Adultery அவளும் பெண் தானே
#4
மழைநீரில் தொப் தொப்பென நனைந்த உடம்புடன் ஏற்கெனவே உள்ளுக்குள் சென்றிருந்த ஆல்காஹலின் உதவியால் நிற்க கூட முடியாத நிலையில் என்னையும் அறியாமல் இந்த வீட்டின் கதவை தள்ளி தடுமாறி வீட்டின் முன்புறம் விழுந்து இருக்கிறேன். அதன் பின் என்ன நடந்தது என்று அந்த வீட்டில் இருந்த அந்த பெண்ணின் பார்வையிலிருந்து.. 

ஒரு ஆண் என் வீட்டிற்கு முன் வந்து விழுந்து கிடப்பது எனக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனால் அவன் முகத்தை வைத்து பார்க்கும் போது அப்படி ஒன்றும் மோசமானவாக தெரியவில்லை. என்னை பொறுத்தவரையில் "குடிக்கிற எல்லாரும் கெட்டவனும் இல்லை." அதே மாதிரி தன்னை உத்தமன் என்று சொல்கிற "குடிக்காத உத்தம புருஷன்கள் எவனும் உத்தமனும் இல்லை". ஒரு சோகம் வருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அவனுடைய முகத்தை பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது. அவன் வாய் ஏதோ ஒரு பெயரை மட்டும் முனுமுனுத்துக் கொண்டிருந்தது. 

அவனை அப்படியே மழையில் நனைய விட என் மனம் ஒப்பவில்லை. அவன் தன்னையே மறக்கும் அளவிற்கு குடிச்சிருக்கிறான் என்பது அவன் வீட்டின் முன் விழுந்து கிடப்பதிலிருந்தே தெரிகிறது. ஆனால் எதற்காக இப்படி குடித்திருக்கிறான் என்பது அவன் வாயால் சொன்னால் தவிர மற்றபடி தெரிய வாய்ப்பே இல்லை. இதையெல்லாம் யோசித்து கொண்டே அவனை இன்னும் பெய்து கொண்டிருக்கிற மழையில் நனைய விட்டு கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து சில வினாடிகளிலே நிஜ உலகத்திற்கு வந்து அவனின் இரு கால்களை பிடித்து இழுத்து பார்த்தாள். அவளால் முடியவில்லை. 

பின் இரண்டு கால்களையும் இரு கைகளால் பிடித்து சிறு சிறு அசைவாக அவனை உள்ளே இழுத்தாள். அவனை பிடித்து இழுக்கும் போது வாயில் எதை எதையோ சொல்லி புலம்பி கொண்டிருந்தான். அப்படி ஒரு தடவை இழுக்கும் போது அவன் காலால் என்னை உதைத்து தள்ளினான். என்னை எட்டி உதைத்து தள்ளி விட பிறகும் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. அது ஏன் என்று என் மூளைக்கோ அல்லது மனதுக்கோ தெரியவில்லை. அவன் கால்களை விடாமல் பிடித்து இழுத்து கொண்டு வந்து  ஹாலில் (ஒரே ஒரு அறை தான்) இருந்த கட்டில் முன் போட்டேன். 

அவனின் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்றே தோன்றியது. ஏன் தோன்றியது? எதற்காக தோன்றியது?என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் என் மனதில் தோன்றியது. இப்போது அவன் கட்டிலின் முன் மழை நீரில் நனைந்த உடம்புடன் காலை லேசாக விரித்து நேராக படுத்து இருந்தான். அவனுக்கு முன்னால் இருந்த கட்டிலின் உட்காந்து அவனையே உற்று பார்த்தேன். இதுவரை எந்த ஒரு ஆணையும் நான் இப்படி ரசித்து பார்த்தது இல்லை. அதற்கு காரணம் என் வாழ்க்கை மற்றும் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் தான். 

இவன் அதை எல்லாம் எந்த ஒரு பார்வையும் பார்க்காமல், பேச்சும் பேசாமல் தவிடு பொடி ஆக்கிவிட்டான். என்னை பார்க்காமல் பேசாமலே என் மனதை ஏதோ செய்துவிட்டான். என்னையும் அறியாமல் அவனின் மீது ஒரு இனம் புரியா அன்பு, ஆசை, மயக்கம், ஏன் காதல் கூட வந்துவிட்டது என்று சொல்லலாம். உனக்கு எல்லாம் காதல் செய்ய அருகதை உண்டா? என்று என் ஒரு பக்கம் மனம் என்னை கேட்டது சூடுகோலால் சுட்டது போல் இருந்தது. இருந்தாலும் எந்த ஒரு பெண்ணும் காதல் செய்ய உரிமை உண்டு. இரு மனங்கள் இணைந்தால் தான் காதல் என்றில்லை. ஒருவனை மனதால் நினைத்து அவனுடனே மனதில் வாழ்வதும் ஒரு வகை காதல் தான் என்று மற்றொரு பக்க மனம் சூடிட்ட மனதிற்கு மருந்தாக இருந்தது. 

என்ன தான் என் மனம் இருவாறாக சொன்னாலும் அவனை ஒருமனதாக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்பது எனக்கே புரிய ஆரம்பித்திருந்தது. என் அருகில் இருக்கும் இந்த சில மணி நேரங்களில் மட்டும் தான் இவனை பார்க்க முடியும்.. ரசிக்க முடியும். அதன் பின் வானத்தில் சில மணிதுளிகள்  இருக்கும் வானவில்லை போல மறைந்து விடுவான். வானத்தில் இருக்கும் வானவில் சில மணிதுளிகளில் மறைந்துவிடும் என்பதை தெரிந்தும் அதை நாம் ரசிக்க தவறுவது இல்லை. இவன் மீது இருந்த என் ரசிப்பும் அது மாதிரி தான். என் வாழ்க்கையில் வந்த வானவில்லாக தான் தெரிந்தான் இந்த கள் அருந்திய கள்வன். 

அவனை கட்டிலில் உட்காந்து பார்த்திட்டு இருந்த நான், கட்டிலில் குப்புறபடுத்து அவனின் முகத்தை உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். என் மனதை அவன் கவர காரணம் என்று நான் நினைத்தது முகத்தில் தெரிந்த பல நாட்கள் சோகம் தான். இதுவரை என் வாழ்வில் பார்த்த ஆண்களில் மிகவும் வித்தியாசமாவனாக தெரிந்தான். ஏன்னென்றால் நான் பார்த்த ஆண்கள் சில நிமிடங்கள் ஆடிவிட்டு தான் அமைதியாக ஓய்வில் இருப்பார்கள். ஆனால் இவனோ அமைதியாக ஓய்வில் இருக்கும் போதே என் மனதை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறான். அவனின் வாய் இன்னும் ஏதோ ஒரு பெயரை முனுமுனுத்து தான் கொண்டிருக்கிறது. அதை கூட கேட்க மனமில்லாமல் அவனின் முகத்தையே விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

அப்போது என் மனதில் தோன்றிய ஒரு சில வரிகள். 

"மனித உடல் ஆடியடங்கும் இவ்வுலகில் - நீ
ஆடிக் கொண்டே வந்து அடைகலமானாய் - என் வீட்டினில்(மனதினில்)
அன்பாக பண்பாக பாசமாக பேசவில்லை -இருந்தும்
பக்குவமாக இருந்த என் மனதை - நீ
பரிவு கூட காட்டாமல் களவாடினாய் 
கள் அருந்திய என்மன கள்வனே". 

பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய சில நிமிட சந்தோஷத்திற்காக பெண்களை எதிர்பார்பார்கள். ஆனால் இவனோ எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எதுவும் செய்யாமல் சந்தோஷத்தை (மனதளவில்) கொடுத்துக் கொண்டிருக்கிறான். சில நிமிட சந்தோஷத்திற்க்காக ஆடிவிட்டு (உடலுறவு கொண்டு) செல்லும் சில ஆண்களுக்கு மத்தியில் இவன் ஒரு பெயரை முனுமுனுத்து கொண்டு அதற்காக மனதோடு போர்(ஆ)டி கொண்டிருக்கிறான். இப்படி பட்ட ஒரு ஆணை என் வாழ்நாளில் இப்போது தான் அதுவும் இந்த நிலையில் சந்திக்கிறேன். 

நான் இன்னும் அவன் முகத்தையே தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனின் முகத்தை பார்க்க பார்க்க என் மனம் குதுகலத்தில் குதித்து ஆடியது. இதுவரை பல ஆண்களை என் வாழ்க்கையில் பார்த்து, சந்தித்து, எதிர் கொண்டிருந்தாலும் அவர்கள் எல்லாம் குடுக்காத சந்தோஷத்தை இவன் கேட்காமலே குடுத்துக் கொண்டிருக்கிறான். அப்படி என்ன மாயம் தான் செய்தான் என்று தெரியவில்லை இந்த மாய கள்வன். நான் படுத்திருந்த கட்டிலை இன்னும் முன்புறம் இழுத்து போட்டு  இன்னும் அருகில்  அவனின் முகத்தை பார்த்து ரசிக்க தொடங்கினேன். 

அவன் தலையில் இருந்த நீளமாக இருந்த டை அடிக்காத கருத்த முடிகள், பல நாட்கள் சோகம் அப்பி இருந்த முகம், ஏதோ ஒரு பெயரை அவனுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு முனுமுனுத்து கொண்டிருந்த வாய், எந்த வித ஆர்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருக்கும் உடல், அந்த உடலில் அவனின் மூச்சுக்காற்றுக்கு ஏற்றவாறு ஏறி இறங்கும் மார்பு, போட்டு இருந்த சட்டையில் மேலே மாட்டாத இரண்டு பட்டன் இடைவெளியில் தெரிந்த மார்பின் மச்சம், மேலே ஏறி இருந்த சட்டையின் இடைவெளியில் தெரிந்த சிவந்த வயிற்றின் மேல் தொப்புளை சுற்றியிருந்த சிறுசிறு பூனை முடிகள், கைகள் முழுவதும் வளர்ந்து இருந்த மெல்லிய நீளமாக சிறுசிறு முடிகள் எல்லாம் அவனை அழகான ஆண்மகன் என்பதை அடையாளப்படுத்தியது என்னையும், என் மனதையும் பொறுத்த வரையில்...

என் மனதுக்கு பிடித்திருந்த அவனின் உடலை தொட்டு தழுவி ஆராதிக்க ஆசை தான். ஆனால் இந்த பிறவியில் அது முடியுமா? அதற்கான புண்ணியம் எதுவும் போன ஜென்மத்தில் செய்து இருக்கிறேனா? என்று தெரியவில்லை. அவனின் நெற்றியில் இருந்த முடிகற்றையை ஒதுக்கி நெற்றியிலிருந்து உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அணுஅணுவாக முத்தமிட ஆசையாக தான் இருந்தது. முனுமுனுத்து கொண்டு இருந்த அந்த உதட்டின் அழகை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சிகரெட் பிடித்து ரோஸ் கலரில் மாறி இருந்த அவனின் உதட்டில் இருந்த மழை நீர்த்துளிகள், ரோஜா இதழில் நீர் கோர்த்தது போல், பல துளிகள் இருந்தன. 

காற்று, வெளியில் மழை மேகங்களை கலைத்து விட முயன்றுக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது இடி மின்னல் கூட குளிர்ந்த காற்றும் வீசிக் கொண்டிருந்தது. அவனின் உடலின் மீது குளிர்ந்த காற்று பட்டதும் கையிலிருந்த முடிகள் மலர்ந்து மேலெழுந்தது. உடலின் பட்ட குளிர்ந்த காற்றினால் உடல் சிறிது நடுக்கம் குடுக்க ஆரம்பித்தது. கைகள் தானாக உடலின் குறுக்காக வந்து குளிர்ந்த காற்றை தடுக்க முயன்றது. கால்களும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தன. அதிக காற்றினால் அவனின் உடல் நடுக்க ஆரம்பித்தது. அவனை அப்படியே விடுவதற்கும் மனம் வரவில்லை. அவனுக்கு உதவி செய்தால் ஏதாவது நினைத்துக் கொள்வானோ என்ற பயமும் இருந்தது. 

சிறிது யோசனைக்கு  பிறகு...

கடைசியில் பயத்தை மனம் வென்றது. என்னை தவறாக நினைத்தாலும் பரவாயில்லை. உதவி செய்த எல்லோரையும் இந்த சமூகம் அப்படி தானே கேவலமாக பேசுகிறது. என் மனதை கொள்ளையடித்த கள்வனுக்கு உதவி செய்த ஆத்ம திருப்தியாவது கிடைக்கட்டும் முடிவு செய்து பாதி மூடியிருந்த கதவை முழுவதுமாக மூடினேன். ஒரு துண்டை எடுத்து அவன் தலையை என் மடியில் வைத்து தலை, முகத்தில் இருந்த ஈரத்தை துடைத்தேன். அவன் முகத்தில் இருந்த பலநாட்கள் எடுக்காத நீண்ட நீண்ட முடிகள் முட்களாக கையில் குத்தினாலும் அதுவும் ஒருவித சுகமாக தான் தெரிந்தது. முகத்தில் இருந்த ஈரத்தை துடைத்து பிறகு என்னிடம் இருந்த கவர்மெண்டில் குடுத்த டேபிள் ஃபேனை போட்டு அவன் முகத்திற்கு நேராக வைத்தேன். அந்த காற்று பட்டு முடிகள் மேல் நோக்கி அசைந்தாடின. 

அவன் போட்டு இருந்த ஈர உடையினால் அவன் இன்னும் குளிரில் நடுங்கி கொண்டிருந்தான். அவன் போட்டு இருந்த சட்டைப்பையில் இருந்த பணம், மொபைல் எல்லாம் எடுத்து அவனுக்கு பக்கத்திலே ஓரமாக வைத்தேன். சட்டையில் போடாமல் மீதியிருந்த இரண்டு, மூன்று பட்டன்களை கலட்டி அவனின் ஈரமான பூனைமுடிகள் இருந்த மார்ப்பை கையால் தொட்டு தடவி பார்த்தேன். முதன் முறையாக ஒரு மனத்திற்கு பிடித்த ஆணின் மார்ப்பை முழுமனதோடு தொட்டு தடவி பார்க்கிறேன். அப்போது கிடைத்த அந்த ஒரு வித அல்ப சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவனின் உடலிலும் மார்ப்பிலும் இருந்த ஈரத்தை துடைத்து போட்டு இருந்த சட்டை கலட்டி உள்ளே இருந்த கொடியில் விரித்து காய போட்டேன். அவனின் மார்பில் சில வினாடிகள் முகத்தை வைத்து படுத்ததற்கே பூர்வ ஜென்ம பலனை அடைந்துவிட்டது போல் உணர்ந்தேன். அவனின் மார்பின் மத்தியில் இதழ் பதிக்கும் போது அவன் முனுமுனுத்து கொண்டிருந்த பெயர் என் காதில் வந்து கேட்டது.. அவன் வாய் விடாமல் "அகல்யா" என்ற பெயரை தான் இவ்வளவு நேரம் முனுமுனுத்து கொண்டிருந்திருக்கிறது. 

யார் இந்த அகல்யா? 

அவள் இனியும் வருவாள்...
[+] 2 users Like SamarSaran's post
Like Reply


Messages In This Thread
RE: அவளும் பெண் தானே - by SamarSaran - 23-08-2022, 09:31 AM



Users browsing this thread: 6 Guest(s)