கருப்பு தினம்!
#1
கருப்பு தினம் !

வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து வேகம் குறைந்து ஓரமாக நிற்க, விவரம் புரியாமல் நான் நிர்மலாவை பார்க்க , நிர்மலா விளக்கினாள்.

பஸ்ல இருக்குறவங்க டீ காபி குடிக்க இப்படி ஹோட்டல் முன் 10 நிமிடங்கள் நிருத்துவாங்க என்று கூற..

ஓஹோ.. என அவளை பார்த்தேன்.

நிர்மலா :  முதல் முறை பஸ்ல வரீங்க.. ப்ளைட்ல பறக்குற உங்களை மாதிரி கோடிஸ்வரிகளுக்கு இதெல்லாம் புதுசாத்தான் தெரியும்!

நிர்மலா சொன்னவுடன் மொத்த பேருந்தும் என்னை பார்க்க நிர்மலா தொடர்ந்தாள்.

நிர்மலா : என்ன அப்படி எல்லாரும் பார்க்குறீங்க?

பேருந்து கூட்டத்தில் ஒருத்தி : ஏன் , இன்னைக்கும் அந்த கோடிஸ்வரி ப்ளைட்ல பறக்க வேண்டியதுதானே? எதுக்கு பஸ்ல வந்தாங்க??

நிர்மலா : ப்ளைட்ல பறக்கத்தான் ஏர்போர்ட் போறோம். எங்க மேடம்தான் பஸ்ல போக ஆசைப்பட்டு ஏசி கார்லேந்து இறங்கி இந்த பஸ்ல புழுதி காத்துல வறாங்க..


நிர்மலா சொன்னவுடன் பேருந்தில் அமைதி நிலவியது.

அணைவரும் இறங்கி காபி டீ குடிக்க செல்ல. நான் ஜன்னலை பார்த்தபடி இருந்தேன்.

அப்போது கூட்டமா சில ஆண்கள் போராடுவோம் போராடுவோம் என கத்தி கொண்டே செல்ல..
முன்னால் நீண்ட துணியை பிடித்து கொண்டு சிலர் செல்ல அதில் கருப்பு நாள் / கருப்பு தினம் என எழுதியிருந்ததை பார்த்து நிர்மலாவிடம் கேள்வி எழுப்பினேன்.

நிர்மலா : என்னம்மா .. நீங்க இப்படி கேட்கலாமா? 
வடக்கே கும்பலா சேர்ந்து ஒரு கூட்டம் உங்க மசூதியை இடிச்சாங்களே‌. அந்த நாளைத்தான் கருப்பு தினம்னு சொல்றாங்க.
முஸ்லிம் உங்களுக்கு தெரியாததா?

நிர்மலா சொன்னவுடன் என் நினைவு வேறு சிந்தனைக்கு போனது.

எப்படி ஒரு கூட்டம் மசூதியை தகர்க்கப்பட்டு கருப்பு தினம் ஆக்கியதோ...

அதே போல் ஒரு கூட்டத்தால் வாழ்கையே  தகர்க்கப்பட்டு வாழ்க்கையில் ஒரு கருப்பு தினம் நடந்ததை நினைத்து மனம் படப்படத்தது!

அன்று என்ன நடந்தது?
அந்த கருப்பு நாள் பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி சொல்கிறேன்.

என் பெயர் நசீரா!
இல்லை என் பெயர் திலகா!!
இல்லை என் பெயர் நசீரா!!

குழப்பம்!!

எங்கிருந்து கதையை துவங்க?
நசீராவாக கதையை துவங்குகிறேன்.


இல்லை இல்லை திலகாவாக என் கதையை துவங்குகிறேன். அதுதான் சரியாக இருக்கும்.

என் பெயர் திலகவதி.
திலகா என தெரிந்தவர்கள் அழைப்பார்கள்.

முன்பு நிர்மலா பேருந்தில் சொன்னது போல ஃப்ளைட்டில் பறக்கும் அளவு கோடிஸ்வரியாக என் வாழ்க்கை துவங்கவில்லை.
அவள் குறிப்பிட்ட புழுதி காற்றும் எனக்கு புதிதல்ல!

என் வாழ்க்கையின் துவக்கம் வறுமை!

வறுமை , வறுமை ! எங்கும் வறுமை எதிலும் வறுமை.
சிறுவயதில் ஒரு வாய் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் இந்த திலகா வெறும் வயிற்றில் ஈரத்துணி கட்டி தூங்கிய நாட்கள் பல!
அவ்வளவு வறுமை!

அவ்வளவு வறுமைன்னா?
எவ்வளவு வறுமை தெரியுமா?

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி உண்டு.

நான் பிறந்ததிலிருந்து கோவிலை பார்த்தது இல்லை. ஏன் என்றால் என் ஊரில் கோவிலே இல்லை!

ஏன் இல்லை?

கோவிலை கட்ட கூட பணம் இல்லை!

அவ்வளவு வறுமை!
யாருக்கு வருமை?
எனக்கா?

இல்லை. இல்லவே இல்லை!
என் கிராமத்திற்க்கே வறுமை.

சுதந்திர நாட்டில் எங்கள் கிராமம் வறுமைக்கு அடிமை பட்டு கிடந்தது.

அப்படி வறுமையில் பிறந்தவளுக்கு காதல்!

ஒரு ஏழை பெண்ணிற்க்கு காதல் வரலாமா?
அதுவும் ரொம்ப சிறு வயதிலேயே?!?

வந்துடுச்சே.. காதல் வந்துடுச்சே!!

யார் மீது காதல்?
எது மீது காதல்??
எதன் மீது காதல்???

என் காதல் எல்லாம் பள்ளி மீதும் கல்வி மீதும்தான்.

கோவில் இல்லாத ஊரில் பள்ளி கூடம் மட்டும் ஏது?

பக்கத்து டவுனில் படிக்கும் சில மாணவிகளை கண்டு படிப்பின் மீது காதல்.

யூனிபார்ம் போடனும்
பேக் நோட் புக்ஸ் தூக்கி கிட்டு பள்ளி கூடம் போகனும்.

இந்த காதல் விவகாரம் வீட்டில் தெரிந்தால்??

8 ஷூக்கு பாலிஷ் போட்டால்தான் எனக்கு 1 பன்னு கிடைக்கும்னு ஒரு படத்தில் நாயகன் வசனம் பேசுவாரே...

அது போல..

8 மணி நேரம் செங்கல் சூலையில் வேளை பார்த்தால்தான் எனக்கு ஒரு வேலை வயிறு நிறையும்.

இதில் எங்கிருந்து படிப்பை நினைக்க?!

நாட்கள் ஓடியது...
செங்கல் சூலையில் வேலை செய்யும் போது கனகாவின் அம்மா வந்தாள்.

திலகாவின் அம்மா : என்ன‌ கனகா அம்மா?
கனகாவை காணும்? பொண்ணு சமஞ்சிட்டாளா?? சிரித்தாள்.

கனகா அம்மா : இல்லை திலகா அம்மா.. கனகா பள்ளி கூடம் போயிருக்கா!

திலகா அம்மா : என்ன சொல்றீங்க? கனகா வேலை செய்யாம பள்ளி கூடம் போனா அவள் வயித்து பசிக்கு?

கனகா அம்மா : அதெல்லாம் சுடு சோறு சாப்பிடுவா 

திலகா அம்மா : என்ன சொல்றீங்க ? சுடு சோறா?

கனகா அம்மா : உங்களுக்கு விஷயம் தெரியாதா? 
பள்ளி கூட்டத்துல தினமும் மதிய சாப்பாடு சுடு சோறு போடுறாங்கலாம் அதான் கனகாவை அணப்பி வச்சேன். நீங்க திலகாவையும் அணப்புங்க .
வேலை செய்யாமலே சுடு சோறு கிடைக்கும்.

இதுக்கு மேல என்ன வேண்டும்?

எனக்கு அன்று முதல் சுடு சோறு கிடைத்தது. அதோடு நான் காதலித்த கவ்வியும் கிடைத்தது.

ஆமாம்!

மழைக்கு கூட பள்ளி கூடம் ஒதுங்காத எங்கள் பரம்பரையில் , ஒருவேளை சோற்றுக்காக பள்ளி கூடத்தில் சேர்க்கப்பட்டேன்!


காதல் நிறைவேறிய மகிழ்ச்சி.
பள்ளி படிப்பை படிக்க படிக்க அறிவு விசாலமானது.

எனக்கு கீழ் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தேன். ஏழை மாணவர்கள் என்பதால் இலவசம் தான்.

ஆனால் நல்ல விதமாக டியூஷன் எடுப்பதால் மாணவர்களின் ரிசல்ட் நன்றாக வர. அதை கேள்வி பட்ட பணக்கார மக்கு பசங்க என்னிடம் டியூஷன் சேர..

அதன் மூலம் வருமானம் வந்தது‌.

பெற்றோர்கள் செங்கல் சூலையில் வேலை செய்து சம்பாதிப்பதை விட நான் அதிகமாக சம்பாதித்தேன்.

பாதியை பெற்றோர்களுக்கு கொடுத்து , மீதியை பள்ளி செல்லும் வழியில் வங்கியில் சேமித்தேன்.

பள்ளி படிப்பு முடிய என் கல்லூரி படிப்பை தொடர்ந்தேன். கூடவே டியூஷனையும் விடவில்லை. சுத்துபட்டில்
5 முதல் 12 வரை படிக்கும் எல்லா பணக்கார மக்கு பசங்களுக்கும் நான்தான் டியூஷன் டீச்சர்.

கல்லூரி படிப்பு, டியூஷன் பீஸ் எல்லாம் என் அலங்காரத்தையும் அடையாளத்தையும் மாற்றி அழகாக்கியது.

கிழவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஜொல்லு விடும் அளவு அழகில் செழித்து, கொழுத்து, பழுத்து, பூத்து இருந்தேன்.

பகலில் கல்லூரி மாணவி,
இரவில் டியூஷன் டீச்சர்.
பணம் வருவதால் வீட்டில் இரண்டிற்க்கும் தடை இல்லை!

கல்லூரி படிப்பு முடிய மீண்டும் காதல் வந்தது!
யார் மீது காதல்? இரண்டாவதாக காதல்??

படிப்பின் மீது உள்ள காதல் இப்போது வேலை மீது காதலாக தாவியது!
அதும் மாநகரங்களில் வேலை செய்ய காதல் வந்தது.

அந்த காதலை வீட்டில் சொல்லும் போது பிரச்சினை வந்தது.

நீ டவுன் போய் வேலை செஞ்சி கிழிக்க வேணாம். நீ பசங்களுக்கு படிப்பு சொல்லி கொடுத்து சம்பாதிச்சதும் போதும். உன் மாமன் மகன் பக்கிரிசாமியை கட்டிக்கிட்டு அவனுக்கு பொங்கி போட்டுக்கிட்டு வச வசன்னு புள்ளை குட்டியை பெத்து போடுற வழியை பாரு...
கடுமையாக திட்டி/கொட்டி தீர்த்தார் அப்பா!



- தொடரும்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
கருப்பு தினம்! - by Ishitha - 23-08-2022, 07:59 PM



Users browsing this thread: 1 Guest(s)