20-08-2022, 06:55 PM
(20-08-2022, 05:36 PM)0123456 Wrote: அவரது இயற்பெயர் மௌனிகா சுகன்யா என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந்த லோகத்தில் மிகச்சிறந்த கதைகளைப் படைத்து அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளார். இந்த நேரத்தில் எனக்கும் அவருக்கும் உள்ள சிறு தொடர்பை விவரிக்க விரும்புகிறேன்.
நான் இந்த ஒரு வருடத்தில் கொரானாவின் காரணமாக நிறைய உறவினர்கள் நண்பர்களை இழந்துள்ளேன். அவர்களுக்காக கண்ணீர் சிந்தி உள்ளேன். சமூக ஊடகங்களில் அவர்களுக்காக வருத்தங்களை பதிவிட்டுள்ளேன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும் இருக்கிறேன். ஆனால் முகம் தெரியாத ஒருவருக்காக நான் இப்பொழுது ஒரு இரங்கல் செய்தி எழுதி உள்ளேன். முகம் தெரியாத ஒருவரின் இழப்பும் என்னை மிகவும் பாதித்துள்ளது என்றால் அது மௌனியின் இழப்பு ஒன்று தான். நான் இந்த தளத்தில் 2019 ல் இணைந்தவுடன் தலைவாசலில் ஒரு திரியைப் படித்தேன். _.த்தின் டாப் டென் எழுத்தாளர்கள் என்ற அந்தத் திரியை மௌனி தான் உருவாக்கியிருந்தார். அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் அவரின் பெயரையும் சுட்டிக்காட்டி இருந்தார்கள். அதிலிருந்த கதைகள் அனைத்தும் தங்க வாசல் பகுதியில் இருந்த காரணத்தால் என்னால் அப்போது அந்தக் கதைகளை படிக்க முடியவில்லை. தங்க வாசல் செல்ல கதை எழுதினால் மட்டுமே முடியும் என்ற நிலையில் நானும் கதை எழுத ஆரம்பித்தேன். 2019 பிப்ரவரி மாதம் சிறந்த கதைப் போட்டியில் நான் எழுதிய கதை முதன்முதலாக என் அன்புக்குரிய எழுத்தாளர் மௌனி எழுதிய கதையோடு வாக்கெடுப்புக்கு வந்தது. _.த்தில் இணைந்தவுடன் ஒரு போட்டியில் கலந்து கொண்டது எனக்கு பெருமிதமாக இருந்தது. ஜாம்பவான் எழுத்தாளரோடு எனது கதை வாக்கெடுப்பில் இருப்பதைக் கண்டு உண்மையிலேயே நான் புல்லரித்துப் போனேன். அதிர்ஷ்டவசமாக எனது கதை முதலிடத்தைப் பெற்றது. அவரது கதை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. என்னால் இதை நம்பவே முடியவில்லை. என் கதை வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு ஜாம்பவான் எழுத்தாளர் வெற்றிவாய்ப்பை இழந்தது எனக்கு ஒரு நெருடலை கொடுத்தது. அவர் எனது கதைகளுக்கு அதிகம் பின்னூட்டம் எழுதவில்லை என்றாலும் தனிமடலில் கதையைப் பாராட்டுவார். நானும் இந்த தளத்திற்கு வந்த பிறகு அவர் புதிதாக எழுதிய பெரும்பாலான கதைகளைப் படித்து கருத்துக்களைப் பதிவிட்டு உள்ளேன். அவர் கடந்த இரண்டு வருடமாகவே தனது உடல் உபாதைகளை பற்றி இங்கே பதிவிட்டு வந்தார். கடைசியில் கொரானா என்னும் கொள்ளை நோயால் அவர் நம்மை விட்டு சென்று விட்டா
சுவாரசியமாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது. நல்ல எழுத்துக்கு என்றும் மதிப்பிருக்கும்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்