29-08-2022, 06:43 PM
(10-02-2022, 05:07 PM)Vandanavishnu0007a Wrote: 1. வழக்கமான பெரிய ஒற்றை பங்களா வீடு..கதையின் நடை நீரோடை போல தெளிவாக உள்ளது
அந்த ஊர் மக்கள்...
சொந்தகாரர்கள்...
நண்பர்கள்...
என ஒரு பெரிய பெரிய திரளான கூட்டம் அந்த பங்களாவின் போர்டிக்கோ உள்ளும்.. பங்களா வாசலிலும்.. பங்களா முற்றதிலும்... நடு ஹாலில் என எங்கு பார்த்தாலும் ஜனங்களின் சோகமும் கண்ணீரும் நிறைந்த முகங்களாக காட்சி அளித்தது..
வீடெங்கும் வீதியெங்கம் ஒரே பூச்சரங்கள் சிதறி சிதறி கிடந்தன..
இப்போது தெரிந்திருக்கும் இந்த பங்களாவில் என்ன நடக்கிறது என்று..
ஆம்.. பெண்கள் எல்லாம் அழும் குரல் நடு ஹாலில் சின்னதாய் கேட்டுக் கொண்டே இருந்தது..
வண்டி வண்டியாய் சொந்தங்களும் பந்தங்களும் வந்து வந்து துக்கம் விசாரித்த வண்ணம் இருந்தனர்..
பெண்களின் விசும்பல் சத்தம்..
தாரை தப்பட்டை எல்லாம் அப்போது தான் நெருப்பில் வைத்து டம் டம் என்று சின்ன சின்னதாய் தட்டி ஒலி எழுப்பிக் கொண்டு சாவு மேளம் கொட்ட ரெடி ஆகி கொண்டிருந்தார்கள்..
கேமரா அப்படியே வாசலில் சிதறிக் கிடந்த பூக்களை எல்லாம் மிதித்து கடந்து கொண்டு அப்படியே ஜீம் ஆகி பங்களாவின் நடு ஹாலுக்குள் மெல்ல செல்கிறது..
கோபலின் உயிரற்ற உடல் நடு கூடத்தில் படுக்க வைத்து கோபாலை சுற்றி பெண்கள் கூட்டம் விசும்பிக் கொண்டும் அழுதுக் கொண்டும் இருந்தார்கள்..
இரவு முழுவதும் அனைவரும் அழுது அழுது ரொம்பவும் டயர்டாக இருந்தார்கள்..
ஒரு நடுத்தர பெண் தான் ஓடி ஆடி.. வந்திருந்து இருந்த எல்லாருக்கும் காப்பி தண்ணி போட்டு கொடுத்துக் கொண்டிருந்தாள்..
வெளியே உட்கார்ந்திருக்க ஊர் பெரிய மனுஷங்களுக்கும் கொடும்மா என்று ஒரு பெண் விசும்பிக் கொண்டே சொல்ல..
குடுத்துட்டுத்தான் ஆண்டி இருக்கேன் என்று சொல்லி அவள் மற்றவர்களுக்கும் டம்ளர் டம்ளராய் காபி சப்ளை பண்ணி கொண்டு இருந்தாள்..
ஊர் பெரியவர் உள்ளே வந்தார்..
இப்படி அழுதுட்டே இருந்தா எப்படிங்க.. நேரம் ஆகிட்டே இருக்கு.. எல்லாம் வந்தாச்சுல்ல.. அப்புறம் என்ன... தூக்கிட வேண்டியது தானே.. என்று சொல்ல..
ஐயா.. கொஞ்சம் இருங்க.. இன்னும் விஷ்ணு தம்பி வரல.. வந்துட்டு இருக்கானாம்.. என்றாள் அந்த நடுத்தர பெண்மணி..
ஏண்டி இவளே.. நெய்வேலிக்காரிக்கும் அவ புருஷனுக்கும் சொல்லிட்டியாடி.. என்று யாரோ அவளை கேட்க..
ஆஸ்பத்திரியில இருக்கும் போதே போன் பண்ணி சொல்லிட்டேன் அத்த.. அவங்களும் வந்துட்டு இருக்காங்களாம்.. ஆனா லேட்டானா தூக்கிடுங்க..னு அந்த அக்கா சொல்லிட்டாங்க.. ஏன்னா ராத்திரி தான் கிளம்பினாங்களாம்.. என்று பதில் அளித்தாள் அவள்..
அவள் சொல்லி வாய் மூடுவதற்குள்ளு.. மாமா.. என்று சொல்லி அழுதபடி.. நெய்வேலிகாரி என்று குறிபிடப்பட்டவள் அழுது கொண்டே ஓடி வந்து கோபால் கால்களில் விழுந்து அழ ஆரம்பித்தாள்..
அவள் பின்னாடியே அவள் புருஷன்.. கோபாலின் தம்பி மாலையோடு அழுதபடி ஓடி வந்து கோபால் அண்ணன் மேல் மாலையை போட்டு விட்டு கதறி அழுதார்..
இந்த நெய்வேலி சொந்தகாரர்கள் விஷ்ணுவின் சித்தப்பா சித்தி... இரண்டு பசங்களுடன் வந்திருந்தார்கள்..
திருச்சியில் இருந்து தன் இரண்டு அத்தைகளும் அவர்கள் குடும்பத்தார்களும் இரவே வந்திருந்தார்கள்..
பெரியம்மா அவளுடைய மகள் அதாவது விஷ்ணுவுக்கு ஒன்று விட்ட அக்கா முறை.. (இப்போது தான் புதிதாக திருமணம் ஆகி மூன்று மாதம் முழுகாமல் இருக்கிறாள்..) அவளும் வந்திருந்தாள்..
பெரியம்மாவின் பையன் மருமகள் (விஷ்ணுவின் ஒன்றுவிட்ட அண்ணன் அண்ணி..) மலேசியாவில் இருந்து கிளம்பி வந்திருந்தார்கள்..
வீடே ஒரே துக்கமயமாக இருந்தது..
வந்தனா எங்கம்மா என்று கேட்டாள் பெரியம்மா..
வந்தனா ஆண்டி.. சித்த பிரம்மை பிடிச்ச மாதிரி இருக்காங்க பெரியம்மா.. யார் கிட்டயும் அவங்க இதுவரை பேசல.. அவங்க கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரல.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்றாள் ஒரு பெண்..
சரி சரி விடும்மா.. அவ அழுது அழுது கண்ணீரே வற்றி இருக்கும்.. அவள் மனரீதியா ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கா.. அவளை எதுவும் தொந்தரவு பண்ணாதீங்க.. விட்டுங்க என்று சொல்ல..
மற்ற நடக்க வேண்டிய காரியங்களை அனைவரும் சர சரவென்று செய்ய ஆரம்பித்தார்கள்..
அக்கா விஷ்ணு வந்துட்டான் என்று யாரோ வாசலில் இருந்து குரல் கொடுத்தார்கள்..
அப்படியே அப்பா என்று ஓடி வந்தான் விஷ்ணு.. அவர் பாதங்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதான்.. பின்னாடியே அவன் சித்தப்பா மாமா அண்ணன் எல்லாம் கூட வந்து அவனை தோளில் தட்டி சமாதானம் படுத்த முயன்றனர்..
வேணாம்.. விடுங்க.. அவன் அழட்டும்.. இல்லனா அவனும் வந்தனா மாதிரி ரொம்ப அப்சட் ஆகிட போறான் என்று பெரியம்மா தான் விஷ்ணு மனம் விட்டு அழுவதற்கு மற்றவர்கள் தடுத்ததை தடுத்து வழி விட்டாள்..
விஷ்ணு கதறி கதறி அழுதான்..
இங்கிருந்தால் ஒழுங்காக படிக்க மாட்டான் என்று அவர்கள் தான் வந்தனாவும் கோபாலும் விஷ்ணுவை ஊட்டி காண்வெண்டில் படிக்க வைத்தார்கள்..
வந்தனா கூட அடிக்கடி ஜோக்காக என் பையனுக்கென்ன ஊட்டி காண்வெண்ட்டுல படிக்கிறான் என்று நாட்டாமை படத்தல வர்ற கவுண்டமணி பிச்சைக்காரி ஸ்டைலில் சொல்லி சொல்லி விஷ்ணுவை கேலி பண்ணுவாள்..
கோபால் இறந்த செய்தி கேட்டவுடன் தான் அடுத்த வாரம் எழுத வேண்டி இருந்த கடைசியை கூட விட்டு விட்டு சென்னைக்கு ஓடோடி வந்தான் விஷ்ணு..
விஷ்ணு கதறி கதறி அழுதான்..
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் வியர்த்த முகத்துடன் மெல்ல விஷ்ணு நிமிர்ந்து பார்த்தான்..
அப்போது தான் அவன் கண்களுக்கு யார் யார் சொந்தகாரர்கள் தன் அப்பாவின் சாவிற்கு வந்திருந்தார்கள் என்று மெல்ல மெல்ல தெரிய வந்தது..
இபபோது விஷ்ணுவை மெல்ல எழுப்பி வெளியே கொண்டு வந்து போர்ட்டிக்கோவில் போடப்பட்டு இருந்த சோபாவில் அமர வைத்திருந்தார்கள்..
அம்மா எங்கே மாமா என்று தன் மாமாவை பார்த்து கேட்டான் விஷ்ணு..
பெரியம்மாவும் வெளியே வந்திருந்தாள்..
விஷ்ணு கண்ணு.. அம்மா ரெண்டு நாளா அவ ரூலயே அடஞ்சி கிடக்கிறாடா.. அழுது அழுது அவ ரொம்ப அப்சட்டா இருக்கா.. இந்த திடீர் இறப்பை அவளால இன்னும் ஜீரணிக்க முடியல.. டாக்டர் வந்து ஊசி போட்டு இருக்காங்க... ரொம்ப டிஸ்ட்டர்ப் பண்ணா.. வந்தனா உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டு போயிருக்காங்க.. அதனால அவளை யாரும் டிஸ்ட்டர்ப் பண்ணாம உன் மலேசியா அண்ணி தான் பாதுகாப்பா கூட இருந்து பார்த்துக்குறா.. காரியம் எல்லாம் முடிஞ்சதும் அம்மாவை போய் நீ பாரு.. சரியா.. என்று சொல்ல..
கோபாலின் உடலை இடுகாட்டுக்கு எடுத்து போகும் காரியங்கள்.. கொல்லி வைப்பது என்று டக் டக் என்று வேக வேகமாக ஏதோ பார்ஸ்ட் பார்வர்டு பண்ணுவது போல வேக வேகமாக நடந்து முடிந்து..
மெல்ல மெல்ல வந்திருந்த திரளான ஜனங்கள் எல்லாம் மறைந்து மறைந்து.. கடைசியாக வீட்டில் ஒரு பத்து பதினைந்து சொந்தங்கள் மட்டும் மிச்சம் இருந்தார்கள்..
அந்த பங்களா வீடு சுத்தமாக தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு அனைவரும் ஹாலிலேயே ஆளுக்கு ஒரு முளையிலும் சோபாக்களிலும்.. பளிங்கு மொசைக் மார்பல் தரையிலும் வீற்றிருந்தனர்..
குழந்தைகள் எல்லாம் சாவு வீட்டிற்கு வந்தது மறந்து.. புதிது புதிதாக சந்தித்துக் கொண்ட தங்கள் சொந்த சம வயது மற்ற குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்து விட்டார்கள்..
இது போல கல்யாணம் அல்லது கருமாரி என்று வந்தால் தான் சொந்தங்கள் எல்லாம் கூட கூடிய ஒரே சந்தர்ப்பங்கள் அமையும்..
அதிலும் சின்ன சின்ன குழந்தைகளுக்கு யார் தங்கள் மாமா.. யார் அத்தை.. யார் சித்தப்பா.. சித்தி.. பெரியப்பா.. பெரியம்மா.. யார் ஒன்று விட்ட அண்ணன் தம்பி தங்கை அக்காக்கள் என்று அறிமுகம் செய்து கொள்ளக் கூடிய ஒரே சந்தர்ப்பம் இது போன்று அபூர்வமாக தான் அமையும்...
சொந்தகாரர்கள் எல்லோரும் பெரும் பெரும் வசதி படைத்தவர்களாக இருந்தார்கள்...
இருந்தாலும் இது துக்க வீடு என்பதால் தரையில் உட்காருவதும்.. நிற்பதும் எதும் கவுரவ குறைச்சல் இல்லை என்பது போல அமைதியாக எளிமையாக அமர்ந்திருந்தார்கள்..
டாக்டர் வசந்தி வந்திருக்காங்க மாமா என்று ஒரு டீன் ஏஜ் பெண் ஓடி வந்து சொல்ல..
வந்தனா ரூமுக்கு கூட்டிட்டு போம்மா என்றார் மாமா..
அந்த டீன் ஏஜ் பெண் டாக்டர் வசந்தியை வந்தனா ஓய்வு எடுத்து கொண்டிருந்த அறைக்கு அழைத்து சென்றாள்..
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது..
வசந்தி டாக்டர் வெளியே வந்தாள்..
டாக்டர் இப்போ வந்தனா அம்மா எப்படி இருக்காங்க என்று விஷ்ணு தான் ஓடி எழுந்து சென்று வசந்தி டாக்டரை பார்த்து கேட்க..
மற்ற சொந்தங்களும் எழுந்து டாக்டர் வசந்தியை சுற்றி நின்று கூடி விட்டார்கள்..
டாக்டர் வசந்தி மெல்ல தன் மூக்கு கண்ணாடியை கழற்றியபடியே.. நான் சொல்றதை எல்லாம் கவனமா கேளுங்க.. வந்தனா தன்னோட புருஷன் கோபால் இப்படி திடீர்னு இறந்ததை நம்ப முடியாம ஒரு வகையான மனநோய்க்கு மாறிட்டாங்க..
மனநோய்னா.. மெண்டல்னு சொல்ல முடியாது.. ஆனா.. இப்ப நடந்தது எதுவுமே அவங்களுக்கு நியாபகம் இருக்காது..
படிக்கச் படிக்கச் ஆசையாக உள்ளது வந்தனா விஷ்ணு