Fantasy ஆய்வு செய்யும் நிபுணர்
#7
கார்த்தி மருட்சியோடு குகைக்குள் இறங்க அதில் சிறிய மேப் போல ஒன்று இருந்தது,சரி என்ன தான் இருக்கு என்று பார்த்தான்.

வௌவால்கள் கீச் கீச் என்று கத்தி கொண்டு வந்தன கார்த்தியும் அவன் அப்பா அர்ஜுனும் தப்பி பிழைத்து வெளியே ஓடி வந்தனர்.
"கார்த்தி இதுல ரொம்ப ஆபத்து இருக்குடா "
"ஆமா அப்பா ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ஆனா அந்த புதையல் மட்டும் நாம கண்டுபுடிச்ச பல விருதுகளை வாங்கலாம் "
"ஆமா கார்த்தி அதுக்கு தான் நான் இவளவு கஷ்டம் எல்லாம் படுறோம்"
"இருவரும் குகையில் கிடைத்த மேப் மற்றும் குறிப்புகளை ஆய்வு செய்தனர்.



அடுத்த வாரம் 
"கார்த்தி முழுவதும் ஆய்வு செஞ்சிட்டேன் "அதனை எடுக்க 4 பேர் போக வேண்டும்  அவர்கள் ஒரே குடும்பமாக தாய் தந்தை அண்ணன்  தங்கை என்ற  
விதத்தில் இருக்க வேண்டும் என்று தான் இருக்கு "
"வேற ஏதாச்சும் இருக்கா அதில "
புதையல் வழித்தடம் என்ற குறிப்பு உள்ளது இப்போ நமக்கு இன்னும் ரெண்டு  பேரு தேவை கார்த்தி 
"அப்பா அம்மாவையும் வினாவையும் கூட்டிட்டு போகலாம் "
"சூப்பர் கார்த்தி நல்ல யோசனை "

கார்த்தியும் அர்ஜுனும் விஷயத்தை சொல்லி வீனா ,வித்யாவை புதையல் பயணத்திற்கு தயார் செய்தனர்.

தேவையான உடைகள் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டனர்.நால்வரும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடு பகுதியை நோக்கி பயணம் செய்தனர் அது தமிழக கேரளா எல்லை பகுதி

"சார் எதுக்கு நீங்க ரிசெர்வ்  போரெஸ்ட் போறீங்க "அர்ஜுன் ஐடி  காட்ட போங்க சார் என்று வழி  விட்டனர்.

"கார்த்தி இப்போ நாம இருக்குறது இந்த பாம்பு மலையோட அடிவாரம் "

வீனா "என்னது பாம்பு மலையா அப்பா இதுக்குள்ள எப்படி போறது எனக்கு பயமா இருக்கு "

வித்யா "சும்மா வாரிய இல்லையா புதையல் எடுக்க இப்படி தான் கஷ்டபடனும் "

"அப்படி சொல்லுடி என் தங்கம் " என்று மனைவியை புகழ்ந்தார் அர்ஜுன் ,அந்த 
அடி  வாரத்தில்  சிறிய நீரோடை சல சல  என்று ஓடி கொண்டு இருந்தது 
Like Reply


Messages In This Thread
RE: ஆய்வு செய்யும் நிபுணர் - by sarathkamalreturn - 01-09-2022, 02:59 PM



Users browsing this thread: 2 Guest(s)