Thriller அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
#48
எம்எல்ஏ சிவநேசனின் தம்பி சேனாதிபதி. முழுப்பெயர் ருத்ரசேனாதிபதி. பெயருக்கு ஏற்றது போல கம்பீமான ஆள். அண்ணன் சிவநேசன் எம்எல்ஏ என்பதை விட தமிழக ஆயத்தீர்வை அமைச்சர் வீரபாண்டியனின் பினாமி என்பது அவனுடைய செல்வாக்கின் காரணம். கரூர், திருச்சி, கோயம்புத்தூர் மண்டலங்கள் அவன் கையில் இருந்தன.

அமைச்சர் வீரபாண்டியனின் சொத்து பராமரிப்பு, சிறிய பினாமிகளின் கணக்கு வழக்குகள், புதிய நில விற்பனை கட்டப்பஞ்சாயத்துகள் என்பதெல்லாம் தனிபடையே வைத்து ருத்ர சேனாதிபதி கண்காணித்து பராமரித்து வந்தான். அமைச்சர் வீரபாண்டியனின் விசுவாசியாக மட்டுமே உலகிற்கு தெரிந்தாலும் ருத்ரசேனாதிபதியின் பெரிய மூலதனம் டார்க்வெப்.

ருத்ர சேனாதிபதியின் காட்டு பங்களா டார்க்வெப் இணையசேவையின் மூல இடமாக இருந்தது. கோயம்புத்தூரை தாண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அடர்ந்த மாந்தொப்பும், தென்னை தோப்பும் சூழ.. அதன் நடுவே இருந்தது காட்டு பங்களா. ஆள் நடமாட்டம் இல்லையென்றால் அதை பேய் பங்களா என அறிவித்து இருப்பார்கள்.

பங்களாவின் தோட்டத்து வாசலுக்கு வருவதற்கே.. ஏதோ சத்திய மங்களம் காட்டுக்குப் போவது போல இருந்தது. அந்தளவுக்கு காடுகள் போல பெரிய பெரிய மரங்கள். கரடு முரடான பாதை. நம்ம தொழிலுக்கு இங்கெல்லாம் வர வேண்டியிருக்கு என்று நொந்து கொண்டான் மாணிக்கம். அவன் ஏறக்குறைய புரோக்கர் போல.. அவனிடம் ஒரு விஷயத்தைப் போட்டால் நமக்கு என்ன வேண்டுமோ அதற்கு ஏற்பாடு செய்துவிடுவான்.

வாடகைக்கு வீடு தேடி தருவான், பலான பெண்களை ஏற்பாடு செய்வான், ஆளைக் கொல்ல வேண்டுமா அதற்கும் இந்த ஆள் சரியாக இருக்கும் என கூலிப்படையை கூட்டி வருவான். அவன் இந்த பெரும்புள்ளிகளின் செல்லப் பிள்ளை போன்றவன். யாருக்கும் திறக்காத ருத்ர சேனாதிபதியின் காட்டு பங்களா கதவுகள் மாணிக்கத்திற்கு மட்டும் திறந்துவிடும்.

“ஏம்முடே.. ஐயா வரச்சொன்னாரு” என்று பங்களாவின் முன் இருந்த தடியான அடியாளிடம் சொன்னான் மாணிக்கம்.
"வாயா.. வா. உம் காட்டுல மழையா பெய்யுது"
"என்னாத்தைக் கண்டே.. மழையா பெய்யறதுக்கு."

“என்னா மாணிக்கம் மறைக்க பார்க்கிறியா, புதுசா ஒரு சிட்டை ஓட்டி வந்து வீட்டோட வைச்சிருக்கியாக்கும்”
“ஆமான்டே.. பெரிய பெரிய ஆளுகளுக்கு பார்க்கப் போன இடத்தில நமக்கு தோதா ஒன்னு இருந்துச்சு. தள்ளியாந்து வைச்சிருக்கேன். எத்தனை நாளைக்குதான் கட்டுனவ ருசியவே பார்க்கிறது. என்ன நான் சொல்லறது.”
“ம்.. சரி..சரி.. இந்த டிவிஎஸ் பொட்டியை சைடுல கிடாசிட்டு. நம்ம ஜீப் வரும் அதுல போயிடு” என்றான் அடியாள்.

“ஐயா உத்தரவு வந்துடுச்சா. சரி.. சரி..” என்று காத்திருந்தான். ஒரு கருப்பு நிற பொலேரோ வந்தது. அதில் மாணிக்கம் ஏறிக்கொள்ள அந்த வண்டி பங்களாவின் பின் பக்கத்தில் வண்டி நிறுத்தும் இடத்திற்கு அவனை கூட்டிச் சென்றது.

“மாணிக்கம்,. பின் வாசல் வழியா போ.” என்றான் டிரைவர். கார் செட்டுக்கு பக்கத்தில் வேட்டை நாய்கள் வளர்ப்பிடம் இருந்தது. எல்லாத்துக்கும் தனித் தனியாக கூண்டு போட்டு வளர்த்துக் கொண்டிருந்தார்கள். இரவில் அவைகளுக்குதான் வேலை அவைகளைப் பார்த்துக் கொண்டே பங்களாவுக்குள் நுழைந்தான் மாணிக்கம்.

“எடே.. மச்சக்காளை நீதான் பின்வாசல் காவலா."
"ஆமாம்.. நான்தான்" என்றான் கரராக.
"ஐயா வரச்சொல்லியிருக்காருலே” என்றான் மாணிக்கம்.
“தெரியும், தெரியும். ஐயா ஒரு வேலையா இருக்காரு.செத்த என் கூட நில்லு. அழைப்பு வரும். பிறகு போகலாம்” என்றான்.

மாணிக்கம் அவன் பக்கத்தில் நின்று கொண்டான். பத்து நிமிடங்கள் கழித்து ஒருத்தனை குத்துயிரும் கொலையிருமாக சில அடியாட்கள் இழுத்து வந்தனர். மாணிக்கம் அதைப் பார்த்து எச்சில் விழுங்கினான்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா - by sagotharan - 26-08-2022, 05:30 PM



Users browsing this thread: 4 Guest(s)