Romance மாங்கல்யம் தந்துனானே
#34
அவள் மிகவும் உறுதியான குரலில் சொல்ல, எனக்கு இப்போது கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தன. அவள் முகத்தை கொஞ்ச நேரம் பரிதாபமாக பார்த்தவள், அவளுடைய மடியில் முகம் புதைத்துக் கொண்டேன். அவள் என்னை தடுக்கவில்லை. என் முதுகையும் கூந்தலையும் அன்பாக வருடிக் கொடுத்தாள். அப்புறம் என் முகத்தை அவளுடைய உள்ளங்கைகளுக்குள் வைத்து தாங்கி, நிமிர்த்தினாள். அவளுடைய முகம் முழுவதும் புன்னகையும் அன்பும் பொங்கி வழிய, மென்மையாக சொன்னாள்.

"உன்னை நான் மொதநாள் பார்த்தப்போ தப்பா சொல்லிட்டேன் பவி.. உண்மையை சொன்னா.. உன்னை மாதிரி சூப்பரான பொண்டாட்டி கெடைக்க.. அசோக்தான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!"

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உள்ளத்தில் விதவிதமான உணர்சிகள்.. கலந்துகட்டி கடலலை மாதிரி மோதின. என்னையே அன்பாக பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய முகத்தையே நானும் கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தேன். அப்புறம் மீண்டும் அவளுடைய மடியில் தலை சாய்த்துக் கொண்டேன்.

அப்புறம் வந்த நான்கைந்து நாட்கள் மிகவும் சந்தோஷமாய் இருந்தேன் நான்..!! எதோ இனம்புரியாத மகிழ்ச்சியும், மலர்ச்சியும் என் முகம் முழுவதும்..!! வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என் கணவரை முத்தமிட்டேன்.. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரேணுகாவை கட்டிக் கொண்டேன்..!! 'எல்லாமே சரியாகிவிட்டது.. இனி இன்பம் தவிர எதுவுமில்லை..' என்று என் மனம் எக்காளமிட்டபோதுதான்.. ஒருநாள் நண்பகல் எங்கள் வீட்டு காலிங் பெல் ஒலித்தது..!! உற்சாகத்துடனே சென்று கதவு திறந்தவள், வெளியே நின்றிருந்தவளைப் பார்த்து, எதிர்பாராத அதிர்ச்சியில் அப்படியே திகைத்துப் போனேன்..!!

அன்பரசி..!!!!!!!!!
Like Reply


Messages In This Thread
RE: மாங்கல்யம் தந்துனானே - by I love you - 23-08-2022, 07:08 PM



Users browsing this thread: 2 Guest(s)