Romance மாங்கல்யம் தந்துனானே
#25
Heart 
தவறுதுதலாக முன்கூட்டியே ஆறுவது பதிவு  போடா பட்டுள்ளது
 அடுத்த பதிவு ஐந்து போட்டு பட்டுள்ளது அதை படித்து
விட்டு இந்த பதிவை படிக்கவும் 
நன்றி 

எபிஸோட் - 6

என்னுடைய பிறந்தநாள் எப்போதுமே எனக்கு பெரிய விஷயமாக தோன்றியது இல்லை. எங்கள் வீட்டிலும் பெரிதான கொண்டாட்டங்கள் இராது. சிலநேரங்களில் மறந்து கூட போயிருக்கிறேன்.. இதோ இன்று மாதிரி..!! அம்மா மட்டும் ஞாபகம் வைத்திருப்பாள். காலையில் ஒரு ஸ்பெஷல் முத்தம் தருவாள். அன்று சமையலிலும் ஸ்பெஷலாக ஒரு இனிப்பு சேர்த்துக் கொள்வாள். மற்றபடி புத்தாடை, பரிசு, கேக் நறுக்குதல் என எதுவும் கிடையாது. அப்படித்தான் எனது இத்தனை வருட பிறந்த நாட்களும் சென்றன.

அதே மாதிரி என் கணவரும் என் பிறந்தநாளை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்வார் என்று எப்படி நான் எதிர்பார்த்திருக்க முடியும்? காட்டிவிட்டார் அல்லவா..? அவருக்காக நான் பிறந்த நாள், அவருக்கு எவ்வளவு முக்கியமானது என்று காட்டிவிட்டார் அல்லவா..? அதுவும் இத்தனை பேரை அழைத்து வந்து.. இனிப்பான அதிர்ச்சி கொடுத்து..!! அறிமுகம் இல்லாத அந்த நல்லவர்கள், அகத்திலிருந்து வாழ்த்து சொல்லி..!! நிச்சயமாய் இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாட்களில் ஒன்றாக மாறப் போகிறது..!!

[Image: 01IIK.jpg]
அவர்கள் எல்லாம் செல்ல ஒரு அரை மணி நேரம் ஆனது. கேக் கட் செய்து.. அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டு.. பின்னர் தனித்தனியாக ஒவ்வொருவரும் எனக்கு வாழ்த்து சொல்லி..!! அவர்கள் அந்தப்பக்கம் சென்றதும், நான் இந்தப்பக்கம் அசோக்கை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டேன். அவர் முகமெல்லாம் ஆவேசமாக முத்தமிட்டேன்.. என் கண்களில் வழியும் கண்ணீரோடு..!! அவர்தான் என்னை இறுக்கி அணைத்து என் ஆவேசத்தை கட்டுப்படுத்தினார். என் முதுகு தடவி ஆசுவாசப் படுத்தினார். முத்தமிட்டு சாந்தப் படுத்தினார். நான் இரண்டு கைகளையும் அவருடைய தோளில் மாலையாக போட்டுக் கொண்டு, ஏக்கமாக சொன்னேன்.

"என்னை பெட்டுக்கு தூக்கிட்டு போங்கப்பா..!!"

அவர் என்னை அலாக்காக அள்ளிக்கொண்டார். எங்களுடைய முகங்கள் ரெண்டும் காதலாக, ஆசையாக பார்த்துக் கொள்ள, உள்ளே தூக்கி சென்றார். மென்மையாக மெத்தையில் கிடத்தினார். எனது கன்னம் தடவி, என் முகத்தையே கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்தவர், குனிந்து என் உதடுகளில் மென்மையாக முத்தம் பதித்தார். பின்பு என் உதடுகளை தவிக்கவிட்டு, தன் உதடுகளை விலக்கிக் கொண்டார்.

"ஸாரிப்பா..!!" என்றேன் நான் சத்தமே வெளிவராத குரலில்.

"ஸாரியா..? எதுக்கு..?" அவர் சற்றே குறும்பான குரலில் கேட்டார்.

"எதுக்குன்லாம் சொல்ல மாட்டேன்.. ஸாரி.. அவ்ளோதான்..!!"

அவர் இப்போது அழகாக புன்னகைத்தார். என் கூந்தலை தடவியபடியே இதமான குரலில் சொன்னார்."நீ சொல்லாட்டாலும்.. எதுக்குன்னு எனக்கு தெரியும் பவி..!!"

"ம்ம்ம்... என் மேல கோவமா..?"

"ச்சேச்சே.. கோவம்லாம் இல்லைடா.."

"அப்புறம்..?"

"ம்ம்ம்ம்.. கொஞ்சம் வருத்தமும்.. கொஞ்சம் சந்தோஷமும்..!! ஃபிஃப்டி.. ஃபிஃப்டி..!!"


"ஹ்ஹா.. அதெப்படி ஒரே நேரத்துல ரெண்டும் இருக்க முடியும்..?"

"எனக்கே புரியலை பவி.. ஆனா.. அந்த மாதிரி ஒரு ஃபீலிங்தான் இப்போ எனக்குள்ள இருக்கு..!!"

"ம்ம்ம்ம்.. எனக்கு புரியுது..!! லவ் யூப்பா.."

"லவ் யூ பவி..!!"

அவர் சொல்லிக்கொண்டே என் நெற்றியில் இதழ்கள் பதித்தார். நான் கொஞ்ச நேரம் அவருடைய அணைப்பில் கிடைத்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு அமைதியாக கிடந்தேன். அப்புறம் திடீரென மவுனத்தை குலைத்தவாறு சொன்னேன்.

"இன்னைக்கு எனக்கு பர்த்டேன்றதே மறந்துடுச்சு தெரியுமா..?"

"ஹ்ஹா.. உனக்கு எப்படி அதுலாம் ஞாபகம் இருக்கும்..? உனக்குத்தான் வேற என்னென்னவோ நெனைப்பு மனசுக்குள்ள..!! ஆனா.. எனக்கு நல்லா ஞாபகம் இருந்தது..!!"

"ம்ம்ம்.."

"மொதல்ல நான் மட்டுந்தான் ஏதாவது பண்ணனும்னு நெனச்சிருந்தேன்.. ஆனா.. லக்கிலி.. லாவண்யா வந்து மாட்டுனா..!! அவளோட ஹெல்ப்பால.. நல்லாவே ஜமாய்க்க முடிஞ்சது..!!"

"நீங்கதான் அலார்ம் வச்சுட்டு போனீங்களா..?"

"ஹ்ஹ்ஹா.. ஆமாம்.. ஆக்சுவலா நாங்க வேற மாதிரி ப்ளான் பண்ணிருந்தோம்..!! ஆனா.. நீதான்.. மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு.. இழுத்து போத்தி படுத்துட்டியே..? அப்புறந்தான்.. இந்த அலார்ம் ப்ளான்.. பரவால.. இதுவும் சக்சஸ்தான்..!!"

"ம்ம்.. அந்த லாவண்யா.. நல்ல பொண்ணுல..?"

"ம்ம்.. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு..!!"

அவர் பெருமையாக சொல்ல, இப்போது நான் அவருடைய கண்களை குறுகுறுவென பார்த்தபடி கேட்டேன்.

"இன்னும் இது மாதிரி எத்தனை நல்ல பொண்ணுகளை உங்களுக்கு தெரியும்..??"

"ஹ்ஹ்ஹா.. அதுலாம் நான் சொல்ல மாட்டேன்.."

"ஏன்..?"

"சூனியம் வச்சுக்கிறது சரி.. அதுக்காக கைக்காசையும் செலவழிக்க சொன்னா எப்படி..??"

"ஹ்ஹ்ஹ்ஹா... ம்ம்ம்ம்.. ஸாரிப்பா..!!"

"ஓ..!! இன்னொரு ஸாரியா..? இந்த ஸாரி எதுக்கு..?"

"நீங்க தொட்டப்போ.. கையை தட்டிவிட்டதுக்கு..!! எந்த பொண்டாட்டியும் பண்ணக்கூடாத காரியத்தை பண்ணிட்டேன்.. ஸாரிப்பா..!! உங்க கையை குடுங்க.." சொன்னவள் அவருடைய வலது கையை எடுத்து என் இடது மார்பில் வைத்துக் கொண்டேன். அழுத்தமாக..!!

"ம்ம்.. கையை வச்சாச்சு.. அப்புறம்..?" அவர் குறும்பாக கண்சிமிட்ட,

"அப்புறம் என்ன..? அப்புறம்லாம் ஒண்ணுல்ல.. அவ்ளோதான்..!!" நானும் குறும்பாக சொன்னேன்.

"அடிப்பாவி.. உன் பர்த்டே அதுவுமா.. இவ்ளோ பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து.. உன்னை சந்தோஷப் படுத்திருக்கேன்.. இவ்ளோதானா..?"

"வேற என்ன வேணும்..?

"கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல எனக்கு நிறைவேறாத ஆசை ஏதாவது நிறைவேத்தி வைக்கலாம்ல..?"

"ம்ம்ம்ம்... நீங்க என் உடம்புல ஏதாவது கண்ட எடத்துல கிஸ் பண்ணனும்னு ஆசைப்படுவீங்க..? அதெல்லாம் என்னால முடியாது..!!"

"ஹ்ஹ்ஹ்ஹா... சரி.. அப்போ இன்னொரு ஆசையை நிறைவேத்தி வை.."

"என்ன..?"

"என்னை ஒருதடவை போடான்னு சொல்லு.."

"போங்கப்பா.. நான் மாட்டேன்..!!"
ப்ச்.. என்ன நீ..? முத்தத்துக்கு முடியாதுன்னு சொல்ற.. போடா சொல்ல சொன்னா.. போங்கன்ற..?"
"ம்ம்.. போடான்லாம் சொல்ல மாட்டேன்.. வாடான்னு வேணா சொல்றேன்.." நான் கொஞ்சலாக சொல்ல அவர் புன்னகைத்தார்.

"ம்ம்.. சொல்லு..!!"

அவர் ஆர்வமாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, நான் தயங்கி தயங்கி வெட்கமாக சொன்னேன்.

"டேய்.. அசோக்.. வாடா..!!

"வாவ்..!!!!!!!!!!!!!!"

கத்திக்கொண்டே அசோக் என்னை கட்டியணைத்துக் கொண்டார். அவரை வாடா என்றழைத்த வாயை, அவருடைய உதடுகள் வந்து கவ்விக்கொண்டன. சர்ரென உறிஞ்சின..!! அப்புறம் ஒரு அரை மணி நேரத்துக்கு அங்கே எந்தவித பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை..!! எங்கள் செயல்கள் அதிகம் பேசின. 'இச்.. இச்..' என்ற முத்த சப்தமும், இன்பத்தில் விழைந்த முனகல் ஒலியும், இயக்கத்தின் அதிர்வு தாங்காத கட்டில் ஓசையுமே கேட்டுக் கொண்டிருந்தன. கொடைக்கானல் குளிர் எழுப்பிய காம வினாவிற்கு, எங்கள் இருவரது உடல்களும் உடைகள் உதறி.. விடைகள் தேடிக் கொண்டிருந்தன..!!

விடை கிடைத்தபோது, விண் விண்ணென எங்கள் உடல்களில் வலியெடுத்தது. அடித்துப்போட்ட மாதிரி களைப்பாய் இருந்தது. ஆடைகளை அள்ளிப் போர்த்தக் கூட தெம்பில்லாமல், ஒருவரை ஒருவர் ஆடையாக அணைத்துக் கொண்டோம். அவர் என் முதுகு தடவ, நான் அவருடைய மார்பு தேய்த்தேன். நான் எதோ சிந்தனையில் இருப்பதை உணர்ந்ததும் அவர்தான் கேட்டார்.

"என்ன பவி... எதோ யோசனைல இருக்குற..?"

"ஒண்ணுல்லப்பா.."

"இல்ல.. எதோ இருக்கு.. சொல்லு பவி.."

"உங்களுக்கு நான் அன்பரசி பத்தி சொல்லிருக்கேனா..?"

"யார் அது..?"

"என் பிரண்ட்..!!'

"ம்ஹூம்.. சொன்னது இல்லை.."

"சின்ன வயசுல இருந்தே பழக்கம்.. ரொம்ப க்ளோஸ்.. எங்க வீட்டுக்கு பக்கத்துலதான் அவ வீடு.. ஸ்கூல், காலேஜ்லாம் ஒன்னாத்தான் படிச்சோம்..!!"

"ம்ம்.."

"காலேஜ் படிக்கிறப்போ அவ ஒருத்தனை லவ் பண்ணினா.. மகேந்திரன் அவன் பேரு.."

"ம்ம்.."

"ஹ்ஹ.. அவங்க லவ்வுக்கு நான்லாம் நெறைய ஹெல்ப் பண்ணிருக்கேன்.. இவ கொடுக்குற லெட்டர் அவன்கிட்ட கொடுக்குறது.. அவன் கொடுக்குற லெட்டர் இவகிட்ட கொடுக்குறது.. இவ வீட்டுல அவங்க பேசிட்டு இருக்குறப்போ ஆள் வருதான்னு பாக்குறது.."

"ம்ம்.. இன்ரஸ்டிங்..!!"

"ரெண்டு பேர் வீட்டுலயும் ஒத்துக்கலை.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. சென்னைலதான் குடித்தனம் நடத்துனாங்க.."

"ஓஹோ..?"

"அப்புறம்.. அவங்களுக்கு கொழந்தை பொறந்தப்புறம்.. ஓரளவு அவங்க வீட்டுல கொஞ்சம் சமாதானம் ஆனாங்க.."

"ம்ம்.."

"அவளுக்கு ஒரு தங்கச்சி இருந்தா.. கலையரசின்னு பேரு.. ஒரு தடவை அவளுக்கு ஆக்சிடன்ட் ஆகி.. கால்ல ஃப்ராக்சர் ஆகி.. சென்னைலதான் ஒரு ஹாஸ்பிட்டல்ல வச்சு பாத்தாங்க.."

"ஓ.."

"கால் சரியாக நாலு மாசம் ஆகும்.. ட்ரீட்மன்ட் எடுக்க வசதியா இருக்கும்னு.. என் பிரண்ட்.. அவ தங்கச்சியை அவ வீட்டுலயே வச்சு பாத்துக்கிட்டா..!! நாலு மாசமும் ஆச்சு.. அவளுக்கு காலும் சரியாச்சு.. காலுல தெம்பு வந்ததும்.. ஓடனும் போல அவளுக்கு ஆசை வந்துடுச்சு போல.. அதுல ஏதும் தப்பு இல்லை..!! ஆனா.. ஓடுனவ.. அக்கா புருஷனையும் இழுத்துட்டு ஓடிட்டா..!!"

"காட்..!!"


"இப்போ அன்பரசி கைல கொழந்தையோட.. வீடு வீடா ஊதுவத்தி பாக்கெட் போட்டு பொழப்பு நடத்திட்டு இருக்குறா..!!"

சொல்லிவிட்டு, நான் கண்களை இறுக மூடியபடி அவருடைய மார்பில் புதைந்து கொண்டேன். அவர் கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. அமைதியாக என் கூந்தலை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்புறம் மெல்லிய குரலில் கேட்டார்.

"ஸோ.. அந்த அன்பரசிக்கு நடந்ததுதான்.. உன் பயத்துக்கு காரணமா..?"

"ம்ம்.. ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ப்பா.. அவளோட சந்தோஷத்தையும்.. அந்த சந்தோஷமே மீள முடியாத சாபமா மாறுனதையும்.. பக்கத்துல இருந்து பாத்திருக்கேன்..!!"

"ஹ்ஹ்ஹா.. அப்போ.. அந்த மகேந்திரன் மாதிரி மட்டமான ஆளா என்னை நெனைக்கிற.. இல்ல..?" அவர் ஏளனமான குரலில் கேட்க,

"இல்லப்பா.. கலையரசி மாதிரி கேவலமான பொண்ணுங்களும் இருக்காங்கன்னு சொல்ல வர்றேன்..!!"

அவ்வளவுதான்..!! அவர் பட்டென அமைதியானார். அவர் கூறியதற்கும், நான் கூறியதற்கும் என்ன வித்தியாசம் என்று தீவிரமாக யோசித்தார் போல தெரிந்தது. அந்த வித்தியாசம் புரிந்தால் என்னுடைய மனநிலையையையும் அவரால் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்று எனக்கு தோன்றியது. புரிந்து கொண்டாரா என எனக்கு புரியவில்லை. ஆனால் புரிந்த மாதிரியான குரலில் சொன்னார்.

"ம்ம்.. புரியுது பவி.. இனிமே.. உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.. சரியா..?"

"தேங்க்ஸ்ப்பா..!!" 

நான் சொல்ல, அவர் என் நெற்றியில் முத்தமிட்டார். பின்பு சற்றே கேலியான குரலில் சொன்னார்.

"ஓகே.. நீ ஒரு மொக்கை ப்ளாஷ்பேக் சொன்னேல..? நானும் ஒரு மொக்கை ப்ளாஷ்பேக் சொல்றேன்..!! எது பெஸ்ட் மொக்கைன்னு பாக்கலாம்..!!"

"ஹ்ஹஹ்ஹ்ஹா... சொல்லுங்க..!!" என்றேன் நானும், இப்போது மனம் இலகுவானவளாய்.

"நான் சின்னப் பையனா இருக்குறப்போ.. எனக்கு வெவரம் தெரிய ஆரம்பிச்ச புதுசுல.. அப்பாவுக்கு கோயம்புத்தூர் பக்கம் ட்ரான்ஸ்ஃபர் ஆயிடுச்சு.. நாங்கலாம் மதுரைலதான் இருந்தோம்..!! அப்பா மாசம் ஒரு தடவை.. ரெண்டு தடவை வந்துட்டு போவாரு..!!"

"ம்ம்.."

"மிச்ச நாள்லாம்.. வீட்டுல அம்மா.. அக்கா.. குட்டித்தங்கச்சி.. பாட்டின்னு எல்லாருமே பொண்ணுகதான்.. நான் மட்டுந்தான் பையன்..!!"


"ஓஹோ..?"


"அதுமில்லாம.. அப்பாவுக்கு எக்கச்சக்கமா அக்கா, தங்கச்சி.. எல்லா அத்தைங்களுக்கும் எக்கச்சக்கமா பொண்ணுக..!! இப்டி.. பொண்ணுக மத்திலதான் நான் வளர்ந்ததே..!!"

"கண்ணன் மாதிரி..?"

"ஹ்ஹ்ஹ்ஹா.. ஆமாம்..!! அதனாலையோ என்னவோ.. பொண்ணுகளுக்கும் எனக்கும் அவ்ளோ ராசி..!! எக்கச்சக்கமான பொண்ணுக பிரண்ட்ஸ்..!! எல்லாம் மொய்க்கிறாங்க.. நான் என்ன பண்றது..?"

"ம்ம்ம்.. என்ன பண்றதா..? அப்டியே போட்டன்னா..? கல்யாணத்துக்கு முன்னாடி எப்டி வேணா இருந்துட்டு போகட்டும்.. இப்போத்தான் நான் வந்துட்டேன்ல..? இனிமே நான் மட்டும் போதும் உங்களுக்கு..!!"

நான் பொய்க்கோபத்துடன் கையை உயர்த்த, அவரும் போலியாக ஒரு பயத்தை வெளிப்படுத்தினார். அப்புறம் அப்படியே என்னை வாரி அவருடைய மார்புடன் அணைத்துக் கொண்டார்.

அடுத்த நாள் காலை கொடைக்கானலில் இருந்து மதுரை கிளம்பினோம். அதற்கு அடுத்த நாள் இரவு, மதுரையிலிருந்து அனைவரும் இரண்டு காரில் சென்னை கிளம்பினோம். அதிகாலை செங்கல்பட்டு சென்று அம்மாவையும் அப்பாவையும் பிக்கப் செய்து கொண்டு, ஏழு, எட்டு மணி வாக்கில் சென்னை சேர்ந்தோம்.

புதுவீட்டில் பால்காய்ச்சி குடியேறினோம். வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரட்டைப் படுக்கை அறைகள், ஹால், கிச்சன், பூஜை அறை கொண்ட குட்டியான.. ஆனால் அழகான ஃப்ளாட்..!! எங்கள் இரண்டு வீட்டினரும், இரண்டு நாட்கள் எங்களுடன் தங்கி இருந்துவிட்டு, வீட்டை ஓரளவு செட்டில் செய்து கொடுத்துவிட்டு, இனி உங்கள் பாடு என்று எங்களை தனியாக விட்டுச் சென்றார்கள். 

செங்கல்பட்டுக்கு அருகிலான கிராமத்தில் வளர்ந்த நான் சென்னை சூழலுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வது சற்று சிரமமாகவே இருந்தது. அடுத்த வீட்டில் அணுகுண்டு வெடித்தாலும் அசைந்து கொடுக்காத ஜனங்கள்..!! எங்கு ஓடுகிறோம், எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலேயே வாழ்வின் இன்பத்திலிருந்து வெகுதூரம் ஓடிவிட்ட கால்கள்..!! அப்பார்ட்மண்ட்ஸ் மாடியிலிருந்து இருந்து விழுந்த பிஸ்ஸா துணுக்கை, குடிசை வீட்டின் கூரையில் வைத்து கொத்தி தின்னும் காக்கைகள்..!! சாலை கடக்கும் முடவனுக்கு மரணபயம் ஏற்படுத்தி விரையும் மாருதி எஸ்டீம்கள்..!! கருணை இருந்தும், இரக்கம் இருந்தும், காட்டலாமா வேணாமா என குழம்பும் மனங்கள்..!! சென்னை..!!

ஆனால்.. நாங்கள் வசிக்கும் வீடு இருந்த சூழல் தேவலாம்..!! மொத்தம் மூன்றடுக்குகளும், ஆறே ஆறு ஃப்ளாட்களும் கொண்ட குட்டி அப்பார்ட்மண்ட்ஸ்..!! நாங்கள் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்..!! எங்களுக்கு எதிர் ப்ளாட்டில் ரேணுகா குடியிருந்தாள். அவளைப் பற்றி அப்புறம் சொல்கிறேன். மேலே இருந்த ஃப்ளாட்கள் ரெண்டிலும் இரண்டு பேச்சலர் க்ரூப்கள் தங்கியிருந்தன. கீழே.. ஒரு ப்ளாட்டில் ஒரு வயதான தம்பதி. இன்னொரு ப்ளாட்டில் அதிகம் வெளியே வராத அந்த நாற்பது வயது ஆள்..!! அனைவருமே பிரச்னை இல்லாத ஆட்களாகவே தெரிந்தார்கள்.. ரேணுகாவை தவிர..!!

சூழல் மட்டும் புதிதாய் தெரியவில்லை. சென்னை வந்த பிறகு அசோக்கும் கூட நிறைய விஷயங்களில் புதிதாக தெரிந்தார். மதுரையில் எட்டு மணி வரை எழ மறுப்பவர், சென்னையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து காபி கேட்டார். எதிலும் நிதானமான அசோக்கையே அது வரை பார்த்து வந்தவளுக்கு, சென்னை வந்ததும் பரபரவென பறக்கும் அசோக்கைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. மாமாவிடம் மதுரைத்தமிழில் பேசும் அசோக்கிற்கும், லேப்டாப் ஹெட்போனில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் அசோக்கிற்கும் நிறையவே வித்தியாசங்கள்..!!
[Image: 02Awd.jpg]
எனக்கு அன்றாட வேலைகளும் ஒன்றும் கடினமானதாக இருக்கவில்லை. காலையில் அவருக்கு முன்பே எழுந்து காபி போட்டுக் கொடுப்பதில் இருந்து ஆரம்பிக்கும்..!! அவருக்கு டிபன் செய்து கொடுத்து, மதிய சாப்பாடு ஹாட் பாக்ஸில் போட்டுக் கொடுத்து, அவரை ஆபீஸ் கிளப்பி விடும் வரை பரபரப்பாக இருக்கும். அப்புறம் இரவு அவர் வீடு திரும்பும் வரை, நேரம் நத்தை போல் நகரும்..!! கொஞ்ச நேரம் வீட்டு வேலைகள்.. கொஞ்ச நேரம் டிவி.. கொஞ்ச நேரம் தூக்கம்.. கொஞ்ச நேரம் பார்க்கில் நடப்பது.. என நேரம் கடத்துவேன்.

இரவு அவர் வருவதற்கு சிறிது நேரம் முன்பாக, என்னை அலங்கரித்துக் கொள்ள ஆரம்பிப்பேன். உடை மாற்றி.. முகம் கழுவி.. கூந்தல் வாரி.. கொஞ்சமாய் பவுடர் பூசி.. முடிந்தால் கொஞ்சம் மல்லிகை சூடி..!! அவர் வந்ததும் என் அலங்காரத்தை பார்த்து.. சில சமயம் வாரி அணைத்து முத்தமிடுவார்.. சில சமயம் முத்தத்தமிடுவதுடன், படுக்கையறைக்கு அள்ளிச்சென்று கட்டில் யுத்தம் புரிவார்.. சில சமயம் கண்டு கொள்ளாமலே கடந்து சென்று விடுவார்.. பாழாய்ப்போன ஆபீஸ் டென்ஷன்..!!

ம்ம்ம்ம்.. ரேணுகாவைப் பற்றி சொல்கிறேன் என்றேன் அல்லவா..? இப்போது சொல்கிறேன். ரேணுகா அசோக் வேலை பார்க்கும் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறாள். அவருக்கு பாஸ்.. ப்ராஜக்ட் மேனேஜர்..!! முப்பத்தைந்து வயதை நெருங்கியிருப்பாள் என்று நினைக்கிறேன். அவளுடைய கணவர் ஒரு வருடத்திற்கும் மேலாக அவளைப் பிரிந்து ஆன்சைட்டில் இருக்கிறார். இப்போதைக்கு இவள் மட்டுந்தான் இந்த ஃப்ளாட்டில் தனியாக தங்கியிருக்கிறாள். 

அவளுடைய உதவியால்தான் அசோக் இந்த ஃப்ளாட்டை பிடித்திருக்கிறார். புதுமனைவியோடு குடித்தனம் நடத்த வீடு தேடும் இம்சையை இவள் பொறுப்பில் விட்டுவிட்டார் போலிருக்கிறது. முதல் நாள் அவளிடம் சாவி வாங்க நாங்கள் இருவரும் சென்றபோதே என்னிடம், 'அசோக் மாதிரி ஒரு சூப்பரான ஆளை கட்டிக்க.. நீ கொடுத்து வச்சிருக்கணும்..' என்ற ரேணுகாவை.. பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு பிடிக்காமல் போனது. என் புருஷனை சூப்பர் ஆளு என்று சொல்வதற்கு இவள் யார்..??
அசோக்கும் அந்த ரேணுகாவும் சகஜமாய் சிரித்து பழகியது, எனக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரே ஆபீசில் நான்கைந்து வருடங்களாக வேலை பார்த்ததால் வந்த நெருக்கம். மிகவும் உரிமையுள்ளவள் மாதிரி எங்கள் வீட்டிற்குள் வளைய வருவாள். மிகவும் இயல்பாக அவரை தொட்டுப் பேசுவாள். சில சமயங்களில் நான் ஒருத்தி இருப்பதையே கண்டுகொள்ளாமல், இருவரும் ஆபீஸ் விஷயங்களை மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். எனக்கு அப்படியே பற்றிக் கொண்டு வரும்.


எல்லாவற்றையும் விட எனக்கு அதிக எரிச்சலை மூட்டியது.. ரேணுகாவிடம் இருந்த ஒரு பழக்கம்தான்..!! மிகவும் கெட்ட பழக்கமாக நான் கருதியது..!! அது.. அடிக்கடி அசோக்கையும் அவளுடைய கணவரையும் கம்பேர் செய்து அவள் பேசுவது..!! சில சம்பவங்களை சொல்கிறேன்.. நீங்களே புரிந்து கொள்வீர்கள்..!!

ஒருமுறை.. அவளை எங்கள் வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைத்திருந்தோம். அவள் வீட்டுக்குள் நுழையும் வேளையில், நானும் அசோக்கும் கிச்சனில் இருந்தோம். அவர் எனக்கு சமையலில் உதவிக் கொண்டிருந்தார். தொல்லை செய்து கொண்டிருந்தார் என்று கூட சொல்லலாம். உள்ளே வந்ததுமே மிகவும் ஆச்சரியமான குரலில் கேட்டாள்.

"ஹேய் அசோக்.. கிச்சன்ல என்ன பண்ணிட்டு இருக்குற..?"

"ஹ்ஹ்ஹா.. ச்சும்மா ரே..ரேணு.. பவிக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு.."

"வாவ்..!! பரவாலையே.. பொண்டாட்டிக்கு கிச்சன்லலாம் ஹெல்ப் பண்ணுவியா நீ..? கிரேட்..!! ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்.. என் வீட்டுக்காரரும்தான் இருக்காரே.. இதுவரை பசிக்காக கூட அவர் ஒருநாளும் கிச்சன் பக்கம் ஒதுங்குனது இல்ல..!! ஹ்ஹஹ்ஹ்ஹா...!!" 

எதோ பெரிய ஜோக் சொன்னமாதிரி அவள் சிரிக்க, 'ஆரம்பிச்சுட்டாளா..??' என நான் கடுப்பானேன். நான்தான் கடுப்பானேனே ஒழிய, அசோக் அவளுடன் சிரிப்பில் கலந்து கொண்டார். அப்புறம் அந்த ரேணுகாவும் கிச்சனுக்குள் நுழைந்து ஹெல்ப் செய்ய ஆரம்பித்தாள். எனக்கல்ல.. என் கணவருக்கு..!!!!! 

மூன்று பேரும் பேசிக்கொண்டே சமைத்து முடித்தோம். டைனிங் டேபிளில் எல்லாம் எடுத்து வைத்தேன். சாம்பார், ரசம், மோர், உருளைக்கிழங்கு பொரியல், பூசணிக்காய் கூட்டு, அப்பளம் என சாதாரண மதிய சமையல்தான்..!! அவர்களை அமர்ந்து சாப்பிட சொல்லிவிட்டு, நான்தான் இருவருக்கும் பரிமாறினேன். கொஞ்ச நேரம் அமைதியாக சாப்பிட்ட ரேணுகா, அப்புறம் அப்பளத்தை கடித்தவாறு ஆரம்பித்தாள்.

"பவி.. உன்னை ரொம்ப நாளா நான் ஒன்னு கேக்கனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.."

"என்ன..?"

"இன்னும் எத்தனை நாளைக்குத்தான்.. இப்டி வீட்டுல உக்காந்து அப்பளம் சுட்டுக்கிட்டு இருக்கப் போற..?"

"அப்புறம்..?"

"MCA படிச்சிருக்கேல..? நீயும் வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கலாம்ல..?"

"ஹ்ஹா.. அப்படி என்ன எங்களுக்கு இப்போ பணத்தட்டுப்பாடு வந்துடுச்சு..? ஒருவேளை நாளைப்பின்ன.. அப்டி பணத்தேவை வந்துச்சுனா.. நானும் வேலைக்கு போறேன்..!! அதுவரை அவர் மட்டும் வேலைக்கு போகட்டும்.. நான் அவரையும் வீட்டையும் பாத்துக்குறேன்.."

"அதுக்கில்ல பவி.. உனக்குன்னு ஒரு ஐடென்டிட்டி வேணாமா..?"

"என் ஹஸ்பண்டுக்கு நான் நல்ல வொய்ஃப்னு ஒரு ஐடன்டிட்டி இருந்தா போதும்க்கா எனக்கு..!!"

நான் மெல்லிய குரலில் சொல்லி முடிக்க, அசோக் சற்றே பெருமிதமாக என்னைப் பார்த்து புன்னகைத்தார். ரேணுகாவும் புன்னகைத்தாள். ஆனால் அந்த புன்னகையில் இருந்தது பெருமிதமா அல்லது கேலியா என்று எனக்கு புரியவில்லை. நான் முகத்தில் சலனமில்லாமல், அவளுடைய ப்ளேட்டை பார்த்தபடி சொன்னேன்.

"உருளைக்கெழங்கு நல்லாருக்காக்கா.. இன்னும் கொஞ்சம் வைக்கவா..?"

"ம்ம்.."


நான் பொரியல் அள்ளி அவளுடைய ப்ளேட்டில் வைக்க, அவள் எடுத்து ருசி பார்த்தாள்.
"நல்லாருக்கு.. ஆனா.." என்று தயங்கினாள்.

"என்ன..?"

"அசோக்குக்கு கொஞ்சம் காரசாரமா இருந்தாதான் புடிக்கும்ல.. இதுல சுத்தமா காரமே இல்ல..?"

"அவருக்கு புடிச்சா.. அப்டியே பண்ணிடனமா..?" நான் சற்றே எள்ளலான குரலில் கேட்டேன்.

"பின்ன..? புருஷனுக்கு எது பிடிச்சிருக்கோ.. அதை பண்றவதான நல்ல பொண்டாட்டி..??" அவளும் கேலியாகவே கேட்டாள்.

"புருஷனுக்கு எது புடிச்சிருக்குன்றதை விட.. எது நல்லதுன்னு பாத்து பண்றவதான் நல்ல பொண்டாட்டி..!!"

நான் பட்டென அப்படி சொன்னதும், ரேணுகா சற்றே திகைப்பாக என்னைப் பார்த்தாள். அப்புறம் எதுவும் பேச வாய் வராதவளாய், அமைதியாக அப்பளம் கடிக்க ஆரம்பித்தாள். அசோக் இப்போது இன்னும் பெருமிதமாக என்னைப் பார்த்தார். ஒருகையால் சோற்றையும், ஓரக்கண்ணால் என்னையும் விழுங்கியவாறு மெல்லிய குரலில் சொன்னார்.

"காரம் கொறைச்சலா இருந்தாலும்.. டேஸ்ட்ல ஒன்னும் கொறை இல்ல பவி..!!" 

இப்போது நானும் அவரை காதலாக பார்த்தேன். கண்களாலேயே அவருக்கு நன்றி சொன்னேன். அதை பார்த்த ரேணுகா அவரிடம்,

"பார்டா..!! பொண்டாட்டியை விட்டுக் கொடுக்க மாட்டேன்ற..? ம்ம்ம்.. நடத்து நடத்து..!! பவி கொடுத்து வச்சவதான்..!! எனக்கும் ஒருத்தர் வாச்சிருக்காரே.. நான் சமைச்சதை சாப்பிட்டு.. நல்லால்லைன்னு சொல்லக்கூட இதுவரை வாயைத் தெறந்தது இல்ல..!!"
[+] 1 user Likes I love you's post
Like Reply


Messages In This Thread
RE: மாங்கல்யம் தந்துனானே - by I love you - 18-08-2022, 07:32 AM



Users browsing this thread: 1 Guest(s)