதிகாரமும், பணமும் இரண்டு நாட்கள் கழித்து வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது!
ப்ரியாவுடையது மிடில் கிளாஸ் குடும்பம். ஒரு அக்கா, ஒரு தம்பி! அக்காவிற்கு, திருமணம் ஆகிவிட்டது! அப்பா, அரசாங்கத்தில் அடிமட்ட ஊழியர்.
காலையில் ப்ரியாவின் பெற்றோரைச் சந்தித்த திமிர் பிடித்த கூட்டம், அவர்களிடம் பேசியிருக்கிறது!
விஷயம் பெருசானா, உங்களுக்குதான் அசிங்கம். கோர்ட்ல கண்டபடி கேள்வி கேப்பாங்க. எங்களுக்கு இருக்கிற பவருக்கு, கேசை எப்டி வேணா வளைப்போம். உங்களால எதுத்து நிக்க முடியாது! கேசை வாபஸ் வாங்குனா, 5 லட்சம் தர்றோம். உங்களுக்கு பிரமோஷன் வாங்கித் தரோம். எது புத்திசாலித்தனம்னு முடிவு பண்னிக்கோங்க!
கேசை வாபஸ் வாங்கச் சொன்னதைக் கூட ஜீரணித்த ப்ரியாவிற்க்கு, வெளில தெரிஞ்சா நமக்கு அசிங்கம் என்பதையும், உன் மேலியும் தப்பு இருக்கு என்றாற் போல், தன் குடும்பமுமே பேசியதையும்தான் தாங்க முடியவில்லை!
சரியாக அந்தச் சமயத்தில்தான் ரம்யா, ராமுடன் வந்தாள்.
காலையில காப்பாத்துனதுக்கு தாங்க்ஸ் சொன்னேன். இப்ப, ஏன் காப்பாத்துனீங்கன்னு தோணுது மேடம் என்று சொன்ன ப்ரியாவில் குரலில் அத்தனை வலி!
நீங்க பெரியவங்க, நீங்களே புத்தி சொல்லுங்க மேடம்! இது வெளிய தெரிஞ்சா அசிங்கம்தானே?! யாருக்கும் தெரியுறதுக்கு முன்னாடி, மறைச்சிடலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்குறா! ப்ரியாவின் அப்பா முறையிட்டார்!
எனக்கு தெரியுமேப்பா?! இது, எப்டிப்பா நமக்கு அசிங்கம்?
பல வருடங்களுக்கு முன் தான் சொன்ன பதிலை, ப்ரியா ஞாபகப்படுதுவது போலிருந்தது ரம்யாவிற்கு! இருந்தும் சொன்னாள்.
உன் மேல எந்தத் தப்பும் இல்லைன்னாலும், இன்னும் உனக்கு வாழ்க்கை இருக்கு ப்ரியா! உனக்கு கல்யாணமே நடக்காமப் போலாம் ப்ரியா! இதைப் பேசாம மறந்துடேன்! ரம்யாவின் பேச்சு, ராமிற்கே பிடிக்கவில்லை என்றாலும், அமைதியாய் வேடிக்கை மட்டும் பார்த்தான்.
மறக்கச் சொல்றீங்களா இல்லை மறைக்கச் சொல்றீங்களா மேடம்?! இதை மறைச்சுட்டு, நான் கல்யாணம் பண்ணா, இப்ப தப்பு பண்னவங்களுக்கும், எனக்கும் என்ன மேடம் வித்தியாசம்?!
![[Image: Richa-Gangopadhyay-in-Leader-(1)_58998.jpg]](https://www.cineseconds.com/uploads/profiles/Richa-Gangopadhyay/Richa-Gangopadhyay-in-Leader-(1)_58998.jpg)
ஏய், பெரிய இவளாட்டம் பேசாத?! உன்னால, எனக்கும், எங்க வீட்ல பிரச்சினை. என் மாமியார் என்னை கேவலமாப் பாக்குறாங்க! ஒழுங்கா திருந்தி, கேஸை வாபஸ் வாங்கு!
சுயநலம் என்ற ஒற்றை விஷயம், மனிதனை எந்தளவு குரூரமாக்குகிறது?! ப்ரியாவின் பெற்றோரிடம் பேசியவர்கள், அவளது அக்காவிடமும், கணவரிடமும் பேரம் பேசியதன் விளைவு, சொந்த அக்காவே விஷத்தைக் கக்கிக் கொண்டிருந்தாள்!